வாழ்க வளமுடன்
அன்று குறித்த நேரத்தில், திருவான்மியூர் தலைமை மன்றத்திற்க்குச் சென்று விட்டேன்... இருபது பேருக்கு மேல் அன்பர்கள் என்னைப்போல வந்திருந்தார்கள்...
எல்லோரும் வரிசையாக அமர்ந்து 20 நிமிட தியானம் செய்தோம்... கண் விழித்து வாழ்த்து எல்லாம் போட்டுவிட்டு கண்ணைத் திறந்து பார்த்த போது, குரு வந்து அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார்... எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தந்தது...
குரு பேசினார்... வாழ்த்தினார்... பிறகு, 4 பேராசிரியர்கள் முன்னிலையில், மகரிஷி சொல்லச் சொல்ல துரியாதீத தவம் எடுத்தார்கள்... தொடு உணர்வு தீட்சையை அருகில் வந்து பேராசிரியர்கள் தந்தார்கள்... குருவானவர் துரியத்திற்க்குப்பிறகு துவாதசாங்கம் முதல் தன்னை உயர்த்துவது எப்படி என்பதை சொல்லிக்கொண்டே வந்தார்கள்....
சந்திரன் சூரியன், சக்தி களம் இப்படி எல்லா நிலைகளையும் குரு சொல்லச்சொல்ல செய்தேன்... எனக்குள் வந்த கேள்வி எல்லாம், எண்ணங்கள் தொடர்ந்து வருகிறதே அது இந்த களத்தில் வைத்து தவம் செய்யும்போது என்ன செய்வது? என்றபடி குருவின் வார்த்தைகளைத்தொடர்ந்து சென்றேன்...
சிவகளம்... சுத்தவெளி... இந்த நிலையில், தூய நிலை ஒன்றே தான் எல்லையற்று, முடிவுறாததுமாக பரந்து விரிந்து மனதை சுத்தவெளியோடு இருக்கிறோம்... வெறும் சுத்தவெளி ஒன்றை மட்டும் தான் இங்கு நினைக்கவேண்டும்... இங்கே மனதைச்செலுத்தி அதனை ஏற்கும் நிலை வரம் வரை,தொடர்ந்து அதனோடு பழக்கவேண்டும்... மன விரிவில்,எண்ணங்கள் குறைந்து வர வர இறை வெளியானது மட்டுமே தான் நீடிக்கும்... அதுவரை முயற்சி தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றார்கள்... எனக்குள் எண்ணம் வந்தது... அப்படி எனில், குரு எங்கே இருக்கிறார்? எனக்குள் துரியம் வரை எடுத்த தவத்தில் உணர்வுகளை குரு கேட்டபோதெல்லாம் தந்தார்.... இப்போது எண்ணமற்ற நிலையைத் தான் நினைக்கவேண்டுமா? அப்படி எனில் குருவை நினைக்கக்கூடாதா? அப்படி ஒரு தவம் எனக்குப்பிடிக்கவில்லை... மனதால் சொன்னேன்... குருவே இந்த தவம் எனக்கு திருப்தியாக இல்லை...
என்னைப்பொறுத்த வரை இன்னும் சரியாக கற்கவில்லை என்று நினைத்தேன்... எந்த ஒன்றால் குரு எனக்கு துரிய உணர்வை கேட்டபோதெல்லாம் தந்தாரோ, அந்த ஒன்று என்ன? அந்த ஒன்று குருவின் அருகாமை பற்றி எல்லாம் எதுவும் தேவை இல்லாமல் நினைத்தாலே உதவியதே... அந்த ஒன்று குருவின் சூட்சும இயக்கம்... அதை குரு நம் முன் வாய் திறந்து சொல்லவில்லை... எங்கேயோ இருந்து கொண்டு நமக்குள் அவர் எப்படி கேட்ட நேரத்தில், கேட்ட மையத்தை உணர்வாகத் தந்தாரோ, அப்படியே தான் இந்த தவத்திற்க்கும் கூட செய்யவேண்டும்... வேறு வழி இல்லை... முடிவெடுத்தேன்... குருவே எனக்கு உங்களை விட்டால் எந்த வழியும் இல்லை... எனக்குள் பட்ட வழியைத் தான் தவம் செய்யப்போகிறேன்...
குருவிடம் தீட்சை பெற்றதை நண்பர்கள் பூரித்தார்கள்... சுந்தர மூர்த்தி அவர்களிடம் சொன்னேன்.. ஞானமும் வாழ்வும் படியுங்கள் என்றார்... புத்தகத்தை அங்கேயே வாங்கினேன்... அன்று முதல், குருவின் கவிகளைப் படிக்க ஆரம்பித்தேன்... குருவோடு வாழ ஆரம்பித்தேன் கவிகள் வடிவில்... கவிதைகளை புரிந்துகொண்டு அவற்றை சும்மா இருக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன்... ஒவ்வொரு எண்ணத்திற்க்கு நடுவில், எண்ணம் முடிவில் குருவின் கவிகளாக எனக்குள் குருவின் சிந்தனைகள் வந்துகொண்டே இருந்தது... கனவே இல்லாத தூக்கம் இருக்கும்... இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க எழுந்தாலும், கவிதை வரும்... சொல்லிக்கொண்டே இருப்பேன்...
குருவின் தன்மை அந்த கவிகளாக எனக்கும் ஏற்புடையதாக எந்த எதிர்ப்பும் இன்றி அதுவே எனக்கும் உகந்ததாக, குருவின் உயர்வான நிலை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துப் போனது... அப்பேர்ப்பட்ட ஒரு குரு நமக்கு இருக்கிறார்...அவரின் இயக்கம் தவத்தில் உணரும் வரை தவம் முழுமையாகாது... ஆகவே குருவை உள்ளே மட்டும் உணரவேண்டும்... குரு நிரந்தரமானவர் என்று உணரும் போது தவம் கற்றுக்கொண்டதாக சொல்லிக்கொள்வோம்...
Continuing
No comments:
Post a Comment