குருவே சரணம்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே..
இந்த வரியை சொல்லாதவர்கள் நமது தியான மையத்திலே இல்லை என்ற அளவிற்க்கு நாம் இந்த வரிகளை அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறோம்...
ஒரு சிறு நிகழ்வு... வருடம் 1998ம் ஆண்டு...
அப்போது தான் தியான தீட்சை எடுத்து துரியம் வரை பயின்று இருந்தேன்.
தொழில் நுட்பம் பயின்ற எனக்கு சென்னையிலே வேலை கிடைத்தது... முதலில் 10 நாட்கள் பயிற்சி தந்தார்கள்.. ஓரளவு தான் புரிந்து கொள்ள முடிந்தது...
இருப்பினும், நேரடி களப்பயிற்ச்சிக்கு செல்ல ஆரம்பித்தால் அனைத்து விசயங்களும் புரிந்து விடும் என்று பயிற்ச்சி தந்தவர் சொன்னார்..
முதன் முதலாக களத்திலே ஒரு கம்பெனியிலே உள்ள எங்களது நிறுவன வேலைக்காக சென்றேன்... சரியாக இந்த வேலைக்குச் சென்று 20 நாட்கள்... அங்கே எங்கள் கம்பெனியின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்பானது அங்கே பழுது பட்டு விட்டது... அருகிலே நான் இருந்ததால் என்னை அந்த பழுது நீக்க அனுப்பிவிட்டார்கள்...
எனக்கு அந்த பழுது நீக்குதலைப்பற்றி எந்த அனுபவமும் இல்லாதது எனக்கு ஒரு வித நடுக்கத்தைத் தந்தது... ஏனெனில், என்னால் ஒரு விசயத்தை சரி செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை எல்லாம் நான் காண்பித்துக்கொள்ள முடியாதது முதல் பிரச்சினை...
இரண்டாவதாக என்னால் அந்த பழுது நீக்கப்படாவிட்டால், நான் சார்ந்த அந்த துறைக்கு என்னால் அவப்பெயர் வந்து விடும்...
உண்மையிலே எனக்கு அந்த பழுது நீக்குதலில் எந்த வித முன் அனுபவமும் இல்லா விட்டாலும், எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவும் கூடாது என்பது என் நிலையாக இருந்தது...
களத்திலே வந்துவிட்டேன்... எல்லாரும் எனக்காக காத்திருக்கிறார்கள்... அந்த இயந்திரத்தின் அருகிலே சென்ற எனக்கு, உள்ளே எங்கோ கருகி இருக்கிற வாசமும், பெரிய பிரச்சினை எங்கோ இருப்பதும் புரிந்து விட்டது... ஆனால் அதை எளிதில் சரி செய்து நான் அந்த பழுதை சீக்கிரம் சரி செய்து விடவேண்டும்...
சுற்றி அவர்கள் காத்திருக்கிறார்கள்... நான் சூழப்பட்டிருந்தேன்... என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை... நடுக்கம் வந்து விட்டது. எனக்கென்று யார் இருக்கிறார்கள்? என்னை புரிந்து கொண்டு என் தவிப்பை காது கொடுத்து கேட்கும் ஒருவர் எனக்கு வேண்டும் என்று எனக்குள் தோன்றிய உடனே எனக்கு உடன் குருவின் மீது தான் ஞாபகம் வந்தது... அப்பா என்னை புரிந்துகொள்ளுங்கள்... என்னை இந்த இக்கட்டிலே இருந்து காப்பாற்றுங்கள் என்று உள்ளுக்குள்ளே உருகி நின்றேன்... ஒரு கணத்திலே கண்களில் நீர் சொட்டி விட்டது... துடைத்துக்கொண்டே, அழுததை காட்டிக்கொள்ளாது மறைத்துக்கொண்டே வந்த வேலையை செய்தேன்...
நான் 10 நாட்கள் கற்றுக்கொண்டதை மையமாக வைத்துக்கொண்டு எனது ஆராய்ச்சியை செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலே எங்கே பிரச்சினையோ அதனை கண்டுபிடித்து விட்டு, உடனே அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டு தேவையான சில பாகங்களை அனுப்பும் படி கேட்டேன்...
மேற்கொண்டு வேறு எதுவும் தேவை இருக்காதா என்று என் மேலாளர் கேட்டதற்க்கு, தேவை இல்லை என்று நம்பிக்கையுடன் சொன்னேன்...
பாகங்களோடு, ஒரு தேர்ந்த அனுபவம் வாய்ந்த ஒரு இஞ்சினியர் வந்தார். வந்த உடன் இயந்திரத்தின் பழுதை நீக்கி விட்டோம்.. என்னால் கேட்கப்பட்ட பாகங்களின் அளவுகளைத் தாண்டி வேறு எதுவும் தேவைப்படவில்லை என்பதை வந்தவரும் சொன்னார்... அலுவலகத்திலும்,என்னுடைய வயதை ஒத்தவர்களும் எப்படி சாதித்தாய் என்று கேள்வி மேல் கேள்வி கெட்டனர்...
என்னுள்ளே உள்ள குரு தான் இதை செய்தார் என்று எனக்குத் தெரியும்... ஆனால் எங்கும் என்னுள்ளே உள்ள குரு என்ற புதையலை வெளிக்காண்பிக்கவே இல்லை.... வெளியிலே உள்ள எனது நெருக்கமான நண்பர்களிடம் எனது அனுபவத்தை பகிர்ந்தேன்... குரு என்ற உதவி எப்படி வேலை செய்தது என்பதை அப்படியே சொன்னேன்...
குரு என்ற தொடர்பு என்பதே எனக்கு போதும், எவருக்கும் போதும் என்ற முடிவு எனக்குள் எட்டி விட்டது... அதன் பிறகு எங்கு எந்த பெரிய பிரச்சினை வந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறையை என்னுள்ளே இருந்து வெளிக்காட்டினார்... அதனால் என்னால் சாதிக்க முடிந்தது... குருவானவர் அணுகுகிற சீடனின் மன அலைக்காக தனது இருப்பை வெளிக்காட்டுகிறார் அதுவும் சீடனின் மூலம்.
கண் தெரியாத சீடன் பிரபஞ்சத்தினை பற்றி சொல்வது போல இது...
சமீபத்திலே எனது நண்பர் மதிவாணன் தனது கடுமையான நிதி நெருக்கடி இருந்த போது, ஒரு குறிப்பிட்ட செலவுகளை செய்ய முடியாது என்று கருதியபடியே குருவிடம் பேசிக்கொண்டிருந்தாராம்...
சிறிது நேரத்திலே வீட்டை விட்டு வெளியிலே வந்த போது, அவரின் நிதி நிலைமைக்கு ஏற்ற படி ஒருவர் வந்து அந்த வேலையை சுலபமாக செய்து கொடுத்தாராம்...
என்னிடம் இதை சொன்ன போது குருவின் பெருமைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது...
சீடனின் மன அலைக்கு திருப்பியக்கமாய் குருவானவர் எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பார்.... இது சத்தியம்...
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment