Thursday, December 9, 2010

காரண சரீரம்...

குருவே சரணம்...


எமது எழுத்திற்க்குள்ளும் உள்ள உந்துதல் என்பது எப்போதுமே குருனாதர் தான் என்பதற்க்கு பல சான்றுகள் உள்ளன.
குருவின் இருப்பு எப்படி எல்லாம் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதனை நன்றாக உணர்ந்த பிறகு தான் எமக்கு எழுதும் வாய்ப்பு வந்தது.
2005ம் ஆண்டு, குருவும் அவரைப்பற்றிய பல சிந்தனைகள் என்று எப்போதும் அவர் மீதே தவத்தினை மேற்கொண்டது போல இருந்த நேரம்..
தவமும், குருவின் மீதான சிந்தனையும் என்னை நோக்கி எதுவும், வேறு எதன் தாக்கமும் என்னுள் வராமலும் காத்துக்கொண்டு இருந்தது. தியானத்தின் தன்மையும் அதன் அனுபவங்களும் எமக்குத் தேவையான ஒரு நட்பை மட்டுமே அனுமதித்துக்கொண்டு இருந்தது.

அப்படி எமக்கு ஏற்பட்ட நட்பு தான் அருள் நிதி சுந்தர மூர்த்தி அவர்கள். எம்மை விட 10 வயது மூத்தவர் மட்டுமல்லாது, எந்த இறை அனுபவத்திலும் முன்னோடியாக இருந்து வருபவர். அவரும் நானும் பேசுவது குருவை பற்றி மட்டும் தான்.

குருவைப் பற்றி என்ன பேசினாலும் கூட அவர் அழுது விடுவார்... அதே போல அவர் என்ன பேசினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது அழுது விடுவேன். குருவின் மீது கொண்டிருக்கும் அன்பு என்பது, அவரின் உடலை மையப்படுத்தி இல்லை.. ஆனால் இறை தவத்திலே அவரின் செயல்பாடுகளினை கண்ட போதெல்லாம் உருவான அன்பு.
மொரீசியஸில் தியானத்திலே குருவோடு இணைந்து இருந்த போது, பொதுவாக குருவை பற்றி கடிதத்திலும், தொலை பேசியிலும் கலந்து கொள்வோம்.. ஆனால் ஆழ்ந்த தியானத்திலே லயித்த போது எமக்குள்ளே இருந்து அவரிடம் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றாததாலும், குரு நமக்குள் காட்டியுள்ள இந்த மாற்றத்தினை நாமாக எதற்க்கு சொல்லவேண்டும் என்று அப்படியே இருந்து விட்டேன்...
ஸ்தூல உடல், சூக்கும உடல் பற்றி ஏற்பட்ட தியான அனுபவம் என்பது எந்தவிதத்திலும் எனக்கு அறிமுகம் இல்லாததாக இருந்தது... தியான அனுபவம் உண்மையாக இருந்தது ஆனால் அதன் அர்த்தம் தெரியாது. அது போல இருந்தேன்.
குருவிடம், அப்பா... நீங்கள் எனக்குள் ஏற்பட்டிருக்கிற இந்த அனுபவத்தின் விளக்கத்தையும் நீங்களே எனக்கு புரிய வைத்து விடுங்கள் என்று இருந்து விட்டேன்... பொதுவாக நண்பர் சுந்தர மூர்த்தி அவராக கடிதம் எழுத மாட்டார். ஆனால் எனது தியான அனுபவத்தின் 10 நாட்களில் எனக்கு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது...
அந்தக்கடிதத்தினை வாய்ப்பு கிடைக்கும் போது உங்களுக்கு தருகின்றேன்...
அக்கடிதத்திலே, எனது தியானத்தின் ஒவ்வோர் நிலைகளிலே ஆழ்ந்து அனுபவித்து, நின்று கண்ட விளக்கங்கள், அனுபவங்கள் என அனைத்து அனுபவத்தினையும் பிரித்து பிரித்து விளக்கமாக அவரே எழுதி இருந்தார்... இதை எழுதிய அவர், " ஏனோ இதை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது, குருவே அனைத்தையும் முழுமைப்படுத்துவார்" என்று எழுதி இருந்தார்...
அப்போது தான் குருவின் முன் மண்டியிட்டு தொழுதேன்.. ஆனந்தத்தினால் அழுதேன்... அப்பா... நீங்கள் எங்கேயோ இருந்து கொண்டு இந்த பிள்ளைக்கு ஒரு மூத்த பிள்ளையின் மூலம் சொல்ல வைத்து விட்டீர்களே" என்று.
எங்கோ கண்டம் கடந்து இருந்தாலும், உள்ளத்தால் மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த இந்தப் பிள்ளைக்கு எப்பேர்ப்பட்ட அனுபவத்தினை தந்து இருக்கிறீர்களே!! எதுவும் எதிர்பார்க்காது உங்களை மட்டுமே நினைத்து இருந்த பிள்ளைக்கு உங்கள் திருப்பியக்க அன்பின் மூலம் என்னை அரவணைத்துக்கொண்டு விட்டீர்களே... எதையும் எதிர்பார்க்காது இருந்த போது, எமக்குள் உங்களின் இருப்பின் தன்மையை அதன் உச்சம் வரை கொண்டு சென்று, இது தானப்பா நமது இடம் என்று உள்ளுணர்த்தியதை எத்தனை ஆண்டுகளானாலும் குருவை புகழ்ந்து கொண்டே தான் இருக்கத்தோன்றுகிறது.
ஒரு கவிதையிலே குரு சொன்னார்...
" யான் உணர்ந்ததை அப்படியே தருவேன்" என்று... அதை படித்தபோது ஆனந்தினால் அழுகிறேன். ஏனெனில், அவர் மட்டுமே நினைத்த எனக்கு இப்படி ஒரு உள் அனுபவம் எனில், இன்னும் ஆழ்ந்த பக்தி கொள்ளும் சீடனுக்கு அவர் என்னவெல்லாம் அருளுவார்?! என்று.
இந்த குருவின் அருளும் ரமணரின் வாக்கும் என்ற கட்டுரையை நண்பர் சுந்தரமூர்த்தி படித்தார்... அதிலே இருந்து விடுபட்ட ஒரு ஆழ்ந்த விசயத்தினை எனக்குச்சொன்னார்... அதை அவர் சார்பாக உங்களுக்குத் தருகிறேன்.
ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் என்று இருப்பது போல காரண சரீரம் என்றும் இருக்கிறது. இந்தக்கட்டுரையில்,
நமது குருவிடம் கொண்ட ஆழ்ந்த தொடர்பிலே தொடர்ந்து ஆழ்ந்த இறை நிலை தவம் செய்த போது, சிவகளத்திலே நிலைத்து நீடித்து நின்ற போது, ஸ்தூல உடலைக் கடந்தும் விலகியும் இருக்கிற தன்மை கிடைத்தது... அப்போதும் தியானம் தடைபடவில்லை... எப்போது எமது உடலை விலகி நின்று பேரானந்தத்தினை உணர முடிந்ததோ, அப்போதே உடலை விட்டு உயிர் பிரிந்து, தனது சூக்கும உடலிலே புகுந்து கொண்டது... சூக்கும உடலிலே புகுந்த போது தான் மரணம் என்றால் என்ன? என்பதை உணர முடிந்தது...
ஸ்தூல உடலிலே இருந்து சூக்கும உடலிற்கு உயிர் தாவிய போதும் கூட சிவகளத்தினை விட்டு விலகாது விழிப்பிலே தியானம் தொடர்ந்து இருந்தது
சூக்கும உடலிலே உயிர் இணைந்த உடன், அளவிலா வேகத்திலே இறை அருளானது எம்மை இழுத்துக்கொளவதினை உணரமுடிந்தது... அந்த ஈர்ப்பிலே தொடர்ந்து தியானத்திலே லயித்த போது, சூக்கும உடலில் இருந்து உயிரானது மேலே எழுவதும், அந்த நிலையே தான் குண்டலினி என்றும்... எது முதலில் மனமாக இருந்ததோ, அதுவே தான் உயிராக தன்மாற்றம் அடைந்தது என்று உணர்ந்தேன்... தியானமும் தொடர்ந்தது...சூக்கும உயிரானது அளப்பறிய ஆனந்தத்துடன் அந்த ஈர்ப்பு நிலையாம் இறை என்ற கருணை நிலையால் ஈர்த்துக்கொள்ளப்பட்டது... இறை என்ற கருணை நிலையானதன் ஆற்றலின் முன் இந்த உடல் எனது என்கிற முனைப்பு (" நான்") சென்று கரைந்து ஒன்றாக ஆரம்பித்த போது, எம்மால் தாங்க முடியாத ஆனந்த நிலையும், உடல் என்ற ஒன்றை விலகி நிரந்தரமாக விலகி விடுவோம் என்கிற உணர்வு எண்ணமாக மேலிட்ட போது, அந்த அசையாத சிவகளத்திலே அசைவு ஏற்பட்டது...
இந்தக்கட்டுரையிலே சொன்னது போல,
"இந்த ஸ்தூல உடலில் இருந்து உயிரை பிரித்து எடுத்த உடன், சூக்கும சரீரமானதை பற்றிக்கொண்ட உடனே, இறையானது சூக்கும சரீரத்தை இழுத்துக்கொண்டு போகும்... எப்போது சூக்கும சரீரத்திலே இருந்து கொண்டு ஸ்தூல உடலிலே கவனித்து பேரானந்தத்தினை உணர்ந்தோமோ அக்கணத்திலே இருந்து இறைவெளி கலக்கும் வரை உள்ள அனுபவமாக விரிந்து இருப்பது எதுவோ அதுவே தான் காரண சரீரம்" என்று சொன்னார்...

நெடு நாள் நட்பாக இருந்தாலும் என்னுள்ளே ஏற்பட்ட அனுபவத்தை இப்போது தான் இந்த கட்டுரையின் மூலமாகவே தான் அவருக்கும் பகிர்ந்திருக்கிறேன்...இந்த பகிர்தலின் மூலமாக, காரண சரீரத்தினை உணர்ந்து இருக்கிறாய் என்று குருவே அவர் மூலமாக சொல்லி விட்டார் பாருங்கள்... எப்பேர்பட்ட அருள் தந்த தந்தை அவர்... அவர் நம் கூடவே இருப்பு நிலை போல எப்போதும் இருக்கிறார் என்பதற்க்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்?

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment