குருவே சரணம்...
எல்லாம் வல்ல இறை அருள் எப்போதும் இடையறாது இமை காப்பது போல காத்து வருவதை நன்றியோடு நினைந்து நினைந்து வாழ வாழ்த்துக்கள்.
நமது இன்றைய நிலை என்பது நமது முன்னோர்கள் நமக்கு தந்திருக்கிறதும், நாம் செய்த வினைகளின் அளவுகளைப் பொறுத்தும் அமைகிறது...
நமது தியானத்தின் உயர்வு என்பது பொதுவாக சொல்லப்படும் போது, பல பிறப்புகளின் (எண்ணங்களின்) முடிவில் தான் எனினும், அதை அமைத்துத் தருவதில் குருவின் (உதவி) அருள் என்பது இன்றியமையாததாய் இருக்கிறது.
தியானத்தில் நீடித்து நிலைத்து நிற்கும் அளவிற்கு நாம் நமக்குத் தேவையான விசயங்களில் ஆழ்ந்த தொடர்பும், அந்த விசயத்தில் நுண்ணிய அறிவும் கிடைக்கும் போது, இது தியானத்தினால் தான் கிட்டியது என்பது என்று பார்ப்பது என்பதில் ஒரு விதத்தில் மனதின் முனைப்பு தான் முந்தி நிற்கிறது...
சமீபத்தில் எனக்கு சில வித அனுபவங்கள் ஏற்பட்டன...
அவை, என்னைச்சார்ந்த அலுவலக விசயங்களில்,முன் கூட்டியே சிக்கலான, வெளி நாட்டிலிருந்து வரப்போகிற சில தகவல்கள் எனக்குள் உதித்தன... என் உள்ளுணர்வு குறிப்பிட்ட அதே விதம் சிறிதும் பிசகாமல், வார்த்தைகள் வரை அப்படியே அந்த தகவல்கள் வந்தது...
எண்ணம் வந்த உடன், அந்த தகவலும் வந்தது... இதிலே மனதின் வலிமையான எண்ணத்தினால் செய்திகள் வரவழைக்கப்படும் சாத்தியம் உண்டா?
அல்லது குருவின் எச்சரிக்கை நமக்குள் இருந்தே தரப்படுகிறதா? என்று தோன்றிய போது, குருவின் எச்சரிக்கையாகவே இருக்கும் என்று உரைத்தது... நன்றிகளை குருவிற்கு ஒரு கணம் சொல்லிவிட்டு, அந்த தகவலில், ஆக வேண்டியவற்றை செய்ய முனைந்து முடித்து விட்டேன்...
இது மாதிரியான சில எண்ணங்களில், நமது மனோ வலிமையால் என்றே எடுத்துக்கொண்டாலும், அந்த மனோ வலிமை தவத்தின் ஆழத்தினால் ஏற்படுகிறதா என்ற என் என்னத்திற்கு நண்பர் சுந்தர மூர்த்தி பதில் சொன்னார்...
1. நிகழ்வதை முன் கூட்டியே தெரிந்து கொள்வது என்பது சீடனுக்குப் புரிந்து, அதை சமாளிப்பதற்கு ஏற்றவைகளில் இறங்கி விடுவது வரை, குருவின் அருள் மட்டுமே தான் காரணமாக இருக்கிறது... இதிலே சுடன் முனைப்பைத் தவிர்த்தல் நல்லது...
2. என்ன நடக்க வேண்டும் என்று சரணடைந்த சீடனுக்கு எந்த எண்ணமும் இருக்கவேண்டிய வாய்ப்பு இல்லை... ஆனால், அப்படி ஒரு சூழ்நிலை வருமாயின், அதை முன் கூட்டியே வான் அலைகளோடு கலந்து நின்று காக்கும் குரு, சீடனுக்கு எண்ணமாய் தந்து, சமாளிக்கும் செயல்களிலும் இறக்கி விடுவது வரை குருவின் சித்துக்கள் தாம்... என்றார்.
எனக்கு கண்களில் நீர் அரும்பியது... அப்பா... சரணடைதல் என்பது முழுமையாக்கப் படவேண்டும் எனில் (தியானம் செய்ததன் பலனாக), த்யானம் செய்பவன் தானே என்கிற சிறு முனைப்பும் தேவையற்றதே என்ற கருத்தை முன் வைத்த நண்பருக்குள் இருந்து செய்தி வந்தது கூட குருவின் அருளாகவே தோன்றியது...
அலைகழிப்பான வேலை, களைப்பான உடல் நிலை, குடும்பத்தின் தேவை அறிந்து உழைக்கவேண்டிய கட்டாயம் என்ற வாழ்க்கைக்கு நடுவே... செயலுக்கு விளைவு என்று கடமைகளை செய்து கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்...
ஆனால் தவம் தொடர்ந்து செய்ய முடிய வில்லை... என்றாலும், தவம் செய்கிற நாட்களை விட, தவமில்லாத நாட்களின் நமது திறன் குறைவாக இருப்பதால், மனோ வலிமை குறைந்து விட்டதா? அப்படி எனில் நான் என்கிற இந்த முனைப்பின் மூலத்தோடு ஒடுங்கி வாழ முடியாதா? அப்பா..... நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்று தெரியவில்லையே... என்று என்னைச் சூழ்ந்து இருக்கிற பல வித நிலைகளோடு ஒரு கணம் இக்கேள்வி எழுந்தது...
இரண்டு நாள் போனது... அன்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்குப போனேன்... குழந்தையும் , மனைவியும் தூங்கியிருந்தார்கள்... உணவு அருந்திய பிறகு... அயர்ந்து தூங்க நினைத்தேன்... குழந்தை எழுந்து விடுவான் என்று மெல்லிய குரலில் மனைவி அன்றைக்கு பேச வேண்டியதை சொல்லிக்கொண்டிருந்தாள்... அவள் பேசும் ஒவ்வோர் வார்த்தைக்கு நடுவில் தூக்கம் இருந்தது.... கேட்டபடியே... இருந்தீன்....
திடீரென்று, நான் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு ஜீவசமாதிக் கோயிலில் இருப்பது போன்றும், அங்கு முன்னேறி குருவின் சமாதியைப் பார்த்தேன்.. அப்படியே, வணங்கப்போவதைப் போல நெருங்கினேன்... ஆனால், அங்கு இருக்கும் லிங்கத்தின் அடியில் சமாதித் தளத்தில் உள்ளே நுழைந்து விட்டேன்... அவ்வளவு தான்... என்ன இது என்று அலறிக்கொண்டே எழுந்தேன்... பேசிக்கொண்டிருந்த மனைவியின் வார்த்தைகளின் நடுவில் தான் எனக்குள் இந்த அனுபவம் வந்து இருந்ததைப் பார்த்தேன்.... உடல் எல்லாம் சிலிர்த்து இருந்தது...
என்னங்க... நான் பேசுவதற்கு பதில் சொல்லுங்க என்று என் மனைவி அடுத்த பேச்சைத் தொடர்ந்தாள்... குருவே சரணம் என்று சொன்னேன்... கண்களில் நீருடன் நான் ... எங்கு இருக்கிறேன் என்ற கேள்விக்குப்பதிலுடன் குரு...
குருவின் அருள் எப்படி விளக்குவது?
ஒரு முறை அடி எடுத்து வைத்து பல நாட்கள் ஆகி இருந்தது... தவம் செய்யலையே அப்பா... நான் உங்களோடு எப்போ இருக்கிறது இப்படி இருந்தா? என்று கேட்டதற்கு, உட்கார்ந்து தவம் செய்யாத போதும் கூட, கனவும், நனவும் இல்லாததாய், நீ என்னுள் (நிர்க்குண சமாதியில்) இருக்கிறாய் என்று உள்ளுணர்வாய் சொன்னது சந்தோசமாய் இருந்தது...
குருவானவர் தரும் அனுபவம் என்பது எப்போதும் முழுமையாக அறிவிற்கு ஏமாற்றம் இன்றி நிறைவையே தருவாய் இருப்பது தான்... நிகழ்வது அனைத்தும் குரு தரும் நியதியாய், எங்கும் பொருந்தும் படியான, தெளிவான அனுபவங்கள்... ஆரம்பம் முதல் முடிவு வரை, இது என்னால் தான் நடந்தது என்று ஒரு இடத்திலும் முனைப்புடன் சொல்ல முடியாத வகையில் ஒரு சீடனுக்கு குரு எல்லாமே செய்கிறார்...
முழுத்திறமையுடன் காத்து முடிக்கும் மேலாம்
முழு முதற் பொருளே நம் அறிவும் ஆகும்..
இந்த அரும் பிறவியில் முன் வினை அறுத்து
எல்லை இல்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...
தன்னை அன்றி ஒரு பொருளும் முடிவில் இல்லை... என்பார் ரமணர்...
ஆன்ம நிலை என்பது சரணடைந்த பிறகு, சீடனுக்குக் காலத்தே நிகழ்த்த வேண்டிய பல வித அனுபவங்களை முழுப் பொறுப்புடன் செய்து முடிப்பது குரு...... முனைப்பு எந்த இடத்தில் நுண்ணிய நிலையில் ஏற்படினும், அதனையும் பொறுத்துக் கொண்டு சீடனை வழி நடத்துவதில், குருவே முன்னிற்கிறார்...
வாழ்க வளமுடன்..
Monday, October 24, 2011
Tuesday, January 18, 2011
ஆதியும் அந்தமும் குருவே..
வாழ்க வளமுடன்
குருவே சரணம்.
காணும் பலவித்தோற்றங்கள் எல்லாம் எண்ணத்தின் வடிவங்களாய் மட்டுமே கருமையத்திலே பதிவாகிறது.
கடந்த கால அனுபவமாய் நமக்குள் இருக்கும் எதுவும் கூட, எண்ணங்களாய்த் தான் மேலே வருகிறது. அதுவே செயல்களாய், ஒருவரின் அடையாளமாய் பெர்சனாலிடியாய் வடிவமாகிறது.
எத்தனையோ கோடி எண்ணங்களோ, அத்தனை பதிவுகளும் செயல்களாக மலர்ந்து விடுகிறது முன்பின்... இதனால் தான் பிறவித் தொடர் நீடிக்கிறது என்று சொல்வார்கள்.. அதாவது எண்ணங்களின் பதிவுகள் என்பது தான் மனிதனை ஆட்டிவைக்கிறது என்பார்கள்...
சீடன் என்பவன் தன் எண்ணத்தின் பின் செல்லும் போது, தன் பதிவுகளைப்பார்த்து பிரமிக்கிறான். எப்போது குருவைப்பற்றிக்கொண்டு செல்கிறானோ அப்போது, குருவின் தன்மை கருமையத்திலே பதிந்து, அதுவே எண்ணத்தின் ஓட்டத்தை சீர் செய்து எண்ணத்தின் அலைகள் புதிதாக அதிகம் எழாமல் பார்த்துக்கொள்ளுவதோடு, அந்த விழிப்பு நிலையிலேயே தொடர்ந்து இருக்க வைப்பதால், தியானம் நிகழ்வது எளிதாகிறது.
இருப்பது இந்த உடல் என்று எடுத்துக்கொள்ளும் போது, தியானம் மனம் என்ற அளவிலே ஆரம்பித்து மனம் சொல்லும் போது முடிகிறது. அங்கே தியானம் ஏற்படவே இல்லை.
இருப்பது குரு என்ற ஒன்றே, அதுவே இறை நிலை என்ற ஆழ்ந்த தொடர்பிலே சீடன் தவம் செய்யும் போது, அங்கே தனது உடல் என்ற நிலையை விட்டொழித்து விடுகிறான். அங்கே சீடன் தனித்து இல்லாமல், குருவே தவம் செய்து இறை நிலையோடு கலந்து பேரின்பம் எய்துகிறான்... அங்கே விழிப்பு நிலையிலே, சீடன் எப்போதும் இல்லாமல் இருப்பது, குரு எப்போதும் நீடித்து நிலைப்பதுமாக இருந்து விடுகிறது.. இங்கே ஏமாற்றமே இல்லை... அறிவாக குரு எப்போதும் இருக்கிறார் என்கிற அந்த உணர்வு எள்ளளவும் மாற்றமின்றி நீடித்து இறைனிலையோடு கலக்கிறது.
குருவே அமர்ந்தார்... குருவே தன் இருப்பை நினைத்தார்... குருவே உணர்ந்தார். குருவே கலந்தார்.. குருவே இறையோடு ஒன்றானார்.. இப்படி எல்லாம் குருவே என்றாக வேண்டும்....முனைப்பு என்றை நீக்கிவிட்டால், குருவே எல்லாம் என்றாகும்.
இங்கே விழிப்பிலே இருந்து மாறாது அனைத்தும் நிகழும்.
ஆதி அந்தம் ஆன எந்தன் இறைவனே குரு என்று சரணாகதி அடையும் போது, ஆனந்தத்திலே விம்மி விம்மி அழுது கரையும் போது தான் சீடன் அந்த சுகத்தினால், குருவை பொத்தி பொத்தி வைத்து, அந்த பேரின்ப உணர்வை நினைத்து நினைத்து ஏங்கி தவிக்கும் பாக்கியம் பெற்றவனாய் வாழும் நிலை கிட்ட குருவே சரணம்...
இனி எண்ணம் என்று ஒன்று வந்தால் அது குருவை, மௌனத்தை உணர்த்தும் ஒன்றாகவே இருக்கவேண்டும்.. சென்ற இடமெல்லாம் மௌன நிலை பரவ வேண்டும்.. குருவின் நிலையை வாய்மூடி மௌனத்திலே இருப்பாய் நின்று உணர்த்தவேண்டும்... அந்தப்பாக்கியம் பெற்றவனாய், குருவின் பிள்ளை என்ற அடையாளமாய் சீடன் வாழ்ந்து முடிக்க வேண்டும்..
ஆதியும் அந்தமும் குருவே..
குருவே சரணம்..

Subscribe to:
Posts (Atom)