Thursday, December 16, 2010

சீடனின் உரிமை...

குருவே சரணம்


எல்லாம் வல்ல இறை ஒன்றே எப்போதும் நீடித்து நிலைத்து இருக்கிறது. அந்த சுத்தவெளி என்ற நிலைக்கு அனுபவிக்கவென்று, அறிவதற்கு என்று எதுவும் இல்லாது, பூரணமாக நிறைவிலே எப்போதும் இருக்கிறது.

மனிதன் என்பவன் தான் இறை என்ற இயல்பிலே இருந்து நிறைவினை உணராத நிலை தனக்குத் தெரிவதாகக் கருதி, மீண்டும் இறையை நோக்கிச் செல்லும் போது, அந்த சுத்தவெளியில் மனதைவிரித்தும், ஒடுங்கியும் நின்று பார்க்கும் போது, அங்கே அறிவது (அறிவு + அது) என்று த்வைத மனப்பான்மையிலே இறை உணர்வினை உணர்கிறான். அறிவு என்பது தனது என்று மூலம் என்றும், அது என்பதை இறை என்றும் நினைக்கிறான். அறிவது என்பதிலே அறியப்படுவது என்ற சாட்சி நிலையும் அடங்கியே இருக்கிறது. இந்த சாட்சி அறிவும் இறைனிலை தான் என்றாலும், இறையே தான் சாட்சியாக இருந்து அந்த அனுபவத்தை பதிவு செய்கிறது...

முடிவினில், அறிவது என்பதைத் தாண்டி ஒடுங்கும் போது, அறிவது என்று இரண்டு நிலைகள் ஒடுக்கப்படும் போது, அங்கே முனைப்பு ஒடுக்கப்படுவதைக் காணும் போது, சத்தியமான இறைதத்துவம் அவனுள் ஜொலிக்கிறது.


இறையை உடல் என்ற வடிவத்திலே கண்ட மகான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிலே ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் எல்லாம் மன ஓர்மையினால் இறையோடு பேசினர்..

இருப்பினும் இந்த அனுபவம் எல்லாம் மகான்கள் சாதனையாக சிலரால் போற்றப்பட்டாலும், அதே நிலையிலே இருந்து விடவில்லை. மேற்கொண்டு இறையோடு சுத்தவெளியாகக் கரைந்து நின்றனர். இம்மகான்களின் எழுத்துக்கள் சுத்தவெளியினையே தான் மூலக்கருத்தாக இருக்கிறது. விவேகானந்தர் முதன் முறையாக ராமகிருஷ்ணரைப்பார்த்தபோது, என்ன இது இவர் மன நிலை சரியில்லாதவரா? என்று நினைத்தாராம்.

சீடனைப்பாத்தவுடன், ராமகிருஷ்ணர் அப்படியே அவரை அணைத்து, உனக்காக எவ்வளவு நாளாய் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? எதற்கு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்? என்றெல்லாம் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடனும், சந்தோசத்திலே துடித்தாராம் குரு. அதெல்லாம், உடல் என்ற எல்லைக்குள் இருந்த சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு முறை சித்திகள் பெறுவது பற்றி குரு கேட்ட போது, விவேகானந்தர் குருவிடம் கேட்டாராம்... இந்த சித்திகளால், எனக்கு முக்தி பெறுவதற்கு உதவுமா? என்று கேட்டபோது, ராமகிருஷ்ணர் முக்திக்கு இந்த சித்திகள் உதவாது என்றவுடன்... அப்படி என்றால் எனக்கு அந்த சித்திகள் வேண்டாம் என்றாராம் விவேகானந்தர்... குருவின் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடன் பெருமையாகச்சொன்னாராம்... பாருங்கள்.. எனது நரேந்திரனை...


நாம் நமது குருவிற்கு அப்பேர்ப்பட்ட சீடனாக இருப்பது தான் குருவிற்கு உயர்புகழினைத் தர முடியும்.. குருவிற்கு உயர்புகழ் தருவது சீடனின் உரிமை. கடமை. நன்றிக்கடன். அதுவே குரு காணிக்கை.


குரு நம்முடன் இப்போது இல்லை என்ற புலன் வழியால் சொல்லலாம் ஆனால் அதை பகுத்தறிந்து மனதை ஒடுக்கி கிட்டாதவர்களை இந்த பிறப்பிலே ஒருவரையாவது காணவேண்டும்.

சென்னை தலைமை மன்றத்திலே, 1998ம் ஆண்டு, குருவிடம் ஒருவர் ராமகிருஷ்ணர் குருவிடம் கேட்டார்..

சுவாமி.. ராமகிருஷ்ணர் காளியிடம் பேசியது எப்படி சாத்தியமாகும்?

(குருவானவர் பொதுவாக, கவனிக்காத மாதிரியே கேட்பார். ஆனால் உன்னிப்பாக எந்த ஒருவரின் மன அலைகளையும் தடுத்து நிறுத்தி கவனிப்பார்)

அந்த ஹால் முழுவதும் அமைதியாக இருந்தது குருவின் பதிலுக்காக.

குருவானவர் கேள்வியை கேட்டபடியே, அந்த ஹாலில் நுழைந்த ஒரு பெண்மணியை நோக்கி வாழ்த்தினார். என்னம்மா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்களைப்பார்த்து... என்றார்.

அந்தப் பெண்மணி... சாமி... நீங்க தான் எங்க வீட்டிற்க்கு தினமும் வர்ரீங்க! நான் உங்களோடு பேசிக்கொண்டே தானே இருக்கிறேன் என்றார்.. சிரித்தார் குரு...

இன்னும் பதில் சொல்லவில்லை அந்தக்கேள்விக்கு... எங்களுக்கு அந்த நிகழ்வே பதில் என்று புரிந்தது... இனிமேல் குருவின் வாய் வார்த்தைகளுக்கு காத்திருக்கவேண்டியதில்லை... அந்த அன்பருக்கு குரு ஏதோ பதில் பேசினார். அதை கவனிக்கவே முடியவில்லை.

குரு அமைத்திருக்கும் தியான முறை என்பது மட்டுமே சிறந்தது என்று மார்தட்டுவதை விட, தியானத்திலே குருவை உணர்வது சிறந்தது. அதுவே குருவிற்குப் பெருமை. எத்தனை கோடி சீடர்க்கும் அங்கே இடமிருக்கிறது...கவனித்துக்கொள்வார் குரு.

புலன்களால் அடையும் ஒன்று/காண்கின்ற என்ற பதிவு என்பது ஒரு எண்ணம் மட்டுமே... அந்த எண்ணத்தை விட்டு தாண்டி விட்டால், அறிவாகவும் இருப்பதைப்பற்றிக்கொள்ளலாம். எந்த மார்க்கத்தினரும் வந்து சேரும் இடம் இது... நேரடியாக நம்மைக்கொண்டு போகிற குருவானவர், எங்கும் அறிவின் தன்மையை விட்டுத் தரமாட்டார்... என்ன செய்தாலும் கூட, அது என்ன பயன் என்றாலும் கூட, அறிவிலே இருந்து விலகும் பேச்சே அவரிடம் இருக்காது. அதே போல குருவானவர், அறிவு நிலையிலே இல்லை என்று நிரூபிக்கப்போவதும் இல்லை. தேவை ஏற்படின், அந்த சந்தர்ப்பம் நிர்பந்திப்பின், குருவிற்க்காக எங்கும் விரிவாகப்பேச முன் நிற்போம். அறிவு தனித்தே இருக்கிறது... அங்கே துளியும் நடுக்கம் என்ற இரண்டாவது அனுபவத்திற்கு இடமில்லை.


குருவின் சமாதி நிலையின் தன்மைக்கு கேள்விக்குறியாக்கப்படின், பொறுமையைத் தகர்த்து அறிவென்ற நிலையோடு நிற்போம்... இந்த உடலைக்காப்பது பற்றி முடிவெடுப்பது குருவே..


குருவே சரணம்.

Wednesday, December 15, 2010

உயர்புகழ் குருவிற்கு...

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்



குரு சீடர் என்ற உறவு என்பதன் தன்மை இருக்கிறதே அது இந்தப்பிறப்பிலே நாம் மேன்மையான உயர்வை அடைவதற்கு எப்போதும் உதவியபடியே வருகிறது.

குருவானவர் சுமார் 30 வருடத்திற்கு முன் ஒரு கவியிலே...

கர்ம வினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி என்னை அரவணைத்துக்கொள்ளும்
அந்தப்பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.

என்றார்.

குருவானவர் உடல் என்ற கூட்டுக்குள் அதன் பிறகு இவ்வளவு வருடம் இருந்திருந்தார். எனினும் உடலைக்கடந்து அந்த பெருஞ்சோதியிலே இருக்கவேண்டும் என்று அவருக்கு இருந்த எழுச்சியைத் தாண்டி, இறை அருள் நமக்காக நம்முடன் தொடர்ந்து பணியாற்ற அருளியது. அதனால் தான் இப்போது இருக்கிற பலர் குருவை தரிசிக்கும் வாய்ப்பு கூட பெற்றொம்..

குருவிற்கு உடல் என்ற கூட்டைத்தாண்டிச் செல்ல வேண்டும் என்று இருந்தார்.. சீடர்கள்..?

எந்த ஒரு சீடனும், வாழும் போது தியானத்திலே, இந்த பரு உடலைக்கொண்டே, உடலின் மரணம் என்றால் என்ன என்கிற என்கிற அனுபவத்தைப்பெற்று விடவேண்டும். இந்த உடலின் மரணம் என்றால் என்ன என்பதை தியானத்திலே உணர்ந்த ஒருவருக்கு, அதன் பிறகு மரணமில்லை.

ஒருவர் செய்யும் தியான முறையிலே இறைக்கு உருவத்தைக்கொடுத்தாலும், அந்த நம்பிக்கையின் அளவு ஆழ்ந்து சென்றால், அவரின் மனமே, அவர் வடித்த உருவை அவர் முன் வந்து காண்பிக்கும். தோன்றிய பிறகு, அங்கே சரணடைதல் என்ற நிலை வந்து விடுகிறது. ஏனெனில், அதற்கு மேல் அவருக்கு எதுவும் தேவை இல்லை. ஒன்று தியானத்திலே லயித்து மனத்தைக்கடந்து, முனைப்பை ஒடுக்கி, இறையிலே கலக்கவேண்டும். இல்லை எனில், அந்த அனுமானித்த உருவத்தைப்பார்த்த பிறகு உடலைக்கடக்க உயிர் பிரியவேண்டும். இதுவே இது வரை ஆழ்ந்த ஆன்மீகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிற மகான்கள் விசயத்திலே ஏற்பட்டிருக்கிறது.

நமது குருனாதர் உடலைக்கொண்டு இறையிலே லயித்து, மனம், உயிர் தாண்டி பேரறிவில் கலந்த பிறகு நம்மிடம் வந்து இருக்கிறார்.

உயிரை உணர்த்தி, உயிரை உயர்த்தி அறிவிலே நிலைக்கும் பேறு நமக்கு குருவே தந்து இருக்கிறார். இதற்கு மேல் உருவத்தை ஏற்படுத்துவதோ அல்லது உருவத்தை மையமாக கொண்டு நாம் வழி பிறழ்வதோ, அல்லது உருவம் இல்லை என்று தாறுமாறாகப்பயணிப்பதோ, பிறவிப்பயனைக் கேள்வி குறியாக்கி விடும். மனம் ஒடுங்குவதற்கு தியானத்திலே ஆழ்ந்து செல்லவேண்டும்.

இந்த உடலுக்கு குருவானவர் மரணத்தை தியானத்திலேயே உணர்த்துவார். அந்த நிலையை உணர்ந்து முனைப்பை ஒடுக்கவேண்டும்.

உயிர் உடலை விட்டு பிரிவதை குருவானவர் உணர்த்தும்போது, கிடைத்த உணர்வை முன் படர்ந்து வாயால் சொல்பவர் எவரும் இல்லை... காரணம், மனம் என்ற நிலையைக்கடந்த பிறகு எஞ்சுவது அறிவு என்ற ஒன்றே...

பல மார்க்கங்கள் இறையை உணர... எண்ணங்கள் கோடி என்றால், அத்தனை கோடி எண்ணங்கள் இறைவனைப்பற்றியும் சொல்லமுடியும்... கடைசியிலே ஏற்பட்டது என்னவோ, தன்முனைப்பு ஒடுங்கி, இறைவனே மிஞ்சி நிற்கிறான் என்று சரணடைந்தார் என்றே தான் இருக்கமுடியும்... சரணடைந்தாலும், தான் தனது என்ற தன்முனைப்பு அடங்குவது கூட முயற்சியாலே தான் வரும்.

குண்டலினி தியானத்தால் நாம் வாழும்போதே இறையோடு கலந்து நின்று விழிப்பிலேயே வாழ்ந்து காட்ட முடியும் என்பதைக்காட்டிய குருவின் அருளானது, தியானத்திலே ஒடுங்கும் எவரையும் ஏற்று இறை அறத்தை அளித்துக்கொண்டே இருக்கும். எஞ்சி நிற்பது குரு அருளே.

மரணத்தைக்கடந்தும் வாழும் குருவின் பிள்ளைகளை பதிவு செய்யவேண்டும். அந்த உயர்புகழ் குருவிற்க்கு சீடர்களால் கிட்டுவதைப்பார்த்த பிறகு உடல் என்ற கூட்டைக் கடந்து விடல் என்பது சுய முயற்சியால் நடந்து விடவேண்டும். அதற்கு குருவின் அருளை எப்போதும் வேண்ட வேண்டும்...

வாழ்க வளமுடன்.

Sunday, December 12, 2010

Will world destroy in 2012??

குருவே சரணம்.


வாழ்க வளமுடன்.


இயற்கையை ஒட்டியே இருக்கும் எந்த நிலையும், நமக்கு இயற்கை சம்பந்தமாக அறிவிலே பிரதிபலிக்கும்.


ஐந்தறிவு விலங்குகளும், பறவைகள் போன்ற ஜீவராசிகளும் கூட பூகம்பம் உள்ளிட்ட இயற்கை விளைவுகளை அறிந்து கொள்ள முடிகின்றது...

இயற்கையை ஒட்டிய ஒன்று தான் இறை நிலை தவமும். தவத்திலே ஆழ்ந்து செல்ல செல்ல, இயற்கையை ஒத்து ஏற்படும் சில மாற்றங்களை நுண்ணிய அளவிலே நின்று புரிந்து கொள்ள முடியும்.

கோரக்க சித்தரின் ஜீவ சமாதி பீடம் இருப்பது வடக்கு பொய்கை நல்லூர் என்ற கிராமம்... இது நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணி தலத்திற்கும் நடுவிலே உள்ளது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி எல்லாம், சுனாமியினால் கடல் நீர் சூழ்ந்து கோர தாண்டவம் ஆடிய போது, இந்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் மட்டும், கடல் நீர் உள் வாங்கியது....

அப்போது, சுற்றி உள்ள கிராம மக்களை எல்லாம் அந்த கோயிலை சுற்றி வைக்கப்பட்டிருந்தார்களாம்...

கடலை ஒட்டிய பல கிராமங்கள் அழிந்த போது, ஜீவசமாதி அருகில் கடல் நீர் கூட போக வில்லை... ஏன்? இயற்கையை ஒட்டிய சித்தருக்கு தெரியாதா இயற்கையை பற்றி? அதற்கேற்றார் போல அமைப்பாக அந்த இடம் அமைந்துள்ளது.

சமீபத்திலே, கோதாவரி நதி வெள்ளத்திலே சூழப்பட்ட ராகவேந்திரர் பிருந்தாவன ஆலயம் பற்றி செய்தியில் படித்த போது, ஆச்சரியமான தகவல் வந்தது... என்னவென்றால், சமாதி ஒட்டிய இடத்திற்கு மட்டும் நீர் உள்ளே செல்லாத வகையிலே வெள்ளத்தின் அளவு இருந்தது தான். 9 அடி நீர் இருந்ததால் சுற்றுச்சுவர் எல்லாம் இடிந்தது... ஆனால், சமாதிக்கு ஒரு சிறு கீரல் கூட ஏற்பட முடியாத வகையிலே தான் வெள்ளத்தின் அளவும், நீர் உள்ளே புகுந்ததன் அளவும் என அனைத்தும் இயற்கை அமைத்தது...

இறை நிலையிலே இருக்கிற போது, இயற்கையின் எந்த விளைவையும் ஏற்கும் மனோ நிலையில் நாம் இருப்போம். அதே போல இயற்கையாக நமக்கு என்ன செய்ய வேண்டுமோ அதுவே நிகழும் என்ற சரணாகதி கூட இருப்பதால், நிகழும் எதையும் எதிர்ப்பின்றி நாம் ஏற்போம். ஆனால், நமது குரு சொல்வது போல,


எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

அதாவது, இறை தரிசனம் என்ற தவத்தின் பலனானது, நாம் சராசரியான, இப்போது புரியாத அளவிலே இருப்பது போல இருக்க மாட்டோம். இயற்கையோடு ஒட்டி மன அலையும் விரிந்து இருக்கும்.. அதே போல, இயற்கையை புரிந்து கொள்கிற அளவிலே இருப்போம்.



இந்த கேள்வியின் அடிப்படை என்னவென்று பார்த்தால், இந்த உடலே நான் என்கிற முனைப்பு ஒன்றே தான் இருக்கும்.


உடலைத் தாண்டிய தியானத்தால் மனமானது உயிராக, அதுவே அறிவாக, பேரறிவாக ஒவ்வோர் கட்டத்திலே தன்மாற்றம் பெற்று தன்னிலையை உணர்ந்து அமைதியை, ஆனந்தத்தை பெறும்.

அந்த பேரறிவான இறையிலே தோய்ந்த நிலையிலே, இது போன்ற எந்த வித எண்ணமும் உள் நுழையாது... நமது கேள்வி எப்போதுமே முட்டாள் தனமானது அல்ல என்றாலும், நாம் சிறு வயதில் இருந்து கேட்ட கேள்விகள் அனைத்தும் இப்போதும் கேட்பதில்லை அல்லவா? கேள்விகள் என்பது மனது பக்குவம் பெறுவதை ஒட்டி மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அது போல உயர்ந்த தியான அனுபவத்திலே நமக்கு இந்த மாதிரியான கேள்விகள் உள்ளே நுழையாது...

பேரறிவிலே, தன்னை அன்றி, தன்னைத் தவிர எந்த பொருளும் இல்லை என்று ஆனந்தத்திலே நிறைவிலே ஒடுங்கும் அறிவு. அப்போது, பழக்கத்தால் இருந்த பல விசயங்கள் எல்லாம், தானாகவே அறுந்து விழும்... அப்போது, இறை நிலையிலே, இன்பம், துன்பம், நோய், சிக்கல்., அது இது, ஆண் பெண், உயர்வு தாழ்வு, அச்சம் வீரம், என்ற எதுவும் இல்லாத நிலையிலே நாம் இருப்பதால், இது சம்பந்தமான எதுவும் நமக்குள் இருக்காது போகும். அப்படி நிலைக்காது போகும் எனில், நாம் இப்போது நினைக்கிறோமே, இதெல்லாம் அங்கே இறை நிலைக்குள்/ தனக்குள் கிடையாது என்று உண்மையில் இறையில் தெளிவாகும் போது தான், கேள்வி என்ற அசைவு என்பதை விட மௌனமே சிறந்தது என்று அறிவு ஒடுங்கும்.

அதுவரை, உடல் சார்ந்த கேள்விகள் எழவே செய்யும்.

இந்த உடல் அழியக்கூடியது.. ஆனால் இறை நிலையிலே நம்மை கொண்டு செல்ல ஒரு வாகனம் தான் இந்த உடல்.

முன்பு 2000க்குள் உலகம் அழியும் என்று இருந்தது... சிறு வயதில், உலகம் அழிந்தால் நான் என்னாவேன், இந்த உடல் என்னாகும் என்ற அழுத குழந்தைகளில் நானும் ஒருவன். ஆனால் 2000ம் ஆண்டு பிறந்த போது அந்தக்கணத்திலே, புது வருடக் கொண்டாட்டத்திலே இருந்த போது எனக்கு அந்த ஞாபகம் வந்து சிரிப்பு வந்தது...

இப்போது 2012ம் ஆண்டு ஒரு கணக்கு... இறை நிலைக்கு மட்டும் தான் எப்போதும் நிலைக்கும். மற்ற அனைத்தும் அழிந்து விடும். இயற்கையை விட சக்தி மிக்கது வேறு ஏது? இறை நிலையிலே, பிறப்பு இறப்பு கிடையாது.

போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியனே என்ற மாணிக்கவாசகரின் வரிகள் சத்தியம்.

நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளத்தில்
ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தால் அன்றி
யார் பெறுவார் யார் தருவார் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக்கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்...


என்கிற நமது குருவின் வார்த்தையை உள் நுழியுங்கள்..

தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை...

இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்?


சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தான் உடல் என்ற பற்றிலே இருந்து மீண்டு செல்ல முயற்சிக்காதவர்கள். அவர்களுக்கு, குரு வும் கூட உடல் என்ற கணக்கை விட்டு அகலாதவர்கள்...

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், குருவை அணுகாதவனும், குருவை விரும்பாதவனும் எதுவும் பெறமாட்டார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், குருவை அணுகுதல் என்ற ஒன்றை தொடங்காதவர் கேள்விகள் எல்லாம், மழலைகள் போலவே இருப்பர். உடல் மட்டுமே வளர்வது கூட அறியாது செயல்கள் செய்தால், குரு என்ன தான் செய்வார். இயல்பூக்கத்தை காண்பித்தால் கூட திருந்தாதோரை இயற்கை விட்டு வைக்காது.

வாழ்க வளமுடன்.

108 Siddhar's regarding...

அன்புள்ள நண்பர்களே

வாழ்க வளமுடன்.


தியானத்திலே உறைந்து அருள் வெளியோடு இணைந்து நிற்கின்ற குருவின் காலடியிலே சிரம் வைத்து வணங்குகிறேன்.

தியானத்திலே குருவை நினைந்து சரணடைந்த சீடனுக்கு நிகழும் எதுவும் கூட குருவின் நிழலிலே தான் நிகழ்கிறது.


தவத்திலே சரணடைந்து குருவோடு கைகோர்த்து உயர்கிற போது, குருவை சீடன் பிடிக்க, சீடனும் குருவை பிடித்துக் கொள்கிறார். இந்த நிலையிலே குருவை விட்டு தப்பிக்க முடியாத/ ஒரு குழந்தையை தாயானவளால் அரவணைக்கப்பட்ட நிலையினை சீடன் எப்போதும் பெறுகிறான்.

பௌதீக உடலைக்கொண்டு எங்கு தான் போனாலும், ஆழ்ந்த நிலையிலே குருவே தான் சீடனை வழி நடத்திக்கொண்டிருகிறார். இதிலே குரு பௌதிக உடலோடு நம் அருகிலே இருக்க வேண்டிய தேவை இல்லை! எண்ணற்ற ஆண்டுகளுக்குப்பிறகும் கூட ஒரு சீடன் தோன்றி குருவை அணுகினால் கூட, குருவின் உதவி உடனடியாக கிடைக்கும்! இது உண்மை. நியதி! விதி!

தவத்திலே நீ இதை செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும், உன் நிலை உன் தளம் என்று துல்லியமாக அனைத்தையும் குருவே சீடனுக்கு ஏதோ ஒரு வழியிலே தொடர்ந்து நடத்திக்கொண்டே தான் இருப்பார்!

நாம் தொழில் செய்கிறோம் அல்லது வியாபாரம் செய்கிறோம் அல்லது வீட்டிலே கடமையினை செய்கிறோம் என்று எந்த நிலையாக இருந்தாலும் கூட, நமது ஆழ்ந்த அறிவிலே குருவே தானே இருப்பார்?!

நீ எங்கே போனால் என்ன? உன் பிறவிக்கு என்ன தரவேண்டுமோ அதை நான் செய்யாமல் விடமாட்டேன் என்று குருவே தான் தொடர்ந்து நமது அறிவிலே தோய்ந்து இருப்பார்... என்றாவது தியானம் ஆழ்ந்து நிகழ்ந்தால் அப்போது பிறவிப்பயனைத் தரும் வரையிலே நாம் குருவையும், குரு சீடனையும் விடாத நிலை தான் உண்மையான சரணடைதலிலே நிகழும்!

உள்ளத்தின் உள்ளே பல தீர்த்தங்கள் என்று திருமூலர் பாடி விட்டார்! அதை நமக்கு உணர்த்துவது குரு மட்டும் தானே?!

நமது குருவானவர் ஆசிரியப்பயிற்ச்சி தரும் போதெல்லாம் சொல்வாராம்... நீங்கள் சூக்கமப்பயிற்ச்சி செய்யும் போது உங்கள் வீட்டிற்க்கு சூக்குமமாக செல்வதற்க்கு முன் நேராக சித்தர் தலங்களுக்கு சூக்கும நிலையிலே சென்று தரிசித்து பிறகே உங்கள் வீட்டிற்க்குச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்!

குருவே தன் வாயால் சித்தரின் தலங்களுக்கு செல்லலாம் என்று சொல்லி இருக்கிறார் என்கிற போது திரு சேர்மா சொல்வது போல தடமாற்றம் என்ற நடுக்கங்கள் எல்லாம் நமக்கு நிகழுமா?

சரணைந்து விட்டால் இந்த நடுக்கங்கள் எல்லாம் போய் விடும்! வெறுமனே சரணடைய வேண்டும்!

புலி வாயிலே அகப்பட்ட இரை விலங்கு எப்படி புலியின் வாயில் இருந்து தப்பிக்க முடியாதோ அது போலத்தான் சரணடைந்த சீடனின் நிலமையும்" என்று ரமணர் சொன்ன வார்த்தையை நெற்றிப்பொட்டிலே ஆணி அடித்தது போல பதிந்து கொள்ள வேண்டும்!

குருவே தான் நமக்கு அனைத்தையும் நிகழ்த்துகிறார்! நாம் வெறும் கருவியே! செய்கிற செயல்கள் நாம் முனைப்போடு நாம் செய்வது போல புலன் அறிவால் தோன்றினாலும், எல்லாவற்றையும் குருவே தான் செய்யவைப்பார்... சீடனுக்கு எது தேவையோ அதை குரு எப்படியும் நிகழ்த்துவார்.

இப்போது, நாம் ஒரு சித்தர் கோவிலுக்குப்போகிறோம்... தியானம் செய்கிறோம்... அப்படியே நமது குருவின் சமாதிக்கு அருகிலே அமர்ந்து தவம் செய்கிறோம்... அப்படியே நமது மன்றத்திலே, நமது வீட்டிலே என்று எங்கும் தியானம் செய்தாலும், நமக்குள் எதை எப்போது தரவேண்டுமோ அதை குருவே தான் தருவார்... காரணம் நாம் சரணைந்து இருக்கிற காரணத்தினால்!

எங்கு வேண்டுமானாலும் போய் தியானம் செய் ஆனால் பிறவிப்பயனான இறை என்ற வலிமையை சரணடைந்த கணத்திலே இருந்து குரு நமக்குள் தருவதற்க்கு எல்லாம் வகுத்து விடுகிறார்!

எங்கும் தியானம் செய்யுங்கள்! ஆனால் குருவிடம் சரணடைந்தோமா?! அதுவே தான் முக்கியம்...

எந்த சூழ்னிலையோ, குரு நம்மை கைவிட்டு விடுவாரா என்ன? அப்படி ஒரு பயம் இருக்கிறதென்றால் இன்னமும் குருவின் மேல் நம்பிக்கையும், குருவிடம் சரணடைதலும் நிகழவே இல்லை என்று பொருள்! நல்ல தவத்தின் பலன் தான் நடுக்கம் இல்லாத, பயம் கடந்த நிலையைத்தரும்!

சரணடைந்த சீடனுக்கு தவறு ஏதாவது நிகழ குரு விட்டுவிடுவாரா? அல்லது தவறாக ஒன்றை செய்ய குரு சொல்வாரா? செயல்கள் அனைத்தும் குருவே தான் முடிவெடுப்பார்!இயற்கையிலே இயல்பாக நாம் செய்கிற ஒவ்வொன்று முனைப்பு இன்றி நம்மை சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்க்கிற வரை குரு நம் கையை விட்டு விடுவதே இல்லை!

தெய்வ நிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்
தெய்வ நிலை யதனை வெளி ப்ரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்

தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்துகொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப்பற்றி
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்.

என்று நமது குரு சொன்னதை மனதில் கொள்ளுங்கள்!


குருவிடம் சரணடையுங்கள்! நீங்கள் எங்கு சென்றாலும் குரு கூடவே இருக்கிற உண்மை உங்களுக்குள் தெளியும்!

வாழ்க வளமுடன்.


அன்புள்ள திரு சேர்மா


நமது குரு நமக்குக்கற்றுக்கொடுத்துள்ள குண்டலினி தியானம் என்பது பல காலமாக உள்ளது தான். அந்த தியான முறையை இன்றைய பல மகான்களும் கூட தங்களுடைய புரிந்துகொள்ளல் மற்றும் அனுபவத்திற்கேற்றார் போல இன்றைய உலகத்திற்க்கு கற்றுத்தந்து கொண்டே தான் இருக்கிறார்கள்!

நமது குருவானவ்ர் நமக்கு குண்டலினி தியானத்தினையும், உடற்பயிற்சி மற்றும் காயகல்பம் என்ற அனைத்தும் எண்ணற்ற சித்தர்களின் அறிவுரைகளுக்கேற்பவே தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்!

நமக்கு இந்த தியான முறை என்ற பழம் கையில் கிடைத்து விட்டதால், பழத்தை எடுத்துக்காட்டிய சித்தனை நிந்திக்கும் தவற்றினை செய்ய வேண்டியதில்லை!

எதற்கும் கேள்வி கேட்பது அறிவின் முதற்படி
எல்லாவற்றிற்கும் ஒத்துப்போவது அறிவின் உச்சப்படி!

என்ற வார்த்தையை ஞாபகத்திலே கொள்வது நல்லது!

நமக்கு நம் குரு கிடைத்து விட்டார்! ஆனால் மற்ற அனைத்து மகான்களும் தவறு அல்லது தேவை இல்லை என்றால் நாம் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறோம்? வெறும் ஆட்டுமந்தையா நம் சக மனிதர்கள்? 20 சித்தர்கள் போதும் என்று உங்களுக்கு சொன்னது அன்பொளி எனில் மற்ற சித்தர்களை பார்க்கவேண்டாம் என்று சொன்னதும் அன்பொளியா? குருவா அப்படி சொன்னார்? என்று அப்படி சொன்னார்?

அந்த 20 சித்தர்களுக்குள் இல்லாத வள்ளலார், நமது குருவின் உடலில் சில காலம் இருந்ததாக நமது குரு சொன்னாரே அதிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது!

வள்ளலார் நமது குருவிற்க்குள் இருந்ததை நம்புகிறீர்கள் எனில் ஏன் நீங்கள் வள்ளலாரை உங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை?

வேண்டுமானால் 20 போதும், 30 போதும் என்ற உங்கள் பரிந்துரைகளுக்கு எல்லாம் கட்டுப்பட்டா சித்தர்கள் இருக்கிறார்கள்?

உண்மையான ஆன்மீக முன்னேற்றம் என்றால், அனைத்து மகான்களின் தியான அனுபவத்திலும் உள்ள ஒற்றுமையை நாமும் தியானித்து இறையை உணர்ந்தால் தான் கிடைக்கும்! எல்லாவற்றிற்கும் ஒத்துப்போவது அறிவின் உச்சப்படி என்ற தன்மை உண்டாகும்!


ஒருவர் தியானத்திலே இறையோடு உயர்ந்தார் எனில், எப்படி இறையை உணர்ந்த சித்தர்களை எல்லாம் ஒதுக்கமுடியும்?

நாம் வாழும் போதே, நன்றாக தியானம் செய்து சமாதி அனுபவம் பெற எப்படி ஆழ்ந்து செல்ல வேண்டி இருக்கிறது?


சத்சங்கத்வே நிஷ்சங்கத்வம்
நிஷ்சங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்சலதத்வம்
நித்சலத்வே ஜீவன் முக்தி!

ஆதி சங்கரரின் இந்த வரிகளிலே கூட உயர்ந்தோரின் தொடர்புகளால் தான் நமக்கு முக்தி தரும் என்கிறார்!

எங்கெங்கோ கூட்டம் போட்டு சர்க்கஸ் போல உடலை வளைத்து சுற்றி முண்டாசு கட்டிக்கொண்ட கிராமத்து மனிதனைப்போல அன்னாந்து பார்க்கும் இன்றைய நமது மகக்ளை வைத்துக்கொண்டு நாம் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் செயல்களை எல்லாம் அருள் தந்தையின் வழியிலே என்று போட்டுக்கொண்டு சொல்வது எல்லாம் சரியாக வெகு நாள் நீடிக்காது! பார்த்து நடந்து கொள்ளுங்கள்!

மாகுரு தன ஜன எவ்வன கர்வம்
ஹரதின மேனா காலஹ சர்வம்!

நண்பர்கள், பணம், புகழ் என்ற அனைத்தும் நிலையானது அல்ல! காலம் என்ற இயற்கை நினைத்தால் ஒரு கணத்திலே அனைத்தையும் மாற்றி வைத்து விடும் என்று ஆதி சங்கரர் சொல்கிறார்!

நமது குருவின் பெரும்பாலான பேச்சுக்களின் தொடக்கத்தில், பெரியோர்கள் ஞானிகள் மற்றும் குருவின் பாதத்திலே மனதை வைத்து வணங்கியே தான் பேசுவார்!

அப்பேர்ப்பட்ட அருள்தந்தையின் வழியில் செல்வதாக சொல்லிக்கொண்டு சித்தர்களை புறக்கணிப்பதெல்லாம் என்னமோ குருவின் வழியாக தெரியவில்லை! நம்மை நாம் தாழ்த்துவதை தவிற வேறொன்றும் இல்லை!

21ம் நூற்றாண்டின் தத்துவ ஞானி/ சித்தர் என்று போற்றப்படுகிற நமது குருவின் சமாதி இந்த பட்டியலில் இல்லையே? அதற்க்கு என்ன செய்வது? தேவை இல்லையா உங்களுக்கு? அங்கு போய் தியானம் செய்யும் போது நமக்கு எதுவும் நிகழாதா? குருவின் முன் தியானம் செய்யும் எங்களை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

திரு சேர்மா அவர்களே.


நாம் மன்றத்தில் கூட்டுத்தவம் நடத்தும் போது எல்லாம் குரு வணக்கம் பாடுகிறோம்.

அதிலே

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்தது தான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்க்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக்கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவால் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோ நினைவுகூர்வோம்.

என்ற நம் குருவின் கவியை மறக்காமல் பாடுகிறோம்.


வள்ளல் பெருமானின் உயர்வை நமது குரு சொன்ன விதம் தான் நாம் கவனிக்கவேண்டியது. ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் என்று சொல்லும் போது, நமக்கு முன் தோன்றிய எண்ணற்ற மகான்களின் எழுத்துக்களும், ரிஷிகள் எழுதிய வேதங்களும் நம் கண் முன்னே இருக்கிறது..

இதிலே எத்தனை பேர் ஆழ்ந்து அறிவிலே நிலைத்தார்கள்? வள்ளலார் அவ்வறிவிலே ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் என்கிற போது அது எப்பேர்பட்ட சாதனை! எப்பேர்ப்பட்ட ஆன்மீக உயர்வு! வள்ளலார் எப்படி வாழ்ந்து ஆனந்தத்திலே இருந்திருப்பார்?! அந்த உயர்வு ஒவ்வோர் மனிதர்களுக்கும், அதிலே நம்மைப் போன்ற தியானப்பயிற்சி எடுத்தவர்களும் கிடைக்கும் படி இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் உயரவேண்டும்! நான் ஆசிரியன் என்று நான் குரு என்னை வணங்க வேண்டும்...

ஒவ்வோர் தவத்திலேயும் குருவிற்க்கு வணக்கம் என்கிற இடத்திலே நமது குரு தன்னைத்தான் அங்கே நினைக்கவேண்டும் என்று தன் வாயால் எப்போதாவது சொல்லிக்கேட்டிருக்கிறோமா? அவரே இவ்வளவு ஆழம் பணிந்து, அறிவிலே நிலைத்தோர் அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் என்ற அடக்கத்துடன் சொல்லும் போது நாமெல்லாம் எப்படி இருக்கவேண்டும்?

குருவின் தாத்பரியத்திற்க்கு சான்றாய் இருக்கவேண்டியது நாம்! இந்த ஆசிரியர், துணைப்பேராசியர் என்ற பட்டமெல்லாம் நமக்கு யார் தந்தது? குருவின் பிச்சை தானே! குருவின் காலடியிலே எப்போதும் மனதை வைத்து உயரவேண்டிய நெறியிடன் வாழ வேண்டிய நாம், சொல்லித்தந்த சித்தர்களின் பாடலை வைத்து அவர்களுக்கே இழுக்கு ஏற்படுத்துவது எப்படி நல்ல வினைகளை நமக்குத்தரும்?

ஒவ்வோர் செயலுக்கும் விளைவு உண்டு... இயல்பூக்கம் உண்டு. நாம் மனதால், அறிவால் கடந்திருக்கிற ஒவ்வோர் அசைவையும் துல்லியமாக குரு அறிவார்! அறிவியல் பேசுகிற மக்கள் இருக்கலாம். கண்ணை மூடி அமர்ந்தால், முதலிலே சரணாகதி வேண்டும் இல்லாவிடில் அங்கே தூக்கமும்,பொழுது போக்குதலுமே தான் இருக்கும்!

இதைக்கற்றேன், ஈர்ப்பு விசையை பற்றி பேசுவேன் என்றதெல்லாம் ஒரு ரோபோ கூட செய்யும்...


இங்கே, நமது அன்பர் திரு அருண் அவர்கள் முந்தைய கட்டுரையிலே.

தூக்கமில்லை விழிப்பில்லை துரிய தவத்திலே ஆழ்ந்திருந்தேன்
தோன்றினார் ஒருசித்தர் தெரியுமா நான்யார் என்றார்
நாக்கு எழவில்லை இவர் போகரோ என நினைந்தேன்
நறுக்கென்று பேசினார்...

என்ற கவிய்லும்,

என்று எனை இராமலிங்க வள்ளல்பெருமானார்
எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத்தூய்மையாச்சு

இன்று எந்தன் மன நிலையோ வள்ளற் பெருமானார்
எந்த செயல் செய்யென்று உணர்த்துவாரோ அதுவே
நன்று எனக்கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்


என்ற கவி எழுதிய நமது குருவிற்க்கு அன்று முதல் எழுதிய கவிகள் எல்லாம் தான் தத்துவமழையாய் நமக்கு புத்தகமாய் நம்முன் நிற்கிறது!

நமக்கு குரு கிடைக்க உதவிய அன்னை லோகாம்பாள் அவர்களுக்கும் அருளே குணமாகக்கொண்ட மகானுடைய ஆவி தொடர்பு கொண்டுள்ளது! சில சமயம் அன்னைக்கு மயக்கம் வந்து சாய்ந்து விடுவாராம்! அதன்பிறகு அந்த ஆவி பேசத்தொடங்கும்! அதன் மூலம் எங்கள் குடும்பத்திற்க்கு எவ்வளவோ பாதுகாப்பும் நன்மைகளும் ஏற்பட்டன" என்று குரு வாழ்க்கை விளக்கம் புத்த்கத்திலே சொன்னார்!

பிறகு அந்த ஆவியுடன் குருவே உரையாடி ஆராய்ச்சி செய்து பிறப்பிற்க்கு முன்னும் பின்னும் உயிரின் நிலை என்ற ஆழ்ந்த புத்தகத்தினை நமக்குத்தந்தார்கள்!

போகரை, வள்ளலார் போன்ற மகான்கள் என்று தெளிவாகச் சொன்ன குரு, இந்த மகான் பெயரை குறிப்பிடவே இல்லை! அப்படியும் கூட இறையானது நமக்குத் தேவையானவற்றை இயல்பூக்க அடிப்படையிலே உரியவர்களின் மூலம் நமது குருவிற்க்கு அருளியது!

எண்ணிலடங்கா மகான்களின் கருணையால் எவ்வளவோ உதவிகள் மனித சமுதாயத்திற்க்கு உயர்வு உண்டாகி இருக்கிறது...

அவ்வை மூதாட்டி தமது வினாயகர் அகவலிலே குண்டலினி எழுப்பும் கலையை அறிந்ததாக தெளிவாக சொல்கிறார்! ஆதி சங்கரர் துரிய தவம், துரியாதீத தவம் என்று அனைத்தையும் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்...

குருவானவர் 30.12.1968ம் தேதியிலே " மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து " புத்தகத்திலே பக்கம் 133ல் எழுதினார்!

சித்த நிலை உணர்ந்தோர்கள் உதிர்த்த சொற்கள்
சிறப்பறியாரால் விளக்கம் செய்யப்படும் கால்
எத்தனையோ குழப்பங்கள் உண்டு பண்ணும்
இறையுணர்வீர் உம்மறிவே விளக்கம்கூறும்!

என்றார்.

வாழ்க வளமுடன்.

Reincarnation- Regarding

குருவாழ்க.


அன்புள்ள திரு மதன் அவர்களே...


ஆன்மா என்பது என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும் எனில், குருவின் அருள் முதலில் வேண்டும். குரு என்ற வெளிச்சம் இல்லாவிடில் எதனையும் உணரமுடியாது.

ஆன்மா என்பது ஒன்றே..... மேலும் தியானத்திலே இறை நிலையிலே லயித்தால், எண்ணம் குறைந்து, மனம் உயிராக தன்மாற்றம் பெறும். அந்த உயிரானது மென்மேலும் உயர்ந்து இறை நிலையிலே லயிக்கும் போது உயிரே அறிவாக உணரப்படும். எப்போது மனம் உயிராக தன்மாற்றம் பெற்றதோ, அப்போதே மனம் என்ற ஒன்று தன் இயக்கத்தினை நிறுத்தி விட்டிருக்கும்.

மனத்திலே இருந்த கேள்விகள் எல்லாம் இங்கே வேலை செய்யாது எனினும், அடி ஆழ் மனதிலே இருந்த பலவித நிலைகளுக்கு விளக்கம் தானாகவே தெளிந்து போகும். கவலை வேண்டாம்.

இறை நிலையிலே அறிவாக லயித்தவுடன் தியானித்தாரே அவரின் இருப்பானது இறை நிலையே என்று ஒன்றாகிப்போகும் போது தான் ஆன்மஞானம் கிட்டும். அதுவே ஆன்ம நிலை. அங்கே நிலைத்தால் முக்தி. வீடு பேறு.

இப்போது திரும்பி வருவோம்.. (reverse gear...)

ஆன்ம நிலையிலே இருந்து உயிராகி, உயிரே மனமாக ஆனவுடன் மீண்டும் எண்ண அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்... மனம் உயிரானவுடன் எண்ணமற்று போன பிறகு மீண்டும் இங்கே தான் எண்ணம் வேலை செய்கிறது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.

எண்ணங்கள் இது வரை எங்கே போயிருந்தது? உங்களுக்கு இப்போது இருக்கிறதே அது போல கேள்விகள் என்ன ஆனது? இறை நிலை தவத்திலே, கேள்வி கேட்க மனம் இருந்ததா? இல்லை அல்லவா? ஆன்ம நிலையிலே பிறப்பாகிய எண்ணமும் இல்லை அதன் இறப்பும் இல்லை. .

உங்கள் உடல் எங்கேயோ உட்கர்ந்து கொண்டு இருக்கிறது... ஆனால் மனம் உயிராகி அதுவே ஆன்ம நிலையிலே லயித்துவிட்டது. எண்ணம் இருந்தால் தான் பிறப்பைப்பற்றி கேட்கமுடியும்! எண்ணமில்லையேல் எது பிறக்கமுடியும்?? புரிகிறதா? நமது எண்ணமே தான் பிறப்பும், இறப்பும். ஆன்மாவின் நிலையிலே பிறப்பு இறப்பு என்று கட்டுப்படுத்த எதுவும் இல்லை.ஆகையால் ஆன்மா அழிவில்லாதது.


ஆன்ம நிலையிலே அசைந்தவுடன் தானே எண்ணம் பிறந்தது? ஆக மறுபடியும் பிறந்து விட்டது அதுவே. ஆன்மாவில் எண்ணம் இயங்க வாய்ப்பில்லை. தனது இருப்பைப்பார்க்க தியானித்தவர் ஆன்ம நிலையில் லயிக்கும் அளவுக்கு முன் வினை பின்வினைகள் எல்லாம் கழிந்து போகும். தேவை குருவிடம் தொடர்பும், பணிவும்.

குருவிடம் இருந்தால், எந்த கர்மத்துக்கும் பயப்படவேண்டியதில்லை... உடல், மனம் வரை தான் இந்த கருமங்கள் எல்லாம்... அருட்பெரும் சோதியாம் அந்த ஆன்ம நிலையிலே இருந்தால், கருமத்தை நினைக்கும் மனம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டிருக்கும்.

ஆன்ம நிலையிலே தன்னை அன்றி வேறு எதுவும் இல்லை.. அங்கே அனுபவிப்பது,அனுபவிக்கும் பொருள் என்று நிலைகளைக்கடந்தே தான் சரணாகதி ஏற்படுவதால், அனுபவிக்க எவரும் இல்லை. இருப்பது சுத்தவெளியாகிய பேரறிவே.

எது நீடித்து நிற்கும் என்றால் குரு என்ற இறை நிலையே... குரு, ஆன்மா, இறை நிலை மூன்றும் ஒன்றே.


2. நமது சூக்கும ஒளி உடலைப்பற்றி :: அதனைப்பார்த்து அனுபவித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இந்த மாதிரி பல நுண்ணிய விசயங்கள் வழியிலே வந்து போகும்... இதிலெல்லாம் மனதை செலுத்தாத அளவுக்கே தியான உயர்வு கிட்டும்.

அனுபவிப்பவனுக்கு, அனுபவம் அகந்தையான தன்முனைப்பையே தரும். குருவிடம் ஒடுங்காத வரை இதெல்லாம் பார்த்துவிட்டு ஒன்றும் பெறப்போவதில்லை.


உடலினில் உள்ள ஒளி ஒலியைக்காண
உனக்கின்பமிகுமெனிமும் இதற்கு மேலாய்த்
தொடர்புகொண்டு பலபொருளில் கண்டு விட்டோம்
சுகமென்ற தத்தனையும் சலிப்பும் கண்டோம்...

கட உள் நீ. இவை அனைத்தும் அறிந்து தாண்டி
கருத்தொடுங்கிக்காண்பவனே தனிக்குமட்டும்
திடமடைந்து அறிவு லயமாகி நிற்கத்
தெளிவடைவாய் கற்பனைபோம் தேவை முற்றும்...


ஒரு விதத்திலே நாம் பிறப்பும் மறுபிறப்பும் என்பது நமது மனத்தினால் கண்டுபிடிக்கமுடியாத நிலையிலே அதை மறைக்கப்பட்ட உண்மை என்ற பகுதியிலே விட்டு விட்டு, மனதால் திரும்ப திரும்ப நினைத்துப்பார்த்து ஆச்சரியத்துக்குள் உள்ளாகிறோம்.

எண்ணங்கள் என்பது எங்கே இருந்து தொடங்குகிறது என்று ஆராயும் போது, எண்ணத்திற்க்கு முன்னும் பின்னும் எண்ணமற்ற நிலை இருப்பதைக்காணலாம். எண்ணமற்ற நிலை என்பது மௌனமே. எண்ணங்கள் அதிகமாக இருக்கும் போது, நுணுக்கமான மௌனமானது விழிப்புடன் கவனிக்க முடிவதில்லை.

தியானத்திலே முன்னேற்றம் ஏற்படும் போது, திடீரென்று ஒரு எண்ணம் உதித்து நம்மை தடுமாற வைக்கும் போது, எண்ணம் என்பது மௌனத்தை விட்ட இடத்திலே வருகிறது என்பது தெளிவாகும்.

எண்ணங்கள் தொடங்கும் முன்னும், எண்ணங்கள் ஒடுங்கும் போதும் மௌனமே இருக்கும்... மௌனமே இறை நிலை.

இறை நிலையோடு தமது முனைப்பு அடங்கும் போது, அறிவது,அறியப்படுவது என்ற சாட்சி அறிவைத் தாண்டிச் சென்று விடுவதால் அங்கே விவரிக்க முடியாத நிலையைத் தான் ஆன்ம நிலை. இதுவரை ஆன்ம நிலை என்ற விளக்கம் தனித்தே இருப்பதற்குக்காரணம் இதுவே.

ஆன்மா என்பது எப்போதும் எந்த கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் சாராமல் தனித்தே இருக்கிறது. இங்கே மௌனம் அயராவிழிப்பிலே தொடர்ந்து அளவற்று, எல்லையற்று இருந்து தனித்து இருக்கிறது....

தியானத்திலே நமக்குள்ளே உள்ளவற்றைக்கொண்டு உயர்ந்து சென்றால், எவரிடமும் கேட்காத பலவிசயங்கள் நம்முடைய அடி ஆழத்திலே பதிந்து இருப்பதும், அதன் விளக்கமானது அனைத்தும் தியானத்திலே உணர்த்தப்படும் நிலை வருவதையும் காணலாம்.... எந்த ஒரு கேள்வியும் நமக்குள்ளேயே விடையாய் எடுத்துத்தந்த பிறகே தான், இனி அறிவதற்கு எதுவும் இல்லை என்று ஆன உடன், குருவே நம்மை இழுத்துக்கொண்டு இறைவெளி என்ற கருவிலே அழைத்துச்செல்வார்...

ஆன்ம நிலை உணரும் போது, விழிப்பு நிலையோடு இருக்கும் வல்லமையானது பழக்கமாகி ஒட்டிவிடும் சீடனுக்குள். அதன் பிறகு, எது நிகழ்ந்தாலும் சீடனுக்குத் தாயும் தந்தையும், குருவே என்றாகி, கருவுக்குள் அடங்கிவிடும்.

குருவானவரை பற்றிக்கொள்ளும் அளவுக்குத்தான் எதுவும் உள்ளே இறங்கும்... எல்லாம் வாயால் சொன்னால் மறதியால் போய் விடும்... அறிவால் உணர்த்தும் குருவிடம் சென்றால் சரியாகும்.

முன் வினைகள் என்ற ஒன்று உண்மையிலே இருப்பது உண்மை என்றால், குருவின் முன் வரட்டும் என்று குருவோடு இருந்து தியானம் செய்தால்... எண்ணத்தின் அளவுக்கே தான் எந்த முன்வினைகளும் நமக்குள் வேலை செய்யும். எந்த அளவுக்கு குருவிடம் அடங்குகிறோமோ, அந்த அளவுக்கே வினைப்பதிவுகள் அடங்கும்... அந்த மாதிரி குருவோடு இணைந்து இருந்து நாம் வாழலாம்.


குரு என்ற உணர்வை தியானத்திலே எட்டுகிற போது, உங்களுக்கு முன் வினைகள் இருந்ததா? கர்மங்கள் என்று ஏதாவது சொல்ல இருந்ததா என்று பாருங்கள்... இவை எல்லாம் மனம் என்ற வட்டம் வரையே வேலை செய்யும்.

தியானத்திலே அமருங்கள்.

வாழ்க வளமுடன்..

OM Shanthi Shanthi Changes Reg -- Post 14

வாழ்க வளமுடன்.


வணக்கம் Mr hari

உங்களின் கருத்துக்களை தாங்கள் சத்சங்கத்திலே அளித்து இருந்தீர்கள். தற்போது காணும் மாற்றுக்கருத்துக்களை அதன் தன்மையைப்பற்றி நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வியானது எழுப்பியவரின் கருத்துக்கள் சரியே என்று நமது தலைவரே சொல்லிய பிறகு தான் அதற்கு பதில் எழுத திரு தாமோதரன் ஐயா அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

ஆனால் மாற்றத்திற்க்கான காரணங்களை விளக்க ஆரம்பிக்கும் போது, அவர்களுக்குப் பிடிக்கவில்லை, இவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக எழுதி இருந்தார். மாற்றுவது என்ற நிலை வந்தால், முன்பு குருவினால் கொண்டு வரப்பட்ட காரணத்தினை உணர்ந்து, அதற்கு ஏற்றார்போலவே தான் அடுத்த மாற்றமும் இருக்கவேண்டும். குருவே மாற்றினாலும் இதைத் தான் சொல்லுவார் என்று அறிவிற்க்கு நிறைவு தரும் ஒன்றாகவே அது இருக்கவேண்டும்.



இதையே இங்கே வலியுறுத்துகிறோம். மற்றபடி ஒன்றும் இல்லை.

னீங்கள் பதில் சொல்லும் போது, தொலை நோக்குப்பார்வையிலே தான் நமது மன்றம் ஒன்றை மாற்றுகிறது என்று... ஒரு சந்தேகம்... நீங்கள் சொல்வது தான் உண்மை என்றால் குருவான்வர் தொலை நோக்குப்பார்வை இல்லாமல் தான் இதை எல்லாம் எழுதினார் என்கிறீர்களா?



ஏன் காரணம் கேட்டால் கோபம் வருகிறது? எத்தனை கேட்டாலும் உண்மை என்பது சொல்ல சொல்ல நாக்கிலே எச்சில் ஊரும். தாகம் கூட எழாது போகும்.
ஒன்றை மாற்றினால் காரணம் கேட்கவே செய்வார்கள்... ஒழுஙான காரணம் இருந்தால் ஆயிரம் தடவை கூட விளக்கலாம். இல்லை என்றால் பதில் சொல்ல முடியாது சினமே தான் வரும்.

னீங்கள் சொன்னது போல முடிவு எடுக்கும் உரிமை தலமைக்கே தான் இருக்கிறது.. இதிலே என்ன சந்தேகம்? குருவின் தன்மையை ஒட்டி இருக்கும் போது, இப்போது காணும் மற்றத்திற்க்கு காரணம் கேட்டால் சொல்லத்தான் வேண்டும்! எதிராளி வாக்குவாதம் புரிகிறான் என்றெல்லாம் சொல்வது எல்லாம் தப்பிக்கிற வேலை... அது எல்லாம் சரியான பதிலாகாது.

உலக அமைதி எட்டும் வரை உலக சமுதாய சேவா சங்கம் இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறிர்கள்... உங்களுக்கு ஏன் இந்த உள்ளூர பயம்? என்ன சந்தேகம் உங்களுக்கு? நமது சங்கம் இல்லாது போய் விடும் என்று ஏன் உங்களுக்கு தோன்றுகிறது? சொன்னது யார்? அல்லது நீங்களே, உலக அமைதி தோன்ற வருடக்கணக்காகும்... அது வரை நமது மன்றம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீரா?


ஏன் இந்த எதிர்கால பயம்?


குரு என்ற ஒன்று எப்போதும் நிலைக்கும்... கண்ணை மூடி தியானித்தால் குரு என்ற அருள் கூடவே வருகிறதை உணர்கிறீர்களா? உணரவில்லை என்றால் தவம் இன்னும் நிகழ வில்லை என்றே பொருள்....


கண்ணை மூடி துரியாதீத தவத்திலே எங்காவது ஒரு ஓரத்திலே நமது மன்றமும், தலைவர் அய்யாவும், தாமோதரன் அய்யாவும் நிற்கிறார்களா? அப்படி என்றாலும் இன்னும் தவம் செய்யவில்லை என்று பொருள்...


எது எப்போதும் நிலைக்குமோ அதனை பார்ப்பது மட்டுமே தான் குருவின் சாரமான அத்வைதம்... குருவின் இருப்பு எப்போதுமே இருக்கிறது என்று உணர்வாகும் போது தான் மற்ற அனைத்தையும் விட குருவே உயர்ந்தவர்.. அவரின் ஒவ்வோர் அசைவும் முக்கியம் என்று தெளியும். அதுவரை கண்ணால் பார்க்கிற பொய்களை நம்பி நாடகத்தை ஓட்டவேண்டியது தான்.... நீங்கள் சொன்னீர்கள்... தனி மனிதனை விட சங்கமே உயர்ந்தது என்று... அது பொய். குருவை விட எதுவுமே உயர்ந்தது இல்லை... குரு அன்றி எதுவுமில்லை... குருவைத்தாண்டியும் எவரும் இல்லை என்பதே தான் சத்தியம்...

தாங்கள் உதிர்த்த எந்த ஒரு வார்த்தையும் உடைத்துக்கொண்டே அணு வரை செல்லமுடியும் என்பதை சொல்லவே தான் இக்கடிதம்... பார்ப்பதற்க்கு தான் வாக்குவாதம் போலத் தோன்றும்... அறிவிற்க்குள் உங்கள் எண்ணத்தைப் போட்டால் அந்த அதிர்விலே வரும் பதிலே இந்த எழுத்து என்பதை, குருவோடு இணைந்து நிற்கிற போது புரிந்து கொள்ளலாம்...

வாழ்க வளமுடன்.

OM Shanthi Shanthi Changes Reg -- Post 13

நண்பரே நிறைய அன்பர்களைப்போலவே யானும் நமது மனவளக்கலை பரவுவது கண்டு மகிழ்கிறேன்.

எமது கரு என்னவென்றால் : நீங்கள் எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள் ஆனால் அந்த மாற்றம் என்பது நமது குரு எந்த தன்மையிலே சொன்னாரோ, எந்த மனோ அலையிலே நின்று பேசினாரோ அதே மாதிரி இருப்பின், யார் எங்கே எப்போது நம்மை தடுத்துப்பேசினாலும் நம்மால் எத்தனை முறை வேண்டுமானாலும் விளக்கமுடியும். ஆனால் குருவின் தன்மையாம் மௌன நிலையிலே இருந்து விலகி நின்று ஒரு வார்த்தை தயாரித்தால், அது கண்டிப்பாக பிரச்சினை தரக்கூடியதாகவே இருக்கும் என்பதாகும். யான், நமது பொறுப்பாளர்களுக்கு சொல்வதெல்லாம், மனதை குருவின் களத்திலெ இருந்து இறங்கி வந்து பேசவோ எழுதவோ செய்யாதீர்கள். நீங்கள் குரு காட்டிய இருக்கையிலே இருக்கிறீர்கள். குருவைப்போலவே மனதை மௌனத்திலே ஆழ்த்தி ஆழ்த்தி பிறகு பேசுங்கள் என்பது தான். அதுவே நமது குருவிற்க்கு பெருமையைத்தரும்.

தாங்களைப்போன்ற அன்பர்கள் நமது மன்றத்தின் வளர்ச்சிக்காக ஆசைப்படுகிறீர்கள். யான், பொறுப்பாளர்களின் வளர்ந்த நிலைக்காக ஆசைப்படுகிறேன். அவ்வளவே ரத்தின சுருக்கமாக சொல்ல முடிகிறது.



பொறுப்பாளர்கள் வளர வில்லையா என்று கேட்கத் தோன்றினால், நீங்கள் நமது சங்கத்தின் தளத்திற்க்குச் சென்று அங்கே மூத்த பேராசிரியர் எழுதின விளக்கத்தைப்பாருங்கள்... புரிந்து கொள்வீர்கள்.... நமது குரு ஒரு முறை சொன்னார்.... நான் எப்போதும் ஒரே தகவலைத்தான் அப்போதும் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்... புதிதாக எதுவும் சொல்லவில்லை என்றார். இது உண்மை... குருவானவர் வற்றா இருப்பு என்ற வார்த்தையை 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியிலே முதன் முதலாக சொன்னார்....அப்போது அவரிடம், இதற்க்கு முன்பு சுத்தவெளி, இருப்பு நிலை என்று சொன்னீர்களே.. இப்போது புது வார்த்தை என்றால் அதெல்லாம்?


குரு சொன்னார் : இறை வெளி பற்றிய விளக்கத்திலே மெருகூட்டக்கிடைத்த ஒரு சொல்லே தான் வற்றாயிருப்பு என்ற விளக்கம்... முன்பு சொன்ன வார்த்தைகளிலும் எந்த மாறுதலும் இல்லை. மேலும் ஒரு புது விளக்கம் இப்போதைக்கு தரப்பட்டுள்ளது "


இந்த ஒரு புது வார்த்தை சொல்லப்பட்டதை, இப்போது பொறுப்பாளர்கள் சொல்வது என்னவென்றால், மகரிஷியே மாற்றினார்.... அதனால் நாமும் மாற்றுகிறோம...


(காலத்திற்கேற்றபடி) இந்த மாதிரி விளக்கம் தவிருங்கள். இது குருவின் தன்மையிலே இருந்து இருந்து நீங்கள் தரவில்லை என்பதைச்சொல்கிறேன்... அவ்வளவே....


எமது எழுத்துக்கள் எவரின் அறிவு உயர்விற்க்கும் தடையே அல்ல. குருவானவர் வாய் மூடச்சொன்னால் அப்படியே இதை எல்லாம் விட்டு விட்டு அமைதி ஆவேன். வாழ்க வளமுடன்.

OM Shanthi Shanthi Changes Reg -- Post 12

வாழ்க வளமுடன்




பிச்சையெடுத்துண்டு வேதாந்தம் பேசி
பிழைசெய்தே உயிர் வாழும் துறவு வேண்டேன்
அச்சமின்றி உழைத்து ஈட்டி உடலை ஓம்பி
அறம் நின்று அறம் உணர்த்தும் நெறியில் வாழ்வேன்

எச்செயலும் சிந்திக்கா தாற்றுவோர்கள்
என்னை ஏழ்மை நிலையேற்று வாழச்சொன்னால்
உச்ச அறிவின் நிலையில் உலகில் வாழ்வோர்
ஒப்புவரோ பிறர் திணிக்கும் ஈனப்போக்கை.


குரு வேதாத்திரி மகரிஷி... கவிதை எண் 260 (ஞானமும் வாழ்வும்)

குரு என்ற ஒன்றே சத்தியமானது. நிலைத்து நீடித்து நிற்கக்கூடியது. கண்ணைத்திறந்து இருந்தாலும், கண்ணை மூடி தியானித்தாலும், தூக்கத்திலும்,கனவைத்தாண்டியும், சீடனின் மரணத்தை தாண்டியும் கூட நிலைத்திருக்கும் ஒன்றும் கூட குரு என்ற அருள் மட்டுமே தான். எது நிலைக்க வேண்டும் என்று பயம் ஒரு பக்கம், எது நிலைத்து நீடிக்கிறது என்ற பார்வை இல்லாதது மட்டுமின்றி, விழிப்பின்றி அலட்சியம் என்பது ஒரு பக்கம்.

நமக்கு குருவை விட குரு அமைத்துத்தந்த மன்றத்தின் மூலம், எதிர்பார்க்கும் பதவிக்காகவும், அது தரும் கௌரவமும் முக்கியமாகப்படுகிறது. இப்படி கருதுவோர் அருகிலே உள்ள வரை, நமது தலைவர் என்னதான் செய்வார்?

என் ஒளியே சிறந்ததினி ரவிஒளி ஏன் எனக்கு
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்...

குரு என்ற அறிவின் விழிப்பிலே நிலைத்து நீடித்து மௌனத்திலே இருக்கிற நிலை என்பது, எந்த ஒரு எண்ணத்திற்க்கு மூத்ததும் முந்தியதும் ஆகும்.

எண்ணத்தின் முன் பின் மௌனமே இருக்கும் போது, குருவின் மௌன நிலையிலே இருந்து கொண்டு எண்ணத்தை பார்த்து வினவினால், எண்ணமானது தன் மூல நிலையை நோக்கிச்செல்லும் / நோக்கிச்செல்லவேண்டும். நோக்கிச்செல்ல மறுக்கவோ அல்லது விருப்பமோ இல்லாத போது அங்கே தன்முனைப்பு என்பது தன் உண்மையான வடிவத்தை தரவே செய்யும். மறைக்க முடியாது. ஆனால் சுட்டிக்காட்டினால், எதிராளி வாக்குவாதம் செய்கிறார் என்று சொல்லி ஒதுக்கி விட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணுவோர் என்றும் உண்டு.


வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 11

குருவே சரணம்.


குருவின் அருளால் அனைத்தும் நன்மைக்கே. எந்த இடத்திலே எம்மை அப்பன் கொண்டு வைத்தாலும், உள்ளுக்குள்ளே சுடரைப்போன்று தொடர்ந்து கூடவே இருக்கும் குருவின் காலடியின் இரு பெருவிரல்களிலே எமது இரு விழிகளை வைத்து வணங்குகிறேன்.

அப்பா... என் மேல் எவர் என்ன சொல்லிடினும் கூட மீண்டும் உங்களுக்குள் வருவது தவிர வேறு எதுவும் எம்மால் செய்யமுடியவில்லை. வயிறு பசித்தாலும், குருவின் பெருமைக்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது.

இறை நிலை தரும் விளக்கம் என்பது உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ளவேண்டும் என்றால் இறைனிலையோடு நாமும் கலந்தால் அன்றி வேறேது வாய்ப்பு?

எமது முனைப்பு சரி என்று குருவின் முன் நின்றால், இறை மௌனத்திலே கலந்தால் எப்படி பொருந்தும்? அப்படியே தான் இருக்கிறது இந்த இரண்டொழுக்க பண்பாட்டு மாற்றம் மற்றும் தற்போதைய மாற்றங்களுக்கான காரணங்கள்/விளக்கங்கள் எல்லாம்.

நங்கள் எங்கள் வண்டியை ஓட்டும் விதத்திலே, சாலையையே மாற்றி வைப்போம். யாரும் சாலையை ஏன் மாற்றுகிறீர்கள் என்று கேட்கக்கூடாது என்கிறார் நமது பொறுப்பாளர்கள்.
அவரவர் வசதிக்கேற்ப எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற இந்திய அரசியல் ஜன நாயகத்திலே செயல்படுவது போல செயல்பட்டுக்கொண்டிருந்தால் ஒரு நாள் குருவே தனது இருப்பை அதன் அளவுக்கு ஏற்ப காட்டவேண்டிவரும். அப்போது முனைப்பு எல்லாம் ஒடுக்கப்படும் போது அலறக்கூடாது. இப்போது உள்ளது போலவே இருக்க முடிகிறதா என்று காணவேண்டும்.

குருவிடம் அவரின் தந்தை ஹிரண்யாகதன் கதையைச்சொன்னார்கள்.. இந்த உலகத்தைப் பாயாக சுருட்டுவேன் என்று ஹிரண்யாகதன் புறப்பட்டதை சொன்னபோது, கதை கேட்ட பிள்ளை குறுக்கிட்டு, ஹிரண்யாகதன் பூமியை பாய் போல் சுருட்டும் போது அவர் எங்கே தனது காலை வைத்துக்கொண்டிருப்பார்? அந்தரத்திலா? என்று..

அது போல குரு தந்த மனவளக்கலை என்ற பாதையை மாற்றும்போது பிள்ளைகள் கேட்கவே செய்வார்கள். பதில் சொல்லியே தன் ஆகவேண்டும்.

குரு தந்த மனவளக்கலை ஒரு வாழ்க்கைப் பாதை என்று சொல்லி கண்டபடி பாதையை மாற்றிக்கொண்டே இருப்பதை விட, குருவே தான் பாதை என்று அவரோடு ஒடுங்குவது தான் அழகு.. நேரான வழி முறை. இங்கே கூட்டம் இல்லை. கும்பலும் தேவை இல்லை. அறிவு தனித்து சுடர்
விட்டு ஒளிர்கிறது. அது தவிர வேறொன்றும் தேவை இல்லை

ஒரு முறை பாதையை மாற்றும் போது, முனைப்பு என்ற கால் எங்கே எப்படி இருக்கிறது என்று ஆராய்வது நல்லது. நடக்கிற பாதையிலே இருந்து உங்கள் காலை தூக்குங்கள்... நாங்கள் வேறு சாலை போடவேண்டும் என்றால், சொல்பவரின் நிலையை பார்த்து பரிதாபப்படவே தான் செய்வார்கள். காலைத்தூக்கச்சொன்னால் தூக்குங்கள். குருவானவர் எப்படி வேண்டுமானலும் சாலையை மாற்றச்சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னால் இன்னும் அதிகமாக சிரிப்பு வரும்.

இப்படி எழுதியது நகைச்சுவைக்கு அல்ல... குரு என்ற ஒன்று சீடனுக்கு பாதை தான். குரு என்ற அன்பு ஒன்றே சீடனுக்குத்தேவையான பாதையைத்தந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் தரும். இங்கே அறிவு என்ற ஒன்றைத் தவிர எந்த ஒரு அசைவிற்க்கும் வேலை கிடையாது. நுழையவும் முடியாது. அறிவை விட்டுத்தரும் அளவிற்க்கு சோதனையான ஒன்றை அங்கே சொல்ல எவரும் உருவாகவில்லை. உருவாகவும் முடியாது.

வாருங்கள். அந்த பாதையிலே. பதமடைவோம்... ஒன்றாவோம்.. பரமானந்தம் அடைவோம்.


எத்தனை நாளைக்கு உனது வருகைக்காக காத்திருப்பது என்று குருவானவர் நம்மைப்பார்த்து கண்களிலே ஆனந்தத்துடன் அணைக்க காத்துக்கொண்டிருக்கிறார்.

விவேகானந்தரை ராமகிருஷ்ணர் பார்த்த உடனே அணைத்துக்கொண்டது போல.

வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 10

வாழ்க வளமுடன்.

குருவே சரணம்.


எந்த ஒரு செயலுக்கும் விளைவு என்ற நியதியின் அடிப்படையிலே நமக்கு இறை நீதி குருபிரானால் வழங்கப்பட்டிருக்கிறது.

குருவானவர் சொல்லி இருக்கிற வழிமுறைகள் அத்தனையும் அறிவார்ந்த எவருக்கும், பகுத்தாய்வு செய்தாலும் கூட அறிவிற்க்கு நிறைவாக இறையே தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வர்.

ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர் தன்னைச்சார்ந்தவர்களான தாய் தந்தை, மகன், மகள் என்று பலவித சுற்றங்களுக்குள் உள்ள உறவு என்பது நீடித்து நிற்பதில்லை. காரணம் எதிர்பார்ப்பும் அதனால் கண்ட ஏமாற்றங்களுமே. ஆனால் சீடனாக ஒருவர் நமது குருவின் முன் அகத்திலே சரணடைந்து விட்டால், குருவானவர் சீடனுக்கு கருணை நிலையை உணர்த்தும் வரை விட்டுவிலகுவதில்லை. அந்தவிதத்திலே, கருணை நிலையை ஒருவர் உணரவேண்டும் என்றால் குரு என்ற அருளுடன் இணைந்தே தான் இருக்கவேண்டும்.

நமது குருவானவர் எத்தனையோ முறை சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிவந்தார். காரணம், ஒவ்வோர் முறையும் அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் முறையாக தேவைப்பட்டோருக்கு சென்று சேர்ந்தது. குரு என்ன காரியம் செய்தாலும் அதிலே இருந்து எழும்புகின்ற அலைகள் நம்மை காந்த களத்திற்கு கொண்டு சென்று விடும்.

இறை வெளியில் விண் சுழல நெருக்கின்ற உரசல்
நிலை வெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்

என்ற குருவின் வரிகள் ஒரு உதாரணம்.


இந்த விரிவான கேள்விகளிலே உள்ள சாராம்சமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால், குருவானவர் அமைத்து இருக்கிற எந்த ஒன்றும் பகுத்தறிவிற்கு புறம்பானது இல்லை என்பதும், அதை மாற்றும் போது குருவின் வார்த்தைகளுக்கு/வரிகளுக்கு நிகரான, எவர் கேள்வி எழுப்பினும் பதில் சொல்லப்படுகின்ற வகையிலே இல்லை என்பதை சுட்டிக்காட்டுவது மட்டும் தான்.

இதை குறையாக எடுத்துக்கொள்ளாமல், இறை என்ற கருணை நிலையானது நமது குருவின் பெருமையை நிலை நாட்ட எடுத்துக்கொடுக்கும் சில முன்னெச்செரிக்கையாகக் கருதலாம். குருவின் தாத்பரியத்திற்க்கு இன்னல் ஏற்படக்கூடாது என்ற அன்பினால் தான் இந்த கேள்விகள் எழுகிறதா என்றும் பார்க்கலாம்.


கேள்வி கேட்டவரின் சில வரிகள் முனைப்பு தெரிகின்றது.

பொதுவாக, ஆசிரியர்கள் சரி இல்லை... தரம் இல்லை. என்னிடம் இது போன்ற பல கேள்விகள் உள்ளன. இது தான் என் தொலை பேசி எண். தொடர்பு கொள்ளலாம் என்ற வரிகள் எல்லாம் குருவிடம் நிலைக்காத வரிகள். குருவிற்க்காக அக்கரை எடுத்துக்கொள்ளும் அவர் எழுகின்ற முனைப்பை முறையாக குருவிடம் ஒடுக்கி எழுதி இருப்பின் வித்தியாசப்பட்டிருக்கும்.

கேட்டவர் முனைப்புடன் இருக்கிறார் என்றாலும், பதில் சொல்லும் பொறுப்புடையவர்கள் குருவின் களத்தை விட்டு இறங்கி வரவே கூடாது என்ற கோட்டை வைத்துக்கொண்டு செயல்படுதல் மிக முக்கியம். அதற்காக நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் அறிவின் உயரம் என்ன என்பது போன்ற வரிகள் எல்லாம் நிச்சயம் குருவின் தன்மையான வரிகள் அல்ல. கருணை நிலையிலே இருந்து அசைந்தாலும் பிடிப்பானது குருவிடம் இல்லாததால் தான், பதிலும் முனைப்பாகவே தென்பட்டிருக்கிறது.

கேட்டவர் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். பதில் சொல்பவர் குருவின் இருப்பிடத்தை விட்டு நீங்காது இருக்க வேண்டும். வெளி உலகுக்கு நாம் பதில் சொல்லும் முன் ஒரு குழு போன்று ஒன்று இந்த மாதிரியான கேள்விகளுக்கு எது சரியாக இருக்கும் என்று ஒருவரை ஒருவர் கலந்து கொண்ட பிறகே தான் பதில் வெளியிலே வரவேண்டும்...முனைப்புடன் பதில் இருப்பின் அந்த களங்கம் சொன்னவரை விட, நமது சங்கத்திற்கே போகும் என்பதால் விழிப்புணர்வு முக்கியம்.

இறை வெளியிலே தத்துவத்தை பற்றி சொன்ன போது " மகரிஷி தன் வாழ்நாளில் தன்னுடைய தத்துவங்களில் தேவையானபோது தொடர்ந்து மாற்றங்கள் செய்து வந்தார் என்பதை அறிவோம். முதலில் இறைவெளி இருப்புநிலை) என்றார்கள். பின்பு அதில் நுண்ணிய அசைவுள்ளது என்று மாற்றினார்கள். இறைவெளி வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு என்றார்கள். பின்பு காலத்தையும் இணைத்தார்கள். அதனால்தான் அவரது தத்துவம் என்றும் வாழ்ந்து வருகிறது. "

குருவின் வரிகள் வெளியிலே சொன்னபோது கேட்டவரின் அறிவிற்கேற்ப, குழந்தைகளுக்கு சொல்வது போல படிப்படியாக சொல்லி இருக்கலாம். ஆனால் இதிலும் கவனிக்கவேண்டியது என்னவென்றால், முதலில் சொன்ன இருப்பு நிலை என்பதை நீக்கவில்லை. மாறாக அடுத்து ஒன்றை சேர்த்தார். பிறகு வேறொன்று.. இப்படி எத்தனை சொன்னாலும் கூட, சொன்ன வரிகள் ஒவ்வொன்றும் சத்தியத்திற்க்கு மாறானதாக துளியும் சொல்லவில்லையே? அதை ஏன் இப்போது நாமும் கடைபிடிக்கக்கூடாது?

குருவின் வரிகள் வெளியிலே சொன்னபோது கேட்டவரின் அறிவிற்கேற்ப, குழந்தைகளுக்கு சொல்வது போல படிப்படியாக சொல்லி இருக்கலாம். ஆனால் இதிலும் கவனிக்கவேண்டியது என்னவென்றால், முதலில் சொன்ன இருப்பு நிலை என்பதை நீக்கவில்லை. மாறாக அடுத்து ஒன்றை சேர்த்தார். பிறகு வேறொன்று.. இப்படி எத்தனை சொன்னாலும் கூட, சொன்ன வரிகள் ஒவ்வொன்றும் சத்தியத்திற்க்கு மாறானதாக துளியும் சொல்லவில்லையே? அதை ஏன் இப்போது நாமும் கடைபிடிக்கக்கூடாது?

நாம் இப்போது ஒன்றை அப்படியே மாற்றுகிறோம்... இரண்டொழுக்கப்பண்பாடு, இப்போது ஓம் சாந்தி சாந்தி....என்பதெல்லாம்... ஆனால் விளக்கம் கேட்டால் எந்த மாதிரி பதில் வருகிறது என்று திரும்பி பார்க்க வேண்டும்.. எவர் எப்போது எங்கே நம்மை தடுத்துக்கேட்டாலும், முன்பு கடைபிடித்த எந்த ஒன்றும் அறிவிற்க்கு புறம்பானது இல்லை என்று குருவை பிடித்துக்கொண்டு அல்லவா சொல்லவேண்டும்?

குருவே சொல்லிவிட்டார் எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லி, நாமே குருவின் வரிகளை எடுத்து, அதற்க்கு பொருத்தமில்லா ஒன்றை தந்தால் அது எப்படி பொருந்தும்? எதையும் மாற்றலாம் ஆனால் அது குருவின் வாசகத்திற்க்கு நிகரான ஒன்றா என்று பார்க்கவேண்டும். அவ்வளவே தான். பதில் சொல்பவர் தமது முனைப்பைக் காட்ட களம் இல்லை இது.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்து அடங்கு... என்ற வரி அனைவருக்கும் பொருந்தும் எக்காலத்திலும்.


இவ்வளவும் உங்களை நோக்கி வருவதற்க்குக் காரணம் குருவே என்று எடுத்துக்கொண்டு... அப்பா என்று அவரின் புகைப்படத்தை உற்றுப்பாருங்கள், அந்த மெல்லிய புன்னகையிலே ஆயிரமாயிரம் அறிவார்ந்த மாற்றுக்கருத்துக்கள் எவரும் நம்மை குறை சொல்ல முடியா, எவரையும் அணுகும் தன்மை கிட்டும்.

வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 9

வாழ்க வளமுடன்

உலக சமுதாய சேவா சங்கத்தில் 3,500 ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர்களை ஒப்புநோக்குகையில் உயர்வு பெறவில்லை என்றும், மனம் போன போக்கில் எழுதியுள்ளீர்கள். அன்பரே நீங்கள் எந்த அளவுகோலை வைத்து இத்தனை பெரையும் எங்கு அளந்தீர்கள், உங்களுடைய அறிவின் அளவுகோலையா, நீங்கள் எந்த உயரத்தில் உள்ளீர்கள், இன்று உலக சமுதாய சேவா சங்கத்தில் 5,000 ஆசிரியர்கள் மகரிஷியின் உயிரிலும், அறிவிலும் கலந்து தன்னலமற்ற சேவை செய்து கொண்டுள்ளார்கள். 14,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டம் மற்றும் பட்டய மாணவர்களுக்கு அவர்கள்தான் மனவளக்கலை கல்வியை அளித்து வருகிறார்கள். எதிலும் குறை காண்பது என்று போனால் அதற்கு முடிவே இல்லை. குறை காணும் மனதில். குறைகள் மட்டுமே தென்படும்.



தாங்களின் மேற்கூறிய வரிகளில் சில எழுத்துக்கள் குருவிடம் இருந்து பிரிந்த நிலையிலே இருந்து வந்திருக்கிறது. அதனை தயவு கூர்ந்து விலக்கி விட்டு சத்சங்கத்திலே குருவைச்சார்ந்த அறிவைச்சார்ந்த விவாதங்களை மட்டும் தர முயற்சிப்போம்.

எவரும் பிறர் உயரத்தை அளந்து விட முடியாது. வருகின்ற கேள்விகளின் சாரம் எதனை நோக்கி இழுத்துச்செல்கிறது என்ற நோக்கிலே இருந்து வழுக்காது நின்று பழகுவோம்.

அருள் சார்ந்த ஒன்றை எத்தனை முறை எவர் கேட்பினும் பொறுமையாக சொல்வோம்... குழந்தைக்கு தாயும் தந்தையும் ஆசிரியனும் கற்றுத்தருவது போல...

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

எவர் வரினும் அஞ்சோம் என்று குருவைச்சார்ந்து நின்று எல்லாரும் கலந்து கொள்ளவேண்டும். குருவை பிடித்துக்கொண்டால் அன்றி முனைப்பை ஒடுக்கமுடியாது என்பது தெளிவாக புரிந்து விடும்...

வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 8

வாழ்க வளமுடன்...


வணக்கம் திரு.சேர்மா அவர்களே...


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்
துரிதமுடன் மதம்கடப்பார் உண்மை காணீர்....

என்கிற குருவின் வரிகள் முழுமை பெற்றால் என்ற கவியிலே வருகிறது...

குருவானவர் அறிவறிந்தவரா?



குருவானவர் முழுமை பெற்றவரா?



இரண்டுக்கும் பதில் ஆம் எனில், அவர் மதம் கடந்தவரா?

ஆம் எனில், எதற்க்காக நீங்களே குருவைப்பற்றியும்,எதனால் அவர் ஓம் சாந்தி என்பதையும், ஓம்கார மண்டபத்திலே இருந்துவருவதையும் அவர்களிடம் சொல்லக்கூடாது?

சரி... அவர் ஓம்கார மண்டபத்திலே இப்போது இல்லை என்று உறுதியாக நிரூபிக்க முடியுமா?
துரிதமுடன் மதம் கடப்பார்.. உண்மை காணீர்... என்று நமது குரு ஊருக்குத்தான் உபதேசமாகச்சொன்னாரா? அல்லது தானும் கடைபிடித்தாரா?

அவர் அறிவறிந்து முழுமை அடையவில்லை என்று எடுத்துக்காட்டுங்கள் முதலில்... நிரூபியுங்கள் அவர் முழுமை அடையவில்லை என்று.

எதற்க்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை இப்போது வருகிறது? சார்பின்மையை இப்போது முதல் பின்பற்றுகிறோம் என்று மாற்றிக்கொள்ளும் போது, குருவின் நிலையை யோசித்தீர்களா? அவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர் என்பது போல் ஒரு தோற்றம் தருகிறீர்களே... அதனால் தான் அந்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் கேட்கிறேன்....

குருவின் வரிகளையாவது தொட்டுப்பேசுங்கள்...

நீங்கள் ஓம் சாந்தி என்பதை மாற்றிக்கொள்ளலாம் என்கிறீர்கள்... சரி... மாற்றிக்கொள்ளுங்கள். ஓம் சாந்தி என்ற சொல்லையே ஏற்காதவர்களுக்குத் தான் நீங்கள் விளக்கம் சொல்கிறீர்கள் என்பதை ஒவ்வோர் இடத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும். புதிதாக சேர்பவர்கள், மதச்சார்பின்மையை கடை பிடிப்பவர்கள்... அவர்களுடைய மதச்சார்பின்மை என்ற இலக்கணத்திலே, ஓம் சாந்தி தவறு... ஓம்கார மண்டபம் சரியானதே என்று அவர்கள் நிலை இருந்தால்,ஒரு வேளை தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.. இல்லையெனில் கடினமே...


நீங்கள் சரியான ஒரு விசயத்தை சொன்னீர்கள்... குருவானவர் தனது எழுத்துக்களை மூல நிலையிலே இருந்து மாற்றாத வகையிலே அமைத்துக்கொள்ளலாம் என்று....

அப்படி எனில், மேலே குறிப்பிட்ட குருவின் 2 வரியை நாம் சரியாகத்தான் கடைபிடிக்கிறோமா? என்பதை விளக்குங்கள்.

அல்லது குருவானவர்...

அல்லது குருவானவர், ஆமப்பா.. ஏதோ தெரியாமல் மதம் கடப்பார் என்று எழுதி விட்டேன். இப்போது நமக்கு இது சரிப்பட்டு வராது என்பதால் இந்த இரண்டு வரியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று வேறு வரி சொல்லி இருப்பாரே! அதை எம்மைப்போன்று முட்டாள், மூடத்தனமான, மூர்க்கத்தனமான,திருந்தாத சீடர்களுக்கும் எழுதி அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குருவின் தத்துவம் அத்வைதம்... அத்வைதத்திலே கூட்டம் நிலையாக இருக்குமா? துரியாதீத தவத்திலாவது கூட்டம் தெரிகின்றதா?

ஒரு வேளை குருவிற்க்கு மட்டும் தான் அத்வைதமா? குறைந்த பட்சம் குருவின் படத்தின் நாம் அத்வைத சித்தாந்தத்தை கடைபிடிப்பதாக சத்தியம் என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

உங்களுக்கு எல்லாம் தெரியும். கேள்விக்குறி உள்ள இடத்திலே உங்கள் பதிலை மறக்காமல் தாருங்கள்.

குருவை மிஞ்சிய, குருவிற்க்கு எட்டாத பலவிசயங்கள் நமக்கு இப்போது தெரிந்து விட்டது. குருவே மிகவும் பெருமையோடு நம்மை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வாழ்கவளமுடன்..



This is my last conversation there with Mr.Serma Selvaraj.

Yet, there was posting with Maharishi's Q & A. In that it was clearly indicated that,

உணர்ந்த உண்மை இது தான்... ஓம் என்று பொதுமறையானது. இதில் உடன்படாதவர்கள், ஓம் சாந்திசாந்தி என்பதை விட்டு விடலாம்.


This is where, we all now standing... Guru replied clearly in that. While i was trying to indicate the same.. the whole topic has been barred.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...ஆதவன் மறைவதில்லை..


vazhga valamudan

OM Shanthi Shanthi Changes Reg -- SSR & Prabu's comment

@ rameshkumar SS
ஓம் சாந்தி சாந்தி சாந்தி...


அமைதி அமைதி அமைதி...


ரமேஷ் நீங்கள் சரியான பேர்வழி தான்.. :-)


வாழ்க வளமுடன்


Dear Sundar,
You are travelling in the right direction.
Definitely blessings of Guru would follow you.
As Arun told, we can register the protest in the main community.
It is said that, they are doing this to pacify some Minister.
Even if the suggestion was made in good vein, I fear, if they make corrections for all these persons, Vethathiriam would loose it's essence.

OM Shanthi Shanthi Changes Reg -- Post 6& 7

மாற்றிக்கொண்டதில்லை!


@ மணிகண்டன் : விடை வேண்டுபவர்க்கு மட்டுமே விடை தரமுடியும் என்று அறிவித்தது நீங்கள்... குருவின் வரிகளுக்கு நான் கேட்டகேள்விகளுக்கு நீங்கள் சீண்டாமல் இருப்பது ஒரு புறம் ( நாங்கள் மறந்து விட்டதாக எடுத்துக்கொள்ளவும்.. மேலும் உங்களிடம் ஞாபக மூட்டுதல் எம்முடைய வேலையும் அல்ல என்பது மறு புறம்)

ஏற்கனவே உள்ளதை தள்ளி வைத்து... அதாவது குரு எதற்காக அப்படி எழுதினார்... அதிலே என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எல்லாம் தள்ளிவைத்து... இப்போது என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்க்கவேண்டும்... என்கிற உங்களின் எண்ணம் மூலம், உங்களை எமக்கு நன்றாக சொல்லி விட்டீர்கள்... எமது அறுகுணத்தைச் சீரமைத்துக்கொள்ளுங்கள் என்கிற உங்கள் அறிவுரைக்கும் நன்றிகள். வழிகாட்டுதலுக்கு நன்றிகள்.

நீங்கள் அறுகுணத்தை சீரமைத்து விட்டவர்..இதனால் தான் இது வரை நீங்கள் குருவின் 2 வரிகளையோ, அல்லது குருவின் தன்மையைச் சார்ந்து எழுந்த கேள்விகளுக்கோ விடை தரவில்லையோ? இது அறுகுணம் கடந்த நிலை என்றாகுமா?

அல்லது குருவைப் பற்றிக்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லாததால், எதிராளிக்கு அறு குணம் இருப்பதாகச் சொல்லி தப்பிக்கிறீர்களோ என்னவோ...

குருவை நாடி நாடி நாடி, விடை கண்டுபிடித்த நீங்கள் எம்மைப் போன்ற பாமரர்களுக்கும் சொல்லாமல் நாள் கடத்தினால் எப்படி? கருணை காட்டுங்கள் ஐயா! எமக்கு இன்னமும் அறுகுணம் சீராகாததால், நீங்களே விடையை எழுதுங்கள்.... எமது எழுத்துக்களை வைத்தே எமது உயர்வை கணக்கிட்ட உங்களின் ஆற்றலுக்கு வணக்கங்கள்... அப்படியே குருவின் வார்த்தைகளை தள்ளி வைத்து என்பதற்கான காரணத்தையும் போடுங்கள்...

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு!
என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்.. என்றார் நமது குரு..

மாகுரு தன ஜன எவ்வன கர்வம்
ஹரதின மேசா கால: சர்வம்
மாய மயமிதம் அஹிலம் ஹித்வா
பிரம்ம பதம் சம் ப்ரவிசே விதித்வா:

அதாவது இளமை, புகழ், பணம் மற்றும் சுற்றி உள்ளவைகளால் சிறிதும் கர்வப்பட்டு விடாதே! காலமானது ஒரு கணத்திலே இவற்றை மாற்றி வைத்து விட முடியும்... என்கிறார் ஆதி சங்கரர்...

இறை இல்லாத இடமில்லை... குரு உங்களுக்கு துணை நிற்பார்..

வாழ்க வளமுடன்...

அன்புள்ள அருண்

வாழ்க வளமுடன்..

இந்த விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் மனோ அலையை பிரதிபலிக்கிறது என்பது உண்மை...

மாற்றங்கள் செய்வதற்க்கு கண்மூடித்தனமான எதிர்ப்பு என்ற நிலையிலே நாம் எப்போதுமே இல்லை என்றாலும், குருவின் வரிகள் எல்லாம் முக்கால ஞானத்தோடு தான் இருக்கும் என்பது எமது சுருக்கமான எண்ணம்.

மாற்றத்திற்கான காரணத்திலே மதச்சார்பின்மையை கடைபிடிக்கவேண்டிய காரணமிருப்பதால் என்று சொல்லிக்கொள்வதற்கு பதிலாக, மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கும் கூட நாம் நமது மனவளக்கலையைக்கொண்டு செல்ல, குருவின் வார்த்தைகளை அங்காங்கே அவரவர் அறிவிற்கு பொருந்துகிற மாதிரி சற்றே மாற்றி அமைத்துக்கொண்டு மனவளக்கலையை கொண்டு செல்ல இருக்கிறோம்..

மாற்று வரிகள் இவையே, ஓம் சாந்தி என்று சொல்ல தயக்கம் உள்ளவர்கள் அமைதி அமைதி என்று சொல்லிக்கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தால் அது மிகவும் வித்தியாசப்பட்டிருக்கும்... ஓம் சாந்தி என்று தவம் பயின்றவர்கள் எல்லாம் அப்படியே தொடர்ந்து கடைபிடித்துக்கொள்ளலாம்...

நமது தேவைக்காக, குருவின் நிலையை கேள்விக்குறியாக்குதல் அல்லது யோசிக்க வைத்தல் என்பது தவிர்த்துக்கொள்ளவேண்டியவையே என்பதும் எமது கருத்துக்கள்...அவ்வளவே!


நமக்குள் ஒற்றுமை உண்டு... அந்த இடத்திலே இருந்து கொள்வோம்!

எமது கருத்துக்களினை சொல்ல வேண்டிய இடத்திலே சொல்லிகொள்வது எமது முயற்சி.. இந்த முயற்சி அனைத்து தரப்பிலும் தனியாக நேரடியாக செய்துவருகிறேன். அச்சம் இல்லை.

நீ இங்கே தான் பேசுகிறாய்! அங்கே போய் பேசுவியா? என்று கேள்வி எழுந்தவர்கள் எல்லாம், அணுகிப்பாருங்கள் பொறுப்பானவர்களிடம்... எமது கருத்துக்கள் எட்டியதா என்று கேட்டுப்பார்க்கலாம்..

எந்த காரணமும் இன்றியும் கூட வாழ்த்துவது குருவின் நிலை... ஆனால் சொன்ன சில வரிகளிலே இங்கே நினைவுக்கு வரிகிறது.

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிர் அறிவை உள்ளுணர்வாய் பெறுதல் வேண்டும்..

அப்படியே தான் எமக்கும் பாடத்தோன்றுகிறது... :-)

வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 5

அவரவர்க்கு அவரவர் உயர்ந்தோரே என்பதும் அறிவினது திருக்கூத்தில் ஒன்றே...


மணிகண்டன் : உங்களுக்கு குருவின் அந்த 2 வரிகள் மையமாக வைத்து கேட்கப்பட்ட ஒரு வரி கேள்விகளுக்கு,என்ன விடை கண்டீர்கள் / தெரிந்தது என்று தயை கூர்ந்து கூறுங்கள்... வாதிட விரும்புவருக்கு எதுவும் கூற முடியாது என்பதெல்லாம் குருவின் அந்த 2 வரிகளுக்கு விடையாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது...குருவின் கவிதைக்கும் அதை வைத்து கேட்கப்பட்ட ஒரு வரி கேள்விகளுக்கு மட்டும் விடை தாருங்களேன். வாதிடுவதாக தோன்றினால் மன்னித்து விடுங்கள்... உங்கள் அறிவை எம்மைப்போன்ற மூடர்க்கும் பயனாகும் படி செய்து எம்மை காப்பாற்றுங்கள்...


very simple doubts... (Please refer my previous postings for the questions)

One word answers are fair enough...

காலத்திலே நாம் மாற்றங்கள் சில செய்துகொள்ளும் போது, குருவின் தன்மையை கேள்விக்குறியாக்குதல் தான் இங்கே அலசுகிறோம்... குருவின் தன்மையை விட்டு நிற்கிற மாதிரி செய்கிற எதுவும் நீடித்து நிலைக்காது போகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்... அவ்வளவே...


மற்றபடி, நமக்காக அதிக நேரம் ஒதுக்கி விளக்கும் அருணுக்கு வாழ்த்துக்கள்.

gurucaraïámbuja-nirbhara-bhaktaç
samsárád-acirád-bhava muktaç
sendriya-mánasa-niyamád-evam
drakúyasi nijahødayasthqam devam.(31) bhaja govindham.

Being devoted completely to the lotus-feet of the Master, become released soon from the transmigrate process. Thus, through the discipline of sense and mind-control, you will behold the Deity that resides in your heart.


குருவின் பாதத்திலே லயிப்போம்..

உயிரை எழுப்பி அதை விரித்து அறிவாக எடுத்துக்காட்டும் வல்லமை குருவினைப்பிடித்தால் அன்றி தருவோர் தரணியிலே எவர்?


மறை பொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை மதித்து
தவம் அறம் கற்று பற்றி வாழ வேண்டும்...

அருட்குருவை மதித்து, பற்றி வாழ வேண்டும்... அதுவரை...???

சிறு வயது குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் பொழுது, அவர்களது வளர்ச்சியை மனதில் கொண்டு உடைகளை சற்று தாராளமாக தைத்துக்கொள்கிறோம். துணியானது அதிக உறுதியுடன் இருக்குமானால் இன்னும் சற்று தாராளமாக பெரிய அளவில் உடைகளை தைத்துக் கொள்கிறோம். இதனால் சில உடைகளை தைக்கும் போது பார்த்தால் பொருத்தமில்லாதது போலத் தோன்றும்.
எனினும், போகப்போக அந்த உடையின் உபயோகம் நீண்ட காலத்திற்க்கு பொருத்தமானதாக இருப்பதைக்காணலாம். இதுபோலவே ஞானிகள் உலக மக்களுக்குத்தரும் அறனெறிப் போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த காலத்திற்க்கு சற்றும் பொருத்தமில்லாதது போலவும், அவசியமற்றவை என்று எண்ணும்படியாகவும் தோன்றலாம். கடந்த கால அனுபவங்கள், தற்கால சூழ்னிலைகள், எதிர்கால விளைவுகள் என்ற மூன்றையும் இணைத்து ஊகித்து முக்கால ஞானம் என்ற விரிந்த நோக்கில் ஞானிகளது திட்டங்களும், போதனைகளும் உருவாவதால், மிக குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளுக்கும், பாமரர்களுக்கும், அவர்களுடைய போதனையில் அடங்கியிருக்கும் நன்மைகள் உடனடியாக எளிதில் புரிந்து கொள்ள முடியாது.


சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய ஞானிகளின் கருத்துக்கு தெளிவான விளக்கங்களை கொடுக்க இயலும்...
-- வேதாத்திரி மகரிஷி. Source www.vethathirium.org


வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 4

நமது குரு கோவிந்தா என்று சொன்னது ஒருவர் ஏமாற்றும் போது, ஏமாற்றப்பட்டவர்கள் பயன்படுத்தும் சொல்லே... அங்கே சீடனே, குருவிடம் அத்வைதத்தினை சொல்கிற போது, விழிப்பிலே மீண்டும் வருகிறார் குரு... இது ஒன்று...


ஆதி சங்கரர், காசி அழுக்கு மூடையுடன் தன்னை நோக்கி வந்த ஒருவரைப் பார்த்து விலகிப்போ என்கிறார்... அந்த மனிதர் ஆதி சங்கரரிடம், எதை நீங்கள் விலகிப்போகச்சொல்கிறீர்கள்? ஆத்மாவையா? தேகத்தையா? ஆத்மா என்றால் எங்கும் நிறைந்திருப்பதும், எல்லாவற்றிலும் இருக்கிற அது எதிலிருந்து விலகிப்போகச்சொல்கிறீர்கள்?

தேகத்தைத் தான் விலகிப்போகச் சொல்கிறீர்கள் என்றால், தேகம் ஒரு ஜடம் அல்லவா? அதனால் விலகிப்போக முடியுமா?

நீங்கள் ஆத்மாவை அறிவிலிருந்தும் விலகிப்போகச்சொல்கிறீர்களா? என்று திருப்பிக்கேட்க.... ஆதிசங்கரர் அவரின் கால்களிலே விழுந்து குருவாக ஏற்கிறார்...

பழக்க வழக்கங்களிலே( ஆசார அனுஷ்டானங்களிலே) இருந்து மாற்றிக்கொள்ள இறையே ஏற்படுத்தித் தரும் ஒரு வாய்ப்பு தான் இந்த மாதிரியான நிகழ்வுகள்...


நமது குருவுக்கு ஒருவர் சுட்டிக்கட்டியதும், ஆதி சங்கரருக்கு ஒருவர் சுட்டிக்காட்டியதும் ஒரு விதத்திலே ஒரே மாதிரியான நிகழ்வுகளே.

OM Shanthi Shanthi Changes Reg -- Post 3

என்ன அப்பா தாங்களே கோவிந்தா எனும் சொல்லை பேசும் போது உபயோகித்தால், தங்களது அத்துவைத சாரத்துக்கு அது ஒவ்வாமையாக அல்லவா இருக்கும், என்கின்றார். இதைக் கேட்ட மஹான், ஆமாம்மா சாரி சாரி, என்று இரு கன்னங்களிலும் போட்டுக் கொள்ளுகின்றார் [லிடெரல்ல்ய் கெ டிட் தட் கெச்டுரெ]. கோவிந்தா எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கக் கூடாது தான்மா, என்று தன்முனைப்பின்றி ஒப்புக் கொள்ளுகின்றார். அது தான் மஹான். கோவிந்தா எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கக் கூடாது என ஒப்புக்கொண்ட மஹான் சிவம், சக்தி எனும் சொற்களுக்கும் இதையே தான் சொல்லுவார் என்கிறது என் உள்ளுணர்வு. வாழ்க வளமுடன்.


அற்புதம் அருண்...

உங்களின் தேடல், முயற்சி, நோக்கம் அனைத்திற்க்கும் வாழ்த்துக்கள்.


1. ஒரு முறை குருவிடம் பேராசிரியர்கள் கூடிப்பேசினார்கள். குருவிடம்,ஒரு பெரிய பட்டியலும், பணமும் தரப்பட்டது...

பேராசிரியர்கள் சொன்னார்கள் : சாமி, இந்த பட்டியலிலே கடந்த ஒரு வருடத்திலே நமது மன்றத்திலே சேர்ந்து தீட்சை எடுத்துக்கோண்டவர்கள், காயகல்ப பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் என அனைத்தும் இருக்கிறது ".

தனது வலக்கையின் ஆட்காட்டி விரலால் பின் தலையை சொறிந்து கொண்டே குரு அவர்களிடம் திருப்பிக்கேட்டார்... " இதிலே எத்தனை தேறும்?".

அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லாததால், பேராசிரியர்கள் அமைதி காத்தனர்...


உங்களுடைய எழுத்திலே இருந்து ஒரு கேள்வி....

குருவிடம் அத்வைதத்தினை சொன்னால் மாற்றிக்கொள்வார் என்றீர்கள்... அதனால் தான் அவர் மஹான் என்றீர்கள்...

இப்போது கூட்டம் வேண்டும் ஓடுகிறோமே, அத்வைததிலே கூட்டம் நிலைக்குமா? மாற்றிக்கொள்ளச் சொன்னால் ஏன் முடியவில்லை? நீங்கள் மஹான் போல ஆகவேண்டும் என்று வாழ்த்தினால் வேண்டாம் என்கிறீர்களே... கருணையை புறக்கணிக்கிறிர்களே...

ஒரு வேளை குருவிற்க்கு மட்டும் தான் அத்வைதம்... நமக்கேல்லாம் துவைதமா? அல்லது அதுவும் இல்லையா?


விழிப்பு நிலையிலே சொல்லப்பட்ட எதுவும் மாறாத தன்மை கொண்டிருக்கும் என்பதை குருவே நிலை நிறுத்துவார்... பொறுத்திருந்து பாருங்கள்...

அருண்,உங்கள் விளக்கங்கள் துண்டு துண்டாக அங்காங்கே சிதறி இருக்கிறது...

நீங்கள் ஓம் சாந்தி என்பதை மாற்றிக்கொள்ளலாம் என்கிறீர்கள்... சரி... மாற்றிக்கொள்ளுங்கள்.. ஆனால் ஓம்கார மண்டபத்திற்க்கு விளக்கம் எல்லாம் சொல்கிறீர்களே... அதுவும் ஒரு மதத்திற்கு சார்பாக உள்ளதே..

ஓம் சாந்தி என்ற சொல்லையே ஏற்காதவர்களுக்குத் தான் நீங்கள் விளக்கம் சொல்கிறீர்கள் என்பதை ஒவ்வோர் இடத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும். புதிதாக சேர்பவர்கள், மதச்சார்பின்மையை கடை பிடிப்பவர்கள்... அவர்களுடைய மதச்சார்பின்மை என்ற இலக்கணத்திலே, ஓம் சாந்தி தவறு... ஓம்கார மண்டபம் சரியானதே என்று இருந்தால் நீங்கள் தப்ப வாய்ப்பு.. இல்லையெனில் கடினமே.. :-)


இல்லை... நமது மணிகண்டன் சொன்னாரே... ஆரம்பத்திலே வரட்டும்...இப்போதைக்கு மாற்றிக்கொள்வோம்.... பிறகு நாம் அவர்களை (மூளைச்சலவை செய்து) மாற்றிவிடுவோம்... என்பது போலவா?

இந்த வெளி உலகத்திலே உள்ளவற்றுக்காக நாம் பேசுகிறோம்.. விடுங்க... நமது குருவின் இருவரிகளுக்குத் தான் என்னுடைய இவ்வளவு முயற்சியும்...அந்த இரு வரிகளைத் தொடாமல் நீங்கள் எங்கெங்கோ செல்கிறீர்கள்... உங்கள் ஞாபகத்திற்க்கு.... அந்த வரிகள்...


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்
துரிதமுடன் மதம்கடப்பார் உண்மை காணீர்....


குருவானவர் அறிவறிந்தவரா?

குருவானவர் முழுமை பெற்றவரா?

இரண்டுக்கும் பதில் ஆம் எனில், அவர் மதம் கடந்தவரா? ஆம் எனில், எதற்க்காக நீங்களே குருவைப்பற்றியும்,எதனால் அவர் ஓம் சாந்தி என்பதையும், ஓம்கார மண்டபத்திலே இருந்துவருவதையும் அவர்களிடம் சொல்லக்கூடாது?

எதற்க்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை இப்போது வருகிறது? சார்பின்மையை இப்போது தான் பின்பற்றுகிறோம் என்று மாற்றிக்கொள்ளும் போது, குருவின் நிலை? அவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர் என்பது போல் ஒரு தோற்றம் தருகிறீர்களே... அதனால் தான் அந்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் கேட்கிறேன்....

குருவின் வரிகளையாவது தொட்டுப்பேசுங்கள்... தியானத்திலே,குருவை பிறகு தொட முயற்சிப்போம்...

வாழ்க வளமுடன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 2

வாழ்க வளமுடன்


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்

துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்...


என்று சொன்னார் நம் குரு...


நமது குரு அறிவறிந்து முழுமை பெறவில்லை என்பதால் தான் மதச்சார்பின்மையை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று கூறும் முழுமை அடைந்த அறிவறிந்த மகான்களை வணங்குகிறேன்.

ஏதோ நமது குரு தெரியாமல் ஓம்கார மண்டபத்தை ஓம் கார வடிவிலே கட்டிவிட்டார்... பெயர் மாற்றுவது மட்டும் போதாது... அப்படியே அந்த மண்டபத்தின் தோற்றத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்றும் சிலருக்குத் தோன்றலாம்... ஆமாம், ஓம்கார மண்டபம் தவறான ஒரு தோற்றத்தைத் தருகிறது என்றும் சிலர் சொல்லலாம்... அதற்க்கு விளக்கமும் தரலாம்... என்ன இப்போது கூட்டம் வேண்டும்... பஜனை பாட வேண்டும்... தவம் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது... கும்பலோடு கோவிந்தா பாடவேண்டிய காலம் கனிந்து விட்டது.

இப்போது நாமெல்லாம் குரு கொடுத்த தவத்தை முழுமையாக கடைபிடித்து, முழுமை அடைந்து குருவைத் தாண்டிய சீடர்களாக நிற்கிறோம்.. அதனால் தான் குருவின் அறிவிற்க்கு எட்டாத பல விசயங்கள் நம்மால் இப்போது செய்ய முடிகிறது...

குரு பௌதீக உடலோடு இருந்த வரை நமது மனவளக்கலை பரவியதை விட இப்போது தான் வேகமாக பரவுகிறது என்று கூறும் மகான்கள் இப்போது நம்மில் பலர் இருக்கிறார்கள்...

கலைஞர் நூற்றாண்டுக்கு வந்தது, அஞ்சல் தலை வெளியீடு என்று பல சாதனைகள்... ஆனால் நமது குருவால் முடியாததை எல்லாம் இப்போது தான் சாதித்து இருக்கிறோம்... இதெல்லாம் நாம் சொல்லி சொல்லி வரும் தலை முறை வரை பரப்பிக்கொண்டே போவோம்...

சரி... குருவானவரை மகரிஷி என்று அழைக்கக்கூடாது. வெறும் வேதத்திரி என்றே அழைக்கவேண்டும்... குருவணக்கம் என்ற இடத்திலே அருட்தந்தைக்கு வணக்கம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அருட் தந்தை எங்களுக்கென்று தனியாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வார்கள். வேதாத்திரியின் போட்டோவை எடுத்துவிட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்... இப்படியெல்லாம் ஆசைப்படுவோர்கள் எல்லாம் நமது மனவளக்கலைக்கு வரலாம்.... நாம் இப்படித்தான் பரப்பியாக வேண்டும். ஏனென்றால் நமக்கு இப்போது கூட்டம் வேண்டும்.. இவர்களுக்காக நாம் எதையும் இழக்கத்தயார்...


எவ்வளவோ ஆராய்ச்சி செய்து நமது குரு 98 ஆண்டு வாழ்ந்தாரே... இந்த ஓம் சாந்தி என்பதையும், ஓம் காரமண்டபத்தினையும் மாற்றாமல் பற்றி ஏனோ விட்டு வைத்து விட்டார்..

குரு அறிவறிந்து முழுமை பெற்றால்

துரிதமுடன் மதம் கடப்பார்.. உண்மை காணீர்... என்று நமது குரு ஊருக்குத்தான் உபதேசமாகச்சொன்னாரா? அல்லது தானும் கடைபிடித்தாரா?

அவர் அறிவறிந்து முழுமை அடையவில்லை என்று எடுத்துக்காட்டுங்கள் முதலில்... நிரூபியுங்கள் அவர் முழுமை அடையவில்லை என்று.. இவ்வளவு நாள் நாமெல்லாம் இதைச் செய்தோமே அப்போதெல்லாம் இது சரியாக பட்டது அல்லது அதிலே விழிப்பிலே இல்லாது இருந்துவிட்டு, இப்போது திடீர் ஞானத்தின் காரணம் என்னவோ?

நமது குருவானவர், ஆமப்பா.. நான் விழிப்பில்லாமல் தெரியாமல் அந்த இரண்டு வரியை சொல்லி விட்டேன்... என்று சொன்னாரா? அப்படியே அந்த இரண்டு வரியை மாற்றி இருப்பாரே அதையும் சொல்லுங்கள்...

இந்த பிச்சைக்காரன் கையிலே திருவோடு கூட இல்லாமல் பிச்சை கேட்கிறான்...

முற்போக்கோ அல்லது பிற்போக்கோ, குருவின் வரிகளை இப்போது இருப்பவர்களும் தவம் செய்து முடித்துவிட்டதாய் எண்ணுவோர்கள், குருவின் வரிகள் கூட மாற்றக்கூடியதே என்று நம்மிலே இருந்து கொண்டு கருதுவோர்கள் எல்லாரும் விளக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்.

OM Shanthi Shanthi Changes Reg -- Mathi's opinion...

வாழ்க வளமுடன்! அனைவருக்கும் வணக்கம்!

நண்பர் சுந்தரராஜன் சொல்வது மிகவும் சரியே.

ஏன் இந்த மாற்றம்? இதனால் குரு கற்றுகொடுத்த தவத்தில் என்ன மாற்றம் நிகழும்?

தவமுடிவில் ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்பதற்குப் பதிலாக,


என் மனதில் அமைதி நிலவட்டும்
என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும் - என்று சொல்வதினால் புதிதாக என்ன மாற்றம் உண்டாகும் என்பதை எங்களுக்கு தயவு கூர்ந்து விளக்க முடியுமா?

ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்று சொல்வது மதசார்பினை கடைபிடிக்காததாக கருதபட்டால் அருட்பெரும்ஜோதி நகர் மற்றும் ஓம்காரமண்டபம் என்பதை எப்படி இவர்களால் ஏற்று கொள்ள முடியும்?

இதை எங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு குருவின் பாதம் தொட்டு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்
P. மதிவாணன்

OM Shanthi Shanthi Changes Reg -- Post 1

குருவே சரணம்.

குரு அருளின் திரு அருளால் எமக்குள் எழுந்த சிறு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் எம்முடைய எழுத்துக்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றும் குரு என்ற சுத்த வெளியில் கருணை நிலையிலே இருந்து எழுதுகிறேன் எமது அறிவுக்கு எட்டினவரை, பிரணவம் என்பது மனதைக்கடந்த சுத்தவெளியிலே உணரப்படும் ஓசை.. ஓ ஹம்... அதாவது எழும் "சப்தமும் நானே" என்பது... அதுவே ஓம் என்று குறிக்கப்படுகிறது.

அந்த பிரம்ம லயிப்பிலே இருந்து விழிப்பு நிலையிலே, எழுகின்ற ஓசையானது ஒருவிதத்திலே ஓம் என்ற ஓசையினை ஒத்து இருப்பதை பல மகான்கள் அனுபவித்து சொல்லி இருக்கிறார்கள். இதையே தான் நமது குருவும் கடைபிடித்தார்கள். இது இந்தியர்களாக இருக்கும் பட்சத்திலே, நமக்கு அது ஒரு சமயத்தினர் பயன்படுத்துவது வாடிக்கை என்றாலும், மற்ற சமயத்தினர் என்று கருதப்படுபவர்கள் அதை பயன்படுத்தக்கூடாது என்ற எந்தவித விதியும் இல்லை தடையும் இல்லை.

மத சார்பின்மை என்ற காரணத்தினால் இந்த புது விதி என்று சொன்னால், இவ்வளவு வருடம் எத்தனையோ நாட்கள், வருடங்கள் சமாதி நிலையிலே இருந்து வந்து நமது குரு மாற்றாத ஒரு விசயம் இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மேலும் குருவானவர் மதச்சார்பின்மையை கடைபிடித்தாரா என்ற கேள்வியும் எழுந்து விடுகின்றது...



தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமையாகும்.
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும், அந்தச்
சிறுமுட்டை ஓட்டைவிட்டு நிங்கிடாது

நோய்பொறுக்கா நிலையில் அதை உடைத்துக்கொண்டு,
நொடியினிலே வெளியேறும் விந்தை காணீர்!
தூயநிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடபபார். உண்மை காணீர்!


என்பார் நமது குரு...

எப்போது ஒருவர் மனதைக்கடந்து அறிவை அறிந்து முழுமை பெறுகிறாரோ அவர் தானாகவே மதம் கடப்பார் என்றும் நமது குரு சொல்வார்...



அப்படிப்பார்க்கையிலே, இதுவரை குருவானவர் முழுமை அடையாதது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் குருவானவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்கவில்லை என்று சொல்வது எப்படி?

யாரை திருப்திப்படுத்த இந்த மாற்றம்? அவர்களிடம், ஓம் என்ற வார்த்தையினை பயன்படுத்தும் காரணம் விளக்கப்பட்டதா? குருவானவர் நீர் என்றால் அது நீர் தான், நெருப்பு என்றால் அது நெருப்பு தான் அந்த நெருப்பிலே குதி என்று சொன்னால் குதிக்க தான் வேண்டும் அப்பொழுதுதான் குருவின் கட்டளையை ஏற்றுகொண்ட ஒரு சீடனாக நாம் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. குருவானவர் முழுமை நிலையில் எழுதிய, நமக்கு கொடுத்த முறைகளை எந்த காரணத்தினாலும் நாம் விட்டுகொடுக்க வேண்டியதில்லை என்பது எமது தாழ்வான கருத்து.

இவ்வளவு நாளாய், ஓம் சாந்தி என்று சொல்லும் போது என்ன ஆனதோ அதுவே தான் புதிதாக சொல்லப்படும் வரிகளாலும் நடக்கும்.


துரியாதீதத்திலே தவம் நிலைத்தால், அமைதி நிலைத்து விடும். ஓம் சாந்தி என்று சொல்லவே வேண்டியதில்லை... இந்த பழக்கங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்களுக்காக சொல்லப்பட்டது.

தவம் நிகழ்ந்தால் அமைதி தானாகவே நிலைத்து விடும். குருவின் காலடியை பிடித்துக்கொண்டால் எல்லாமும் சரியாகி விடும். சென்னையில் இருக்கும் ஒருவர் சுய நினைவுடன் வாழும் பட்சத்தில் அவர் நான் சென்னையில் இருக்கிறேன் என்று திரும்பி திரும்பி சொல்லி கொண்டு இருக்க தேவையில்லை. அதுபோல அமைதியினை உணர்ந்த ஒருவருக்கு நான் அமைதியிலே இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்க தேவையில்லை.

கற்பனைகளுக்காகத் தான் இந்த மாற்றங்கள் எல்லாம். அமைதி என்பது மனது இயங்கிக்கொண்டே அமைதி அமைதி என்று சொல்லிக்கொண்டே இருப்பின் வந்து விடாது... மனதைக்கடந்து விட்டால் வராமலும் இருக்காது.

எமது எண்ணங்கள் யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை என்பதை குருவின் மேல் ஆணையிட்டு சொல்லிகொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

தியான உயர்வுக்கு சில தகவல்கள்...

வாழ்க வளமுடன்....


குருவின் அருள் என்பது சீடனின் மனோ இயக்கத்தினைக்கடந்தே தான் எப்போதும் இருக்கிறது.

நாம் செய்யும் பல செயல்கள் அனைத்தும் கூட, ஒரு விதத்திலே, நிலையான இன்பம் தரும் என்ற நியதியிலே செய்யப்படுகிறது. இது எல்லா செயல்களுக்கும் பொதுவானது. முனைப்போ அல்லது முனைப்பன்றியோ எந்த செயல்களாக இருப்பினும் கூட.

நாம் உடல் என்ற அளவிற்குள் இருக்கும் போது, தான் தனது என்ற எண்ணத்தின் அடிப்படையிலே செயல் படுவது தவிர்க்க முடியாதது.

எண்ணம் என்பதன் அடையாளமே தான் நாம் குருவின் மௌன நிலையிலே இருந்து வெளியிலே இருப்பதால் என்று தியானத்திலே ஒடுங்க வேண்டும்.

புறச்செயல்கள் என்பது கனவைப்போலவே. கனவு கண்ட பிறகு எழும் நாம். ஓ... இது கனவா? என்று சொல்லி அதை துறக்கிறோம் அல்லவா? அதற்குக் காரணம் கனவிலே இருந்து விழித்துக்கொண்டதால் தானே? அது போல நாம் விழிப்பு நிலையாம் இறை நிலையிலே குருவோடு இணைந்து ஒன்றாகும் போது, தான் தனது என்ற எண்ணத்தைத் தரும் தன் முனைப்பை மாற்ற முடியும். அதற்கு சீரிய தவமும் குருவிடம் கொள்ளவேண்டிய பணிவும் மட்டுமே தேவை.

தான் தனது என்ற எண்ண எழுச்சியே தான் தன்முனைப்பின் ஆரம்ப நிலைகள் என்று அந்த அசைவு ஏற்பட்ட இடத்திலேயே விழிப்புடன் குருவோடு நின்று கவனித்து வளர்த்துக்கொள்ளவேண்டும்...

குருவிடம் கொள்ளும் பற்று அதிகரிக்க அதிகரிக்க, குருவோடு நாம் அடிக்கடி மனோ அலைத்தொடர்பிலே இருக்க வேண்டிய சூழல் அதிகம் வரச்செய்யும். உடல் என்ற ஒன்றுக்கோ, தான் தனது என்ற முனைப்பிற்கோ சோதனை தரும் பல விசயங்கள் சுற்றிலும் வரும். குருவிடம் சொல்லாது எந்த காரியமும் செய்யக்கூடாது. அதே நேரம், விழிப்பு நிலையிலே இருந்து மாறாமல் இருக்கும் தன்மையை விடாமல் இருக்கும் நிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

தான் தனது என்ற நிலைக்கு முக்கியத்துவம் என்பது நாம் திரும்ப கனவு உலகத்திலே காலடி எடுத்த வைத்த கதை ஆகி விடும். குருவைப் பிடித்துக்கொள்ள வரும் ஒரு வாய்ப்பாக, அந்த சோதனைகளைத் தாங்கிக்கொண்டு, பொறுத்துக்கொண்டு முன்னேறவேண்டும். தொடர்ந்த குரு மீதான ஒரு அணுகுமுறை, தவத்திலே உட்காரவைக்கும். அப்போது, முயற்சியே இன்றி, தியானமானது நமது உடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, உடலுக்குள் இருந்து உயிரை எழுப்பிக்கொண்டு குருவின் இடத்திற்கு வரை எடுத்துக்கொண்டது போல தியானம் தானாகவே நிகழும். அங்கே நாம் தியானம் செய்தோம் என்ற சிறு முனைப்பிற்க்குக்கூட இருக்காது. இது முனைப்பு கடந்த நிலையின் வகை.


தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக்கென்ற தன்முனைப்புக் குன்றிப்போகும்
பவவினைகள் புதிது எழா. முன்னம் செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்

என்கிற குருவின் வரிகளை பாருங்கள்...

சில விசயங்களில் சூசகமாக சில விசயங்கள் அடங்கி இருக்கும். அது போல, குருவின் இந்த வரிகள் கூட. எதனை நினைந்தால்.... எல்லாம் கிடைக்குமோ அதை நினைந்து வர வர எல்லாவற்றிலும் உயர்வு கிட்டும்.

அந்த கவியில் குரு சொல்வார்...

சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மன மயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியினால் அன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்...

என்கிறார்.

பவ வினைகள் புதிது எழாது காத்தலும் அன்றி, முன்னர் செய்த பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும் என்கிற வரிகளை கவனித்து தம்மை உயர்த்திக்கொள்ளவேண்டும்.


இது குருவை பணிந்தால் வரும் நிலைகளின் சில வரிகள்.

வாழ்க வளமுடன்.

Friday, December 10, 2010

nhed

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்...


வாழ்விலே நமது சூழல் மற்றும் பழகும் இயல்புக்கு ஏற்றார் போலவே நம்மை சுற்றி உள்ளவர்கள் அமைவர்.

இதிலே, தியானத்திலே ஈடுபடுவோர்கள், பொது இடத்திலே தியானத்திலே ஈடுபடாதவர்களோடு இருக்கும் பட்சத்திலே, மிகவும் எச்சரிக்கையோடு சுற்றி உள்ளவர்கள் மன அலையை கணக்கிலே கொண்டு, அதற்கேற்றார் போலவே தியானம் சார்ந்த விசயங்கள் பேசுவதோ, கலந்துகொள்ளுவதோ வைத்துக்கொள்ளுவது நல்லது.

நாம் இந்த சமுதாயத்திலே எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறோம்... எப்போதும் ஒரு விசயத்திற்க்கு, மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அருகிலேயே இருப்பார்கள்.

இதிலே குரு என்ற அருளுடன், மனோ அலைத்தொடர்பிலே இருக்க முயற்சித்தலும், அதை எப்படி முறைப்படுத்துகிற போது ஆழ்ந்த நிலையை வெளியிலே தெரியாதது போல வைத்துக்கொள்ளுதல் என்பது நீண்ட காலத்திற்கு தியானத்திலே சாதனை புரிய உதவும்.

குரு சீடர் என்ற பந்தம் ஏற்படும் அளவுக்கு, உலகாய விசயங்களிலே ஒரு தெளிவோடு சீடன் மாற ஆரம்பிப்பது இயல்பே. ஆனால் சுற்றி உள்ளவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். அப்போது வரும் விமர்சனங்களை, குருவைக்கொண்டு சமாளிக்க கற்க வேண்டும். குரு என்ற பற்று ஏற்பட்ட உடன், கொஞ்ச கொஞ்சம் நமது தியான வாழ்விற்குத் தேவைப்படாத, எந்த பதிவுகளும், தேவையில்லாத நட்புகள் வரை கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்... நட்பு விலகும் போது, நாம் மீண்டும் உடல் என்ற வட்டத்திலே நின்று விட்டால், அங்கே துயரம் ஏற்பட்டுவிடும்... அது சரியாக நீண்ட நாளாகலாம்.

குரு என்ற நட்பு மட்டும் தான் எப்போதும், பிறப்பின் பயனை அடைவதற்கு உதவும் என்பது நாம் அடிக்கடி மனதிலே சொல்லிக்கொள்ளவேண்டியது...

இரு மனிதர்கள், ஒத்த வயது என்றால், ஒரே மாதிரியான சட்டை போடுவது, ஒன்றாக வெளி உலகத்திலே இருப்பது என்று இருந்தாலும், அவரவர் அமைப்பிற்கு ஏற்ப, யாரோ ஒருவர் விட்டுக்கொடுப்பிலே இருப்பார். அவர் பொறுமை இழந்து விடும் அளவுக்கு மற்றவர் காரியம் செய்து விட்டால், சேர்த்து வைத்து மனதிலே வேற்றுமையும், வெளியிலே வெறுப்பும் வந்து நட்பு உடைந்து விடும்.

ஆனால், குரு சீடர் என்ற மனோ அலையிலே உருவான பந்தமானது, குரு நிரந்தரமாய் மாறாத ஆனந்தத்திலே, அமைதியிலே, எதையும் எதிர்பார்க்காத நிலையிலே இருப்பதால், சீடன் அமைதியை விட்டு விலகினாலும் திரும்ப நல்வழியிலே செல்ல குருவிடம் வந்தவுடன் முன்னேற்றமடைகிறார்.

குரு சீடர் என்ற உறவு என்பது மட்டுமே ஒருவருக்குப்போதுமானதாகவே இருக்கிறது..

ஏனெனில், நாம் நட்பு கொள்ளும் நபர் முதிர்ச்சிபெறாதவராக இருக்கும் போது, நட்பிலே விரிசலும், மன உளைச்சலும் நிச்சயமானதே..

சீடன் என்பவர், நிலையான ஒன்றை வேண்டியதால் தான் குரு என்ற ஒரு பந்தத்தினைப் பெறுகிறார். ஏனெனில், மனிதனின் மனம் என்பது ஒரே நிலையில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.

வெளியிலே காட்டிக்கொள்ள வந்த எந்த ஒரு நட்பும் கூட ஒருவருக்கு உள்ளுக்குள் ஏமாற்றத்தோடு போடும் வேஷமாகவே இருக்கும்.

நிலையான குருவிடம் சீடன் சரணடைந்து விட்டால், மற்ற எதிலும் விழிப்புடன் கூடிய அணுகுமுறை ஏற்பட்டு விடும்... அதில் சில இடங்களில் தோல்வி கண்டாலும், எதிர்பார்ப்பு இல்லாத மனோ நிலையால் ஏமாற்றம் மிஞ்சாது இருக்கும். இந்த நட்பு கொள்ளும் போதே நண்பர் எப்படி நடந்து கொள்வார் என்கிற எச்சரிக்கை உணர்வு வந்துகொண்டே இருக்கும். அதைப்பிடித்துக்கொண்டு பழகினால், ஏமாற்றம் மிஞ்சாது இருக்கும்..

குருவிடம் உயர் நிலையிலே சரணடைந்தவர்கள், இறை என்ற அறத்திலே வாழும் கட்டாயம் இருக்கும். இதனால், சீடன் வாழும் போது, குருவை விட்டு எங்கே ஒரு அடி எடுத்து வைத்தாலும், உடனே குருவானவர் சீடனை ஒரு அடி அடித்து, தன்னிடம் வரவழைப்பார்.. மீறி துணிந்து அந்த நட்போடு செல்லும் போது, சென்ற வழி சிறிது தூரம் வரை, சீடன் ஏமாற்றத்தோடு ஏற்றுக்கொண்டு போனாலும், அந்த பிரிவு என்று நிலையை ஏற்படும் போது, பழக்க அறிவால் சீடன் குருவிடம் உடனே வந்து விடுவார்... ஆனாலும், எவ்வளவு தூரம் விலகினோமோ அவ்வளவு தூரம் விளைவை குரு எடுத்துக் காண்பித்து, செயல் விளைவை புரிய வைப்பார். வலிக்கும்.. ஆனால் குருவோடு இருப்பதால் மனவலிமை இருக்கும்.

இப்போது மீண்டும் குருவோடு சேர்ந்து விடுவார்.. குருவானவர் சீடனின் தன்மை தெரிந்தும் எதற்காக துன்பப்பட விடுகிறார் எனில், தன் பிள்ளைக்கு அனுபவம் என்பது ஏற்படுத்தவே தான். இதிலே எமக்கு அறிவில்லை என்று சீடர் சொல்லக்கூடாது என்று குருவே அனுமதிப்பார். அனைத்தும் நல்லதற்கே.

இதற்குத் தான் ரமணர் சொல்வாரே..

நீர்க்குடத்தை தலையில் சுமக்கும் பெண்கள், ஊர்க்கதையை அளவளாவினாலும், பகுதி கவனமானது குடத்திருந்து நீர் சிந்தவே கூடாது என்று இருப்பதைப்போல,

குருவிடம் தொடர்ந்து அணுகும் சீடனை, குருவும் விட்டு விலகவே மாட்டார். நிலையான ஒன்று குருவே. மற்ற எதுவும் இல்லை என்று ஒடுங்க வேண்டும்.

நாம் வாழ்விலே என்னவாகவும் இருக்கலாம். ஆனால் உள்ளே இருப்பது குரு என்ற ஒன்றே என்று இருந்தால், வாழ்வே சிவமயம்.

குரு என்ற பற்றின் ஆழம் அதிகரிக்கும் போது, தனியாக ஆக்கப்பட்டதாக ஒரு சூழல் வரும். அப்போது எளிதாக, குருவைப் பிடிக்க முடியும். ஏனெனில், வேறு எந்த புறப்பொருளும்(பட்டம் பதவி, கௌரவம் என) அப்போது தேவை இல்லை என்றாகி இருக்கும்.

எந்த ஒரு நிலையானதோ, அதை நோக்கிச் செல்வதே புத்திசாலித்தனம். செல்லும் வழி சீடனுக்கு கடினமாகத்தோன்றலாம். ஆனால் அந்த வலிகள் தாங்கிக் கொள்ளக்கூடியவைகளாகவும், முடிவிலே ஆனந்த நிலையாகவும் ஆகி விடும்.

குருவே சரணம்.

குரு என்ற பந்தம்!

வாழ்க வளமுடன்


குருவே சரணம்.



எது நிகழ்ந்தாலும் மாறாதது குருவின் அருள் நிறைந்த இறை நிலையே.


வெற்றி வேதனை என்ற இரண்டும் இல்லாத நிலை அது.


எந்த இரண்டு மனிதனின் நட்பை விட, சீடன் குருவிடம் கொள்ளும் மன அலைத்தொடர்பே உயர்ந்தது.


எப்போதும், கருணையை, இறை நிலையை உணர்த்துகிற ஒரு இடம் தான் குருவின் மீதான தொடர்பு.


இந்த உடலுக்கு உள்ள அனைத்து பந்தங்களிலும் கூட நமக்கு இறையை போதிக்கிற ஒரே பந்தம் குரு பந்தமே.

எந்த நிலையிலும், குருவின் மீதான மன அலை தொடர்பு என்பது அந்தந்த அலை இயக்கத்திலே இருந்து நமக்குத் தேவையான அனைத்து உயர்ந்த அனுபவமும் கிட்ட உதவுகிறது.

குரு என்ற ஒருவர் உடலைக்கொண்டு இருக்கலாம். ஆனால் சீடன் குருவை உடல் என்ற எல்லையைக் கொண்டு பார்ப்பது அந்த சீடனின் உயர்வை மட்டுப்படுத்தும்.

குரு தனது உடலைக்கடந்த அறிவிலே நிலைத்து இருந்து கொண்டே இருப்பதால், குருவின் மீதான எண்ண அலையானது எண்ணத்தை உயர்த்தி இறை வரை கொண்டு போகிறது.

குரு என்ற ஒருவர் உடலைக் கொண்டு இருந்தாலும், உடலைத் தாண்டிய சமாதியில் இருந்தாலும், அண்டுகிற சீடனுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்துக்கொண்டே தான் இருக்கும். குருவின் இந்த உதவியானது அவரது உடலைக்கொண்டு செய்வது அல்லவே!

இறை அறிவிலே ஒன்றானால், அவரும் நாமும் ஒன்றாகிற போது நமக்கு அங்கே உடல் எங்கே இருக்கும்? உதவுகிற குருவென்ற அருளுக்கு ஏது உடல்? யாருடைய உடலைத் தேடுகிறாய் சீடனே? அருள் என்ற நிறையிலே உனக்கேது உடல்?

அருள் மட்டுமே நீடித்து விளங்கும்போது, அங்கே பொருளென்று கொள்ள முனைவோருக்கு இடமேது?


தவ நிலையிலே தான் ஆதிக்கு சமமான சமாதி நிலையை மனிதன் எட்டமுடிகிறது என்கிற போது, இருப்பாகிய இறை நிலை சதாசிவமாக எப்போதும் தியானனிலையை விட்டு நீங்காது விளங்குகிறது என்பது தெளிவாகிறது.

எது நிலையானதோ அங்கே குருவின் இயக்கத்தைத் தேடிப்பார்த்தால் அங்கே சீடனின் இயக்கம் நின்று விட்டிருக்கும்.ஆதியோடு ஒன்றாகி இருந்து விட்டிருக்கும்...

இந்த உடலை மட்டும் பிடித்துக்கொண்டு அறிவாக உள்ள குருவைப் பார்ப்பது என்பது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பயன் தராது.

எது நிலைக்குமோ அதுவே குரு. எது நீடிக்குமோ அது குரு.

இந்தக்கணத்திலே உடலை விட்டு உயிர் பிரிந்தாலும், தங்கு தடை இன்றி அந்த ஈர்ப்பிலே கலந்து இறையோடு சென்று சேர வேண்டும் இந்த உயிர். அதற்க்கு குருவென்ற உதவியை தொடர்ந்து பற்றுதல் முக்கியம்.

எந்தகோணத்திலே ஆராய்ந்தாலும், எத்தனை புத்தகத்தைப் படித்தாலும் குரு இல்லாமல் இந்த வாழ்விலே அருள் என்ற ஒன்றை பெறுதல் சாத்தியமே இல்லை.

வாழ்க வளமுடன்.

குருவின் இயக்க நிலை!!

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


நாம் என்ன நிலையிலே இருக்கிறோம் என்பதை நமது செயல்கள் காட்டுகின்றன. நமது எண்ண அலைகளின் தன்மை என்பது தான் நாம் பொதுவாக நம்மை கவனித்துக்கொள்ளும் நிலை...

ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமக்கு இருக்கும் அனுபவமானது ஒரு புறமாகவும், நமது பழக்கங்கள் எல்லாம் மறுபுறமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை பார்க்கும் போது நமது ஆன்மீக உயர்வு நமக்குப்புரியாது போகிறது.

அறிவிலே இருந்து சிறிது அசைந்தாலும் கூட நாம் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கவே தான் செய்கிறது. விழிப்பு நிலையிலே நாம் நம்மை தொடர்ந்து வைத்துக்கொண்டே தான் இருக்கவேண்டும். இல்லாவிடில் ஒரு கணத்திலே நாம் தவறு செய்துவிடுவோம்...

அந்த தவறு நமது பிறப்பால், சூழ்னிலையால், வளர்ப்பால், பிறரின் தூண்டுதலால் என்று பல காரணங்களில் நாம் தவறினை செய்து விடுகின்றோம். தவறு செய்யும் அந்தக்கணம் நாம் அறிவிலே இருந்து விழிப்பு நிலையை மாற்றி விடுகிறோம். தவறிழைத்த பிறகு நாம் மீண்டும் புரிந்து கொள்ளுவது என்னவெனில், நாம் விழிப்பிலே இருந்து தவறினோம். மேலும், செய்த தவறின் விளைவினை பார்த்த பிறகு சில நேரத்திலே நம்மை மாற்றிக் கொள்கிறோம்.


ஒரு சம்பவம் இந்த கணத்திலே நினைவிற்க்கு வருகிறது.


ஆதிசங்கரர் அத்வைதத்தை பரப்ப காசி நகரத்திலே பயணம் கொண்டிருந்தார்.

நான் ஆகாயம் இல்லை... நிலம் இல்லை, நீர் இல்லை பஞ்ச பூதங்களில் ஒன்றுமே இல்லை. இந்திரியங்கள் ஒன்றும் இல்லை. நோய் இல்லை, பயம் இல்லை, மரணம் இல்லை. முடிவற்றதும் விளக்கமற்றதுமாக இருக்கிற சிவம் மாத்திரமே நான் " என்று சிறு வயதிலே சங்கரர் தன் குருவின் முன் அத்வைதத்தை சொல்ல ஆரம்பித்தவர்.

சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கையிலே , எதிரில் கள்ளுப்பானையை சுமந்து, அழுக்கு உடையோடு தள்ளாடியபடி, நாய்கள் சுற்றி குரைத்துக்கொண்டே வந்த அந்த நபர் தன்னை நோக்கி வந்த போது, சுற்றி இருந்த சீடர்கள் சங்கரரிடம், அந்த நபர் நம்மை நோக்கியே தான் வருகிறார் என்பதால், நாம் வேறு திசையிலே சென்று விடலாம் என்கின்றனர்..

அந்த நபர் தொடர்ந்து தன் எதிரில் வந்து நின்ற நிலையிலே சங்கரர், விலகிப்போ என்கிறார்.

அந்த செயல் செய்த கணத்திலே தான் சங்கரர் தன்னை விழிப்பிலே இருந்து பிறழ்ந்த கணமாகிப்போனது... எதிரில் வந்தவர் சங்கரரிடம்,

நீங்கள் எதை விட்டு விலகச்சொல்கிறீர்கள்? ஆன்மாவையா? தேகத்தையா? ஆன்மா என்றால், செயலற்றதும், முடிவற்றதுமானதுமான அது எப்படி விலகிச்செல்லமுடியும்?

தேகத்தைத்தான் விலகச்சொன்னீர்கள் என்றால், எல்லா தேகங்களும் ஒரே பொருளைக்கோண்டு படைக்கப்பட்டவை அல்லவா? மேலும், தேகம் ஜடம் அல்லவா? அதனால் எப்படி ஒன்றிலே இருந்து விலகிசெல்ல முடியும்?

நீங்கள் எனக்கு இட்ட ஆணை என்ன? அறிவில் இருந்தும் விலகிப்போக வேண்டுமா? என்று கேட்டபோது சங்கரர் பதில் சொல்ல முடியாது தடுமாறுகிறார்.

எந்த கணத்திலே விழிப்பு நிலையாம் மெய்ப்பொருளில் இருந்து அசைந்து உடல் சார்ந்த பழக்கமான அந்த ஆச்சார உணர்வில் இருந்து ஒரு வார்த்தை சொன்னாரோ, விழிப்பு நிலையாம் அந்த அத்வைத சித்தாந்தத்திலே இருந்து விலகி தனது பிறப்பால் உடல் சார்ந்து ஒரு வார்த்தை உதிர்த்தாரோ அப்போதே,அந்தக்கணமே தவறு நிகழ்ந்தது..

அந்த அழுக்கு நபரிடம் விழிப்பு நிலை இருந்தது. அவரின் கால்களில் விழுந்து சரணடைந்து, நீங்களே என் குரு என்று வணங்குகிறார் சங்கரர்.

அப்போது சங்கரர் முழுமையாக ஞானமடைகிறார்.


ஒரு சிறு அசைவு கூட நாம் விழிப்பிலே இருந்து விலகி செயல்கள் புரிய வாய்ப்புகள் அதிகம்.

ஆசை தூங்கும் இதயத்தின் அசைவு கூட மொழியாகும்.. என்று கவிஞர் வைரமுத்து சொல்வார்...இச்சையில்லாத போது ஒரு அசைவு ஏற்பட்டால் கூட, நாம் நமது முழுமையிலே இருந்து விட்டு விலகுகிறோம்.. விழிப்பிலே இருந்து விலகுகிறோம்.. அந்த அசைவு என்பது ஏற்பட்டது, எதையோ மொழியால் விளக்குவதற்க்குத்தான்!

மௌனத்தினை விளக்கிச்சொல்ல முடியாத போது, மொழி இல்லாத போது, இதயத்தை அதன் மையமாம் இறையிலே துடிக்கவிடல் சரியாகாது!

நமது குரு சொல்வார்..

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை!

இந்த இயக்கமின்றி என்ற சொல்லானது, நமது உடல், மனம், இதயம் என்று எதுவும் இறையிலே இயக்கமின்றி இருப்பின், அதுவே ஈசன் நிலையாகும் என்கிறார்.

அந்த அறிவிலே தோய்ந்திருப்பின், அசையாது இருப்பின், " நான்" என்ற முனைப்பு எழ வாய்ப்பில்லாது போகிறது. குருவோடு நீடித்து நிலைத்து இயங்க முடிகிறது!

அந்த நிலையிலே குருவின் இயக்க நிலை!குருவை எப்போதும், எந்தக்காலத்திலும் அங்கே இருப்பாய் உணரலாம்... குருவைதேடுவோர் அங்கே இருக்கிறார் என்பதை உணரலாம்.



வாழ்க வளமுடன்.

ஐந்து புலன்கள் அடங்க வழி!!!

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


மனது கொண்டு நாம் செய்வது கூடாது என்று சொல்லும் போது, எப்படி என்று கேட்கிறார் ஒரு நண்பர்! மனது இல்லாமல் நாம் தியானத்திலே ஒவ்வோர் கட்டத்திலே மாற்றுவது எங்ஙனம் என்று ஒருவர் கேட்கிறார்!

நமக்கு குருவின் மூலம் கற்றுத்தரப்பட்ட தியானத்திலே, ஒருவர் நமக்கு அன்னியமாக வெளியில் இருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர் தனது எண்ணத்தினை ஒவ்வோர் கட்டமாக பிரித்து பிரித்து இறை நிலை வரை கொண்டு செல்கிறார்.

ஆனால் நாம் இந்த தியானம் ஆரம்பத்திலே கொடுக்கப்பட்ட ஒரு புத்தகம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். சொல்லித்தரப்பட்ட தியானத்தினை நாம் தனியாகச் செய்யும் போது, நாம் வழக்கம் போல சொல்லிக்கொண்டே செய்கிறோம்! ஆக்கினை, துரியம்,துவாதசாங்கம்,... இப்படி விரிந்து விரிந்து நாம் இறை நிலை தவம் செய்கிறோம்...

பெரும்பாலான தியான அனுபவத்தை சொல்லும் போது, எங்கோ எழுதியதை, நீங்கள் படித்ததை திருப்பி திருப்பிச் சொல்வது போல இருந்தால், அது தான் தங்களுக்கு வரும் விசயம் என்று எடுத்துக்கொள்வது நல்லது. ஏற்காத ஒன்றை, இறைவன் அடிக்கடி கேட்க வைக்கிறான்.. என்று எடுத்துக்கொள்ளலாம்!

இந்த தியானம் என்பது நம்மை கடற்கரையிலே தான் வைத்திருக்கிறது... இன்னமும் அலையைத் தாண்டவில்லை, சீற்றத்தை உணரவில்லை... சீற்றம் வரும் போது நாம் எப்படி அதை எப்படி கையாள்கிறோம் என்று நமக்குத் தெரியவில்லை! கடினமான சூழ்னிலை வரும் போது அதை தீர்க்க நாம் செய்ய வேண்டும் என்ற அனுபவமில்லை! இப்படி கடற்கரையிலே நாம் எதுவும் தெரியாது நிற்கிறோம்.. அது தான் இந்த தியானம் செய்யும் நாம்!

முறையான தேடல் என்பது, குருவை நோக்கி தானாக எடுத்துச்செல்லும் அறிவு!

குரு சொல்லித்தந்த இறை தியானத்திலே, அவரை நினைப்பதற்க்கு எங்கும் சொல்லித்தரப்படவில்லை! அதனால் நாம் அவரை நினைப்பதில்லை! ஆனால் இறை தியானம் செய்யும் போது, மனதிலே எண்ணம் வந்து கொண்டு இருக்கிறது, மனது தானே, சந்திரன் சூரியன் சக்தி களம் என்றெல்லாம் சொல்கிறது?

சக்திகளம் என்பது அசைவை குறிப்பது! சிவகளத்திலே மனது நின்று கொண்டு சூனியம், ஒன்று மில்லை. ஒன்றுமே இல்லை! என்றெல்லாம் எப்படி சொல்ல முடியும்? மனதால் அறிய முடியாத இறைவெளியிலே மனதை கொண்டு நாம் எப்படி தியானம் செய்ய முடியும்? இது தான் நாம் நமது தியானத்தினை மனது கொண்டு செய்வது கூடாது என்று நான் எழுதியது!

ஆரம்பத்திலே நமக்கு சொல்லப்பட்டது தான்! ஆனால் இறை வெளி என்றவுடன், பஞ்ச பூதங்களின் தன்மாற்றமான ஐந்து புலன்களும் அடங்கி இருக்க வேண்டுமே! அது நமது இறை நிலை த்யானத்திலே நடந்ததா?

அப்படி நடக்கவேண்டும் எனில் என்ன செய்யவேண்டும் என்று தான் நாம் யோசிக்கவேண்டும்!

போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்திலே சொல்கிறார்!

ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, முடிவற்றதும் விளக்கமற்றதும், எல்லையற்றதுமாக இருக்கிறது என்று வேதமும், கீதையும், எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கிறது!

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை

என்றார் நமது குருனாதர்!


எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்!

என்ற இந்தக்கவியை சொல்கிற போது,

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்!

என்கிறார்..

மனம் என்ற ஒன்றில் குரு இல்லாத போது, இயந்திரத்தினை போன்ற தியானம் தான் இருக்கும்!

குரு நுழைந்தால் அன்றி, ஐந்து புலன்கள் அடங்க வழி இல்லை!

குருவின் அளவு தான் இறையை உணர முடிவதன் அளவு!

மனதிலே குருவை கொண்டு வந்து கொண்டே இருத்தல் அவசியம்! ஐந்து புலன்கள் அடங்கும் போது தான் தியானம் தொடங்கும்!

அதுவரை சுவிட்ச் போட்டால் பாடும் ரேடியோவைப்போலத்தான் நமது தியானம் இருக்கும்!

நீங்கள் கேட்ட பாடலாக நமது தியானம் மறு ஒளிபரப்பாகும்!

ஐந்து புலன்கள் அடங்கிய மறு கணம், மனம் தனது மூலமான உயிரிலே ஒடுங்கும்! உயிரானது அதன் மூலமான அறிவை நோக்கி விரியும்!

ஸ்தூல உடலினை விட்டு சூக்கும உடலை பற்றிக்கொள்ளும் நமது உயிர்... அந்த பிரிவு தான் நமது மரணமானது சுகமான ஒன்று நமக்கு சொல்லும்.

இந்த உடலை விட்டு உயிர் பிரிவது துக்கமாக கொள்கிறோம் அல்லவா... ஆனால் உடலானது அசைவற்று இருக்க, எந்த தேவையுமின்றி, இச்சையின்றி குரு சொல்லாஇ இருக்க, நாம் கைகள் கோர்த்தபடி, நமது சாட்சியாய் இறையை வைத்து, அந்த அறிவாகிய இறையே சாட்சியாய் நின்று, இந்த ஸ்தூலத்திலே இருந்து சூக்கும உடலை மாறுவதினை எடுத்துக்காட்டும்!

அது தான் மனித உடல் மரணமடையும் போது நிகழ்வது! ஆனால் தியானத்திலே மரணத்தை தாண்டி சென்றாலும், விழிப்பான ஒன்றாய் நம் அறிவுடன் இணைந்து இருக்கிறோம் நாம்!

ஐந்து புலன்களை கடக்கும் வரை, குரு என்ற அணுகுதல் முக்கியம். அடங்கிய பிறகு, குருவின் தன்மையாய் நம்மை மாற்றும். அதாவது, சூக்கும உடலிலே இருந்து முறையாக எழுச்சியுடன் அந்த ஈர்ப்பு விசையால், இரும்பை நோக்கி இழுக்கும் காந்தமாய் ஓடும் அந்த உயிர்!

அப்போது நம் மனது இல்லாத போனாலும் கூட, அறிவாகிய இறையே நம் உடலில் இருந்து தன் பாதையினை எடுத்துக்கொண்டு செல்லும்... தன் மூலத்தை நோக்கி செல்வதால் அது நமது அனுபவத்திற்க்கு, நம் உயிரை இழுத்துக்கொண்டு போவது போலத் தோன்றும்! சரணடைந்தால், முக்தி! மனம் இல்லாத தியானம் நமக்குத் தேவை, மனதால் செய்யப்படும் தியானம் சரியல்ல என்று எழுதும் போது, உங்கள் மனம் புண்பட்டு இருக்கும்! ஆனால் உயர்த்துவதற்க்காகவே அனைத்தும் என்று உணரா பிறப்புகளை வாழ்த்துவதை தவிர, குருவோடு இணைந்து அந்த அலைகளை சந்திப்பதை தவிர எமக்கு வேறு வழி இல்லை!

என்னென்னவோ தேவையில்லாத செயல்கள் செய்யும் நாம் அதற்க்கெல்லாம் பயப்படவா செய்கிறோம்? இறை தியானத்திலே சிவகளத்திலே கூட குருவை நினைத்துக்கொண்டே செய்யலாம்! நன்மையே விளங்கும்!


குருவை நோக்கியே இருக்கிற எந்த பிள்ளையும், குருவானவர் ஒரு கணமும் விட்டுப் பிரிவதில்லை! எந்த அலையும் கரையினைத் தாண்டி வந்ததில்லை! அலையைத்தாங்கும் ஆழ்கடலைப்போல குரு நம்முடன் இருந்து, யாம் இருக்க பயம் ஏன்? என்று குரு கேட்கிறார்!

அப்பா.. தந்தையே!

வாழ்க வளமுடன் அம்மா!

பொறி புலன்கள்- அமைதி

வாழ்க வளமுடன்

குருவே சரணம்.


தான் இருப்பது நிஜம் என்றால், தன்னுடைய ஆவலினால் ஏற்பட்ட சிந்தனையிலே மனதை செலுத்தி, செயலை சாதித்து விட்டு அது தான், தனக்குத் தேவைப்படுவது, அதுவே தன் அமைதிக்குத் தேவைப்படுவது என்று துணிந்து செயல்படுகிறான் மனிதன்,..


எப்படி நோக்கினும், தன்னை உணர்தல் என்ற நோக்கை நோக்கியே தான் எந்த செயலும் செய்யப்படுகிறது. கால நீளம், மற்றும் சூழ்னிலை காரணங்களால், தனக்குத் தேவையான அமைதி என்பது இந்த செயல்களால் வரவில்லை என்ற காரணத்தினை மனிதன் புரிந்து கொள்ளாது போவதால், ஆனந்தமான அனுபவம் என்பது எட்டாத ஒன்றாகவே தள்ளி வைத்து விடுகிறான்.

ஒரு செயலால் ஒரு கணத்திலே இன்பம் உணரவேண்டும் என்றால், தன்னுடைய பொறிபுலன்களை அடக்கும் திறமை ஒருவருக்கு அவசியமாகிறது...

எங்கோ மனதை வைத்து விட்டு, அந்த இறுக்கத்திலே செய்யப்படுகின்ற வேதம் ஓதுதலால் எதுவும் கிட்டி விடாது...

ஏனெனில், இறுக்கம் என்பது இன்பத்தை ஒரு போதும் தராது.

அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி
அறிவையை அறிய ஆழ்ந்து ஆழ்ந்து
பொறி புலன் அடக்கிப்பொறுமை அடைந்து

என்று நமது குரு நாதர் எழுதினார்.


எண்ணம் தோன்றிய போது, அதுவே தான் நான் என்று ஒரு நிலையிலே மனிதன் அகங்காரம் கொள்கிறான்.

மனதினைக்கொண்டு செய்யப்படுகிற தியானம் என்பது, ஏற்கனவே மனப்பாடம் செய்யப்பட்ட ஒரு விசயத்தினை திருப்பிச் சொல்லிக்கொள்வதைப்போல... பழக்கப்பட்ட ஒரு பாடலை நாம் பாடுவது போல...

மனதினை இறையிலே நிலைத்து வைத்துக்கொண்டு, செய்யப்படும் தியானம் என்பது தன்னுடைய இருப்பு இறையே என்ற தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துதல் ஆகும். அதுவே தான் சவிகல்ப சமாதி என்ற நிலையை இறுதியாய் நமக்குத்தரும்... சமாதி என்றவுடன் அலறி அடித்துக்கொண்டு உடல் பற்று என்ற காரணத்தினால் முயற்சிக்காமல் இந்த மனப்பாட தியானத்தினை செய்துகொண்டு இருப்போர் பலர் உண்டு...

நானே கடவுள்... நானே பிரம்மம்... என்று தியானத்திலே சொல்வது எல்லாம் எப்படி எனில், நான் மனிதன், மாடு அல்ல என்று நாமே சொல்லிக்கொள்வது போல. தான் மனிதன் என்பதினை திருப்பி திருப்பி சொல்வதனால் தானா நாம் அறிய முடியும்? வெறும் கண்ணை திறந்து பார்த்தால் நாம் மனிதன் என்பதை உணரலாம் அல்லவா?

ஸமாதி என்றால் ஆதிக்கு சமமானது நமது இருப்பு என்று உணர்வால் புரிந்து கொள்வது... இறுக்கமான வேதம் ஓதுதலை விட, தனக்குள்ளே ஆதிக்கு சமமான அறிவே தான் மனமாக தன்மாற்றம் கண்டு விளங்குவதை உணர்வது தான் உயர்வு.

20 நிமிட இறை தியானத்திலே, குருவோ, அவரின் இருப்போ எங்காவது தென்பட்டதா என்று ஆய்வது நமக்கு நல்லதைத் தரும்.

ஸ்தூல உடலின் மீது கொண்டு இருக்கும் பற்றுதலால் தான் மனது என்ற தன்மையிலே இருந்து விடுபடாத தன்மையினை மனிதன் கொண்டிருக்கிறான்.

நிலையில்லாத தன்மையினை கொண்டு இருக்கும் மனது. ஒரு கணம் இன்பம், மறு கணம் துன்பம் . மாறும் தன்மையிலே உள்ள மனது நல்லதல்ல என்று ஏற்றுக்கொள்ளும் நாம், மனதினால் மட்டும் செய்யும் தியானத்தினை செய்வது ஏன்?

குருவின் இருப்பைச் சொல்லாத தியானத்தினால் என்ன பயன்?


இறை வெளியோடு எண்ணத்தினை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.

நிறை நிலையான இறையே நமது நிலை என்று கொள்வோம்.. தனது இருப்பை உணர்ந்து கொண்டால், எல்லாம் உணர்ந்துகொள்ளலாம். குருவின் இருப்பு புலப்பட்டுவிட்டால், தியானம் கால நீளத்திற்க்குத் தாண்டி தானே நிகழும்.

ஒரு கணத்திலே பொறி புலன்கள் அமைதி பெறும்.

வாழ்க வளமுடன்.

குருவும், கடமையும்!!!

வாழ்க வளமுடன்.

குரு வாழ்க குருவே துணை.


எண்ணற்ற நாட்கள் குருவின் தொடர்ந்த ஆராய்ச்சியால் நமக்குக் கிடைத்த ஒரு நெறி இந்த குண்டலினி யோக தியானம்.

தானும் உயர்ந்து இந்த நானிலம் பயனுறுவதற்கு ஏற்பட்ட கருணயினால் தான் நமக்கு இந்த குண்டலினி தியானத்தை குரு தந்து இருக்கிறார்.

எந்த ஒரு அனுபவத்தையும் அடுத்த ஒரு நபரும் பெற்று அவரும் தன்னைப்போல உயரவேண்டும் என்று கருணையினாலே தான் நமக்கு இந்த மாதிரியான ஒரு குருவும், தியானமும் நமக்குக்கிடைத்து இருக்கிறது.

அந்த தியானத்தைக்கொண்டு நாம் என்ன உணர்ந்தோம்? நாம் என்ன அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்போகிறோம்?

இதற்கு முன் ஒரு நிகழ்வு...

ராமானுஜர் திருவரங்கம் கோவிலில் ஆலயப்பொறுப்பை ஏற்று அங்கு பொறுப்பில் இருந்து முறை தவறி கோயில் சொத்துக்களை சீரழிக்க நினைத்தவர்களை பொறுப்பில் இருந்து நீக்குகிறார்.

மேலும் கோயிலின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்தி அனைத்து நிர்வாகத்தை சரியாக்குகிறார்.

அப்போது அவரால் பொறுப்பை இழந்தோர்கள் எல்லாம், அவர் மேல் ஆத்திரம் கொண்டு அவரை அழிக்க பல வழிகளை கையாள்கின்றனர்.

அனைத்திலும் தப்பிக்கிறார்...

ராமானுஜர் அப்போது ஒரு முறை தன் சீடர்களுடன் திருவரங்க வீதிகளின் வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருட்களை சேகரித்து சீடர்களுக்கும், தனக்கும் உணவை தயரிப்பது குருகுல வழக்கம்.

அப்படி அவர், பழைய கோவில் அதிகாரியின் வாசலில் நிற்கிறார். அந்த அதிகாரியின் துணைவியார், கைப்படி அரிசியை கொண்டு வந்து ராமானுஜருக்கு தானமாகத் தருகிறார். அப்போது அந்தப்பெண்மணியின் கண்ணிலே நீர் தவழ்வதையும், அதை அப்பெண்மணி மறைத்துக்கொண்டதையும் பார்த்த ராமானுஜர், அந்த அரிசியின் சிலவற்றை எடுத்து அங்கு நின்று இருந்த ஒரு காக்கையிடம் இடுகிறார்...

அதை உண்ட காகம் உடனே இறக்கிறது. அப்போது தான் அனைவருக்கும் புரிகிறது.. அந்த அரிசியிலே விஷம் வைக்கப்பட்டதும், அவ்விஷம் ராமானுஜரையும் அனைத்து சீடர்களையும் கொல்வதற்காகவே செய்யப்பட்டது என்பதும் தெரிந்து விடுகிறது...

இந்த விஷம் வைக்கப்பட்ட நிமிடமே ராமானுஜரின் குருவானவர் தன் சீடனை காப்பாற்றுவதற்காக காவிரிக்கரையினை தாண்டி வருகிறார். இதைக்கேள்விப்பட்ட ராமானுஜர் தன் குருவை நோக்கி தானும் செல்கிறார்...

ராமானுஜரும் அவரின் குருவும் மதிய வெயிலில், சுடும் மணற்பரப்பிலே சந்திக்கிறார்கள்.... ராமானுஜருடன் அவர் சிஷ்யர்கள்... எதிரே குரு..

ராமானுஜர் குருவை கண்டதும், அவரை காப்பாற்ற அவ்வளவு தூரம் குரு ஆற்றைத் தாண்டி வந்ததை நினைந்து உணர்ச்சிப்பூர்வமாக அழுது, குருவின் கால்களிலே விழுகிறார். குரு எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்... ராமானுஜருக்கு உடல் முழுதும் சுட்டாலும், குருவின் ஆசி வரும் வரை நெடுஞ்சான்கிடையாக குருவின் கால்களிலே கும்பிட்ட படி இருக்கிறார்... குருவோ மௌனம் சாதிக்கிறார்... எழுந்திருக்கச்சொல்லவே இல்லை...

கொதிக்கும் மணலில் நிற்க்கும் ராமானுஜரின் சீடர்கள், ராமானுஜரை சுடும் மணலில் தவிப்பார் என்றெண்ணி, குருவின் மேல் கோபம் வருகிறது....

ஒரு சீடன் பொறுக்கமுடியாது, குருவிடம், எங்கள் குருவை எழுந்திருக்க சொல்லவில்லையே! அவருக்கு சுடுமே! என்று குருவிடம் சொல்கிறார்...

அப்போது அந்த குரு சொல்கிறார்....

உனக்கு உள்ள கோபத்தை என்னால் உணர முடிகின்றது... ஆனால் உன் குருவை காப்பாற்றும் முழு பொறுப்பு உள்ளது என்பதை அறியாது,அவரின் கையில் நஞ்சு வைத்த உணவை கிடைக்கும் படி விட்டு விட்டீர்களே! உங்கள் குரு ராமானுஜரை காப்பாற்றும் முறையா இது? என்று குரு அந்த சீடனிடம் கேட்கிறார்!

அப்போது தான் ராமானுஜருக்கு குரு தன்னை, சுடும் மணலில் இருந்து எழுந்திருக்கச்சொல்லாததன் காரணம் புரிகிறது... குருவின் மேல் தான் கொண்ட அன்பின் அளவிற்க்கு, அந்த ஆழத்தின் அளவிற்க்கு குருவும் தன் சீடனை நேசிக்கிறார் என்று!

ராமானுஜர் தன் குருவின் கால்களில் மறுபடியும் விழுகிறார்... மற்ற அனைத்து சீடர்களும் குருவின் கால்களில் விழுகின்றனர்...

குரு ஆசிர்வதித்து அனைவரையும் எழச்சொல்கிறார்...

(கதை முடிந்தது)

நமது குருவின் வார்த்தைகளை காப்பாற்ற நாமும் அந்த சீடர்களை போன்று துடிக்கிறோம்!!! ஆனால் குருவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

எப்படி நம் குருவானவர் இந்த அளவு தியானத்திலே உயர்ந்தார்? எந்த அளவிற்க்கு அவர் தன் குருவிடம் சரணடைந்திருந்தால், அவர் இந்த அளவு உயர்ந்திருப்பார்?

தியானத்தை 20 நிமிடம் செய்யுங்கள், தற்சோதனை செய்யுங்கள், அகத்தாய்வு செய்யுங்கள் என்றெல்லாம் சொன்னாரே நம் குரு, எப்போதாவது தன்னை மனதாலும் நினைத்துக்கொண்டிருக்காதே என்று சொன்னாரா?

தியானத்திலே சரணாகதி கொள்ள வேண்டாம் என்று சொன்னாரா?

இப்போது நமக்கு அவர் தந்த அனைத்தும் பயனாகி விட்டது... அவர் சொன்ன இறை நிலையின் அறிவியல் தத்துவத்தை, அரைக்கால் சட்டை போட்ட சிறுவர் முதற்க்கொண்டு பேசுகிறார்கள். ஆனால் இவ்வளவும் தந்த குருவானவரைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாததாக இருக்கிற அந்த அறிவியல் பேச்சுக்களால் என்ன பயன் கிட்டி விடும்?

குருவின் வார்த்தை முக்கியம்... அதை விட குருவிடம் உள்ள பற்று முக்கியம்...

அறிவியல் பற்றி பேசுங்கள். ஆனால் அவை எல்லாம், தன் குருவிடம் தான் கொண்ட சரணாகதியால் கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள்...

குருவிடம் கொள்ளும் சரணாகதியினால், நமக்குள்ளே இந்த அறிவியல் உள்ளுணர்வாய் கிடைக்காதா? மறுப்போர் தரணியில் உண்டோ?

குருவிடம் சரணாகதி கொள்ளும் நேரத்திலே உண்டான அனைத்து உதவிகளையும் அடுத்த தலைமுறைக்குக் காட்டும் பொறுப்பு நமக்கு உண்டு... வெறும் பேப்பருக்குள்ளே அறிவியலாக சொல்லாமல், தியானத்திலே நாம் கண்ட அனுபவத்தை சொல்லி, அனைவரும் குருவிடம் சரணாகதியின் மூலம் அந்த பந்தத்தை உறுதிப்படுத்தி, இறை நெறியை எடுத்துச்செல்லவேண்டும்...

அந்த கடமை நமக்கு உண்டு. குருவின் உயர்வு நம்மிடையே ஆரம்பித்து, எண்ணற்ற தலைமுறையையும் ஈடுபடுத்தி அறிவில் உயர்த்த வேண்டும்...

வாழ்க வளமுடன்...

குருவே சரணம்...