வாழ்க வளமுடன்...
நாட்களும் சென்று கொண்டிருந்தது... குருவின் கவி எப்போதெல்லாம் மேலோங்கி இருந்ததோ அப்போதெல்லாம், எனக்கு தவத்தில் எண்ணமே இல்லாது இருந்தது... அட, குருவின் கவியானது நமக்குள் ஒரு எண்ணமாகத் தானே இருக்கிறது... இந்த எண்ணமானது எதனால் சாதாரண எண்ணத்தில் சேராமல் தனித்து இருக்கிறது? என்று எண்ணிக்கொண்டே இருந்தேன்... குருவின் கவி சொல்லாத நேரத்தில், என்னுடைய பழக்கப்பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு எனக்குள் எண்ணம் வந்து கொண்டே இருந்தது... அப்போது தவத்தில் எண்ணங்கள் அதிகமாக இருந்தது....
அப்போது இந்த வித்தியாசத்திற்க்குக் காரணம் குரு மட்டும் தான்... குருவின் எண்ணமும், கவியும், அதன் சிந்தனையும், சுத்தவெளியாக விரிந்து எனக்குள் எண்ணமற்ற நிலை தருகிறது.... இந்த எண்ணங்கள் மட்டுமே தான் விலக்கு அளிக்கப்படுகிறது என்றால்... குருவின் எழுத்துக்களே இப்படி எண்ணமற்ற நிலையில் நம்மை ஆக்குகிறது என்றால்... குரு எப்பேர்ப்பட்ட நிலையில் இருப்பார்?? கண்களில் நீர் அரும்பும்... குருவின் பாடல்வரியில் சொன்னது போல தப்பாது குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தில் உயர்த்தி.... என்ற வார்த்தை தவத்தில் எண்ணமற்று போகும்போதெல்லாம் நினைத்து நன்றிகளைச் சொல்ல வரும்போதெல்லாம் கூட குருவின் வரியாக...
தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தளைத்ததொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த முன்பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு...
இந்த அரும்பிறவியில் முன்வினை அறுத்து
எல்லை இல்லா மெய்ப்பொருள் அடைவதற்க்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்.... என்று கண்ணீருடன் ஆனந்தமாகச் சொல்லிக்கொண்டிருப்பேன்...
தவத்தில் நான் எப்படி இருக்கிறேன்...உயர்ந்திருக்கிறேனா? பிறவிப்பயன் பற்றி என்ன?.... நாம் எதை நோக்கிப் போகிறோம்? என்றெல்லாம் ஒரு நாளும் தோன்றியதில்லை.... ஆனால், குரு சார்ந்த நிலை யார் சொல்கிறாரோ அதை குருவே சொல்வதாய் ஏற்றுக்கொண்டேன்...
குருவின் மீது எண்ணம்... குரு சார்ந்த எண்ணம்... குருவாக உள்ள கவிகள்... இப்படி சுற்றி சுற்றி நாட்கள் சென்று கொண்டிருந்தது...
மீண்டும் 2 மாதம் கழித்து குரு சென்னைக்கு வந்தார்...
அனுமதிக்கும் நேரத்தில், நாங்கள் அமர்ந்துகொண்டிருந்தோம்... முதல் மாடியில்... அறையை விட்டு வெளியில் வந்தார்.... எல்லாரும் வாழ்க வளமுடன் என்றார்கள்.... நான்... அம்மா.... என்று அழுதேன்.. வணங்கினேன்... எனக்கு அவ்வளவு தான் செய்யத்தோன்றியது...
அன்று முதல், அப்பா.. அம்மா... என்று அவருடன் தனியாக இருக்கும்போதெல்லாம் எனக்கு நேரும் குறைகளைச் சொல்வேன்... கடைசியில், எனக்கு நானே சொல்வேன்... இதெல்லாம் உங்களோடு இருக்கும் என்னை என்ன செய்துவிடும்... எது நடந்தாலும், நீங்கள் இரூக்கிறீர்கள்...
கவி வரும்....
ஏற்பின்றி தீயண்டா பவ இருப்பு இன்றேல்
ஒரு துன்பமும் வரா... இறை அமைப்பு
ஏற்புவினை ஈர்ப்புகளின் பதிவு ஆகும்..
எவர் மூலம் ஒரு துன்பம் வந்த போதும் ஏற்புக்கொள்வோம்..
2 முறை, 3 முறை சொல்லி சொல்லி குறைகளை அவ்வப்போது குருவோடு, குருவின் சாட்சிகளாக வருவதை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்குத் தள்ளப்பட்டேன்.. இது தவிர என்னால் இதை சமாளிக்கும் பக்குவமோ, சொல்லி சரி செய்ய ஆளோ யாரும் இல்லை... இதுவே மட்டும் தான் எனக்கு தீர்வு தருவதாக இருந்தது...
எங்கும் எதிலும், கவியில், முனைப்பு ஒரு எழுத்தில் கூட கண்டதில்லை... பகுத்தறிவுக்கும் ஏமாற்றம் இல்லை... சொல்லச் சொல்ல ஆனந்தம்... எண்ணமற்ற நிலை... இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்... குருவின் கவி மிகவும் பிடித்துப்போனது... சினிமா தத்துவ்ம் அந்த கதானயகனை விட, எழுதியவனின் நிலை மட்டுமே தான்... அது நம்மை உயர்த்தவில்லை... உயர்த்துவதும் இல்லை... எண்ணங்களுக்குத் தான் தீனி... தவத்திற்க்கு இடைஞ்சல்... அவ்வளவு தான்...
நான் தற்போது வேலை செய்யும் கம்பெனியில் அப்போது தான் வேலை கிடைத்து இருந்தது... என் வாழ் நாளில் அப்போது தான் பேச பழக ஆரம்பித்தேன்... ஆனால் குருவைக்கொண்டு...
மிண்ணணு மையம் கொண்ட கருவி... சர்வீஸ் செய்யும் வேலை... எனக்கு அதில் எல்லாம் கவலை இல்லை... ஏனெனில், எல்லாம் எண்ணம் தான், எண்ணத்தின் மூலத்தில் இருந்து தான் இவை விஞ்ஞானமாக வருகிறது... மௌனத்தில் நின்று கொண்டு எதையும் சாதித்துவிடுவேன் என்று குருவின் பலம் கொண்டு துணிச்சலாக அந்த வேலைக்குச் சேர்ந்தேன்...
5மணிக்குள் திருவான்மியூர் பக்கம் எல்லா வேலைகளையும் நேரத்தில் முறையாக செய்துவிட்டு, வேர்த்து விருவிருக்க, குருவைப்பார்க்க முதல் ஆளாக நிற்பேன்... உமா அவர்கள் வந்து பார்த்துச்செல்வார்கள்.... எல்லாரும் வாழ்க வளமுடன் என்பார்கள்... யார் இவர் என்று விசாரித்தேன்... குருவின் வளர்ப்பு மகள் என்றார்கள்...
குருவை அப்பா அம்மா என்று கூப்பிட்டால், நான் யார்? .. எனக்கு அழுகை இப்போதும் வருகிறது... அந்த நாட்களை நினைத்தால்... ஏனென்றால், அவ்வளவு ஆறுதல் குருவைப்பார்க்காமலேயே எனக்கு அவரிடம் பேச பேச கிடைத்தது.... எடுத்த முடிவுகள் துல்லியமாக இருந்தது எதிலும். வேலையிலும் கூட... இவர் தான் எனக்கு எல்லாம்...
அன்று நிறைய பேர் வந்திருந்தனர்... குருவுக்கு நிறையபேர் பழங்கள் தருவார்கள்... வணங்குவார்கள்... வாழ்க வளமுடன் என்பார்... எதையும் தொடமாட்டார்... ஒரு நாள் கட்டாக நூறு ருபாய் தந்தார்கள் பழத்துடன்... என்னிடம் கையில் பணம் இருக்காது... வெறும் கையை வீசிக்கொண்டு சென்று இருப்பேன்...எப்போதும்... குருவே... அப்பா... அம்மா என்று சொல்லுவேன்... கண்களில் நீர் வரும்...
அன்று மே 5ம் தேதி... நானும் என் நண்பரும் குருவைப்பார்க்கச்சென்றோம்...
நடந்து போகும்போது திருவான்மியூர் பஸ் ஸ்டான்டில் இருந்து நடந்து செல்லும்போது, குருவின் கவியைப்பற்றி சொல்லி விவாதித்தோம்... சிலாகித்துக்கொண்டே... இருக்கும் போது... அட நமக்கு இன்று பிறந்த நாள் ஆயிற்றே... என்ற எண்ணம் வந்தது... இந்த உடல் தோன்றி மறையக்கூடியது... இதை விட எப்போதும் நீடித்து நிற்க்கும் குருவின் அருளைப்பற்றி யோசிப்போம்... எதற்க்கு இந்த உடலை முன்னிலைப்படுத்தனும் என்று எண்ணிக்கொண்டு மறுகணத்தில், குருவின் கவி மீதான பகிர்தல் தொடர்ந்தது....
வால்மீகி ரோட்டிற்க்கு வந்த போது எந்த எண்ணமும் இல்லை... குருவின் கவி மட்டும் தான் ஓடியது... குருவைப்பார்த்தோம்... அன்பர்கள் கேள்வி கேட்டார்கள்... ஒரு நபர், என்னுடைய பார்வைகள் ஒளி மயமாக எந்த ஒரு பொருளும் சில நேரம் தோன்றுகிறது.... அது எதனால் என்றார்?
குரூவானவர் அப்படியே அந்த பழத்தை எடுத்து அந்த நபரிடம் காண்பித்து இதைப்பார்த்தால் எப்படித் தெரிகிறது என்று கேட்க, பழத்தை எடுக்க முயன்றார்... 3 அடி தொலைவில் இருந்தது பழத்தட்டும்.. 3 வது வரிசயில் இருந்த நான் எழுந்து சென்று.... முதன்முறையாக குருவிடம் கேட்டேன்... சாமி... உதவனுமா என்றார்.... வேண்டாம்... நீ இதோ இங்கே உட்கார் கொஞ்ச நேரம் என்றார்.... சரி என்றேன்...உணர்ச்சியே இல்லாமல் அமைதியுடன்...
எதோ ஒரு அமைதி, அரவணைத்தது.... 5 நிமிடம் அந்த நபரிடம் பேசிய எதுவும் எனக்குள் ஏறவில்லை... எண்ணமும் இல்லை, கண்கள் திறந்து பார்த்துக்கொண்டே தான் இருந்தேன்... என் நண்பரைத் தேடினேன்.... அவர் பார்வையால்.... டேய் நீ குருவின் அருகில் அமர்ந்திருக்கிறாய் என்றார்.... அப்போது தான் எனக்கு என்ன நடக்கிறது என்று உணர்வு வந்தது... கேள்வி கேட்டவர் உட்கார்ந்துவிட்டார்... குரு என்னை எழுந்திருக்கச்சொல்வார் என்று அருகில் உட்கார்ந்திருந்தேன்... அடுத்தவர் ஒருவரின் கேள்வியும், குரு பதிலும் சொல்லி முடிந்தது.... என்னால் குருவிடம் எழுந்திருக்கலாமா என்று கேட்க முடியவில்லை... தவித்தேன்....
முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள்... சைகைகளை செய்தார்கள்... இறங்கி வரச்சொல்லி... மெதுவாக குருவிடம்... சாமி... என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டு ... எழுந்தேன்... குரு பார்த்தார்...மௌனமாக இருந்தார்...
கீழே இறங்கி வந்த பிறகு படபடப்பு அதிகமாக ஆனது... அப்போது தான் நான் எப்போதும் இருப்பது போல படபடப்பு இருந்தது.... வெளியில் வந்தோம்... நண்பர்கள் சந்தோசப்பட்டனர்.... குருவை எண்ணிக்கொண்டேன்.... திரும்பிப் பார்த்தால், நமக்குள் குருவைப் பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், எனது உடலின் பிறந்த நாளில் ஆசி வாங்குவதைப்பற்றி வந்த ஒரு நொடி எண்ணத்திற்க்கு, குரு நமக்கு பதில் சொல்லி இருக்கிறாரே... இப்போது தான் எட்டுகிறது எனக்கு என்று சந்தோசத்தில் நெகிழ்ந்து போனேன்....
என் பிறந்த நாள் வரும்போதெல்லாம், குரு அருகில் அமர வைத்தார்... " நான்" தான் எழுந்துவிட்டேன்... என்று சொல்லிக்கொள்வேன்... மௌனத்தில் எண்ணத்தைப்போல.... குருவுக்கு நான்.. இப்படித்தான் இருக்க முடியும்... என்று சொல்லிக்கொள்வேன்..
மௌனம் குரு... எண்ணம் நான்... இது நன்றாக பதிந்தது...
No comments:
Post a Comment