வாழ்க வளமுடன்...
மெய்ப்பொருள் உணர்த்திட என்றென்றும் நிலையாய் நீடித்து நிற்கும் குருவின் பாதங்களைத் தொட்டு எழுதுகின்றேன்...
பொதுவாக ,தனிமை விரும்பியான எனக்கு குருவின் கவிகளைப் படிப்பது மிகவும் பிடிக்கும்...அதிலே சிந்தனை செய்வது மிகவும் பிடித்த ஒன்று... சில நாட்களாய் வீட்டில் தனியாக இருக்கும் சூழல் இருப்பதும், மீண்டும் குருவின் வரிகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியது...
பிடித்த புத்தகம் எப்போதும் என்னுடன் சில வெளி நாட்டுப்பயணம் வரை கூடவே பயணித்தது ஞானமும் வாழ்வும்.... (இதுவரை குருவின் கவிகளை முழுமையாக, அவர் சொல்லவந்ததை சரியாக உணர்ந்து கொண்டேன் என்று சொல்வதற்கில்லை.. சிந்தனையும், ஆழ்வதும் மட்டும் தொடர்கிறது)
இப்போது ஞானக் களஞ்சியம் 2ம் பாகம் கையில் தவழ்கிறது.... இரண்டு நாட்களுக்கு முன், ஒரு கவியைப் படித்தேன்...
புக்ககம் போய் மக்கள் பெற்றும்
பிறந்த அகம் மறவாள் போல்
சிக்கலுள்ள வாழ்க்கையிலும்
சிவன்சீவன் நிலை மறவேல்!
ஓரளவுக்கு விளக்கம் புரிந்தது... மணம் முடித்து குழந்தைகளைப் பெற்றாலும், பெண்ணானவள் தன் பிறந்த வீட்டை மறந்துவிடாதது போல, விளக்க முடியாத, விளங்க இயலாத,பிறப்பின் காரணம், அடையும் வழி,வாழும் சூழலோடு மெய்ப்பொருளை அடைவது எப்படி என்பது போன்ற நிலைகளை, நம்மைச்சுற்றி இருக்கும் இந்த சிக்கல் நிறைந்த வாழ்க்கையிலும் கூட மெய்ப்பொருளுக்கும், நமது உயிருக்கும் இடையில் உள்ள உள்ளத்தொடர்பை மறக்காதீர்....
இறைனிலை : உயிர் - இந்த இரண்டு விசயத்தில், முதலில் உள்ளது பொருள்... அடுத்தது நிகழ்ச்சி....
உயிரை உணர்தல் என்ற நிலை எட்டப்படும்போது, காரணமாம் பொருளும், இடையில் இருக்கும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற அனைத்தும் விளங்கிப்போகும்...
குருவானவர் சொல்லவருவது, சிக்கலுள்ள வாழ்க்கையிலும், சிவன் சீவன் நிலை மறவேல்! என்பது... நம் உயிருக்கும், மெய்ப்பொருளாம் இறைனிலைக்கும் உள்ள நிலையான நீடித்து இருக்கும் நிலையை மறக்காதே என்பது தான்... அந்த தவ வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழு... என்பது புரிகிறது...
குருவின் வரிகளில் உள்ள வீரியம் எது வரை இட்டுச்செல்லும் என்பது படிக்கும் புலனுக்கு எட்டும்.
குருவை நினைத்து வணங்கினேன்.. அப்பா... எப்படி உங்களால் இப்படி வாழ்ந்து காட்ட முடிந்தது? பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவேண்டுமே... என்று எண்ணியபோது, எனது மடிக்கணினியில், பிட்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐய்யனே... பிண்டம் என்னும் எழும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்.... பாடல் ஒலித்தது... கண்களில் நீர்..
அன்று முழுவதும் அந்தக்கவியின் மேன்மை ஆட்கொண்டது....அன்று "அஞ்சலி" திரைப்படம் சில நிமிடங்கள் பார்த்தேன்.... 4வயதான மனவளர்ச்சி குன்றிய ஒரு சின்னஞ்சிறு குழந்தை, பெற்றவளைக்கூட நெருங்கி வர அனுமதிக்காதவளான அக்குழந்தை, பெற்றவளை அம்மா என்று கூட அழைத்திடாத அக்குழந்தை,மரணம் நெருங்குவதை உணராத அந்த பலவீனமான நேரத்தில், அம்மா அம்மா என்று பல முறை தன் பிஞ்சுக்கைகளை மட்டும் உயர்த்தி ஏங்கும் அந்தக்காட்சி..... அடடே.... என்னவொரு பந்தம் இது.... தனக்கு என்ன தேவை....? அம்மா என்று ஏங்கி அழைப்பதைத் தவிர.... இயற்கையான ஒரு தொடர்பு.... உயிருக்கும், இறை நிலைக்கும் உள்ளது போல.... உயிர்...சீடன்...குழந்தை : இறைனிலை.... குரு... அன்னை!!
நிர்க்குணப்பரப்பிரம்ம சுவரூப என்று சொல்வார்களே... அப்பேர்ப்பட்ட குருவின் களத்தில் நாம் ஒவ்வொருவரும் உயிரைக்கொண்டு தானே உணரமுடியும்.... சிந்தனையில் கவி ஓட ஓட என்னவொரு அனுபவங்கள் வார்த்தைகளாய், புலன்களுக்கு காட்சியாய்.... தேடினேன் தேவ தேவா... தாமரைப்பாதமே.... குருவே சரணம்..
அலுவலகத்தில் வேலையில் இருந்தேன்.... ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது... இனிமையான அந்தக்குரல் ஹலோ சொல்லும்போதே.... புரிந்தது தங்கையின் அழைப்பு என்று...
எப்போதும், என்னை பேசவிட்டு, குருவின் வார்த்தைகளை, கவிகளை காதுகொடுத்து கேட்டு, என்னோடு குருவை பற்றிச்சொல்ல சொல்ல அழும் அவள், அன்று ஏதோ சொல்லவந்தாள்... குருவின் பாடல்களை அவள் கர்ப்பம் தரித்தபோது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்து, குழந்தையை ஈன்றெடுத்துக் காட்டியவள்...
தன் பிள்ளை நேற்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தானாம்... காலை முதல் இரவு வரை... என்னென்னவோ முயற்சிகள்.... குழந்தை அழுவதை நிறுத்தாமல் சிணுங்கிக்கொண்டே இருந்திருக்கிறான் இரவு வரை தூங்காமல்.... மாப்பிள்ளைக்கு ஒரு டாக்டரிடம் போகலாம் என்று முடிவு.... இவளுக்கு என்ன செய்வதென்று முடிவெடுக்கக் கூட விடாது அழுது கொண்டு இருந்த குழந்தையை, ஒரு கணம் கணவனிடம் குருவின் பாடலை, ஒலிக்கவிடுமாறு சொன்னதும்... குருவின் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.... இரண்டாவது வரி ஒலித்த போது, குழந்தை நன்றாக தூங்கிவிட்டானாம்...
குழந்தைக்கு அத்வைத் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.... அவனுக்கு குருவின் பாடல் கருவில் இருந்தே கேட்ட ஒன்று... தனக்கும் சுத்தவெளிக்கும் பிரிவில்லை என்பதை, குருவின் இரண்டாவது வார்த்தைக்கே, ஏற்றுக்கொண்டு காட்டிய அத்வைத்... பெருமையாகவும், இக்கணத்தில் பூரிப்பாகவும் இருக்கிறது அவனை நினைக்கும்போது....
அவளிடம் குருவின் கவியைச்சொன்னேன்...
புக்ககம் போய் மக்கள் பெற்றும்
பிறந்த அகம் மறவாள் போல்
சிக்கலுள்ள வாழ்க்கையிலும்
சிவன்சீவன் நிலை மறவேல்!
என் தங்கைக்கு சொன்னது -- நீ குழந்தையை தூங்க வைக்க, குருவை அண்ட வேண்டும் என்று எக்கணத்தில் நினைத்தாயோ, அது தான் குருவும் சொல்லவருவது.... சிவன் சீவன் நிலை மறவேல்.... அது தான் குரு சீடனின் பந்தம்...சாராம்சம்....
அவளிடம் சொல்லாமல் விட்டதை, இதில் சொல்கிறேன்.... இந்தக்கவியின் தலைப்பு.... பரவசம் நிலைத்து நில்! ஞானக்களஞ்சியம் - 2ன் பாடல் எண் 1085...
குருவே சரணம்....
No comments:
Post a Comment