வாழ்க வளமுடன்.
உண்மை என்பதை எத்தனை விதத்திலும் பகிர்ந்து கொண்டே இருக்கலாம். எண்ணங்கள் எழும் கோடிகளான எண்ணத்திற்க்கும் கூட மௌனமானது பதிலை விரித்துக்கொடுக்கும். உலகில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கிற அத்தனை மகான்களும் வான் காந்தத்திலே எப்போதும் கலந்தே இருக்கிறார்கள்.
ஒரு குருவானவர் 1000வருடத்திற்கு முன் வாழ்ந்தவர் என்று எடுத்துக்கொள்வோம். அவருடைய சீடர்கள் இப்போது சரியாக இல்லை என்று பாவிக்கப்படுகிறது என்று இருக்கட்டும். அந்த பார்வையாளர் இருக்கிறார் அல்லவா அவருக்கு பார்ப்பதை தவிர எதுவும் செய்யமுடியாது ஏனெனில், அவர் அந்த குருவிற்கான சீடர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணுதலை, கவலைப்படுவதைத்தவிர எதுவும் செய்யமுடியவில்லை.
இந்த இடத்திலே உண்மையான ஒரு சீடர் 1000 வருடத்தைக்கடந்து பிறந்தார் எனில், அவர் அந்த குருவின் மேல் ஆழ்ந்த பக்தியும், சரணாகதியும் கொண்டிருக்கிறார் என்று இருந்தால், நிச்சயம் வான்காந்தமானது அந்த சீடரை முறையாக அந்த குருவிற்க்கு உரிய அனைத்து புகழையும் நிலை நாட்டுமளவுக்கு அந்த சீடரை பயன்படுத்திக்கொள்ளும்.
பற்றுக்களைக்கடந்த ஒருவர் மகான் ஆகிறார். அவர் தனக்கு அன்னியமாக, மௌன நிலையிலே வேறு எதையும் பார்க்காததால் சீடர் என்று யாரையும் பார்க்கமாட்டார். இருப்பினும், அவரை ஒரு சீடர் தியானித்து அணுகிறார் என்றால், அவரின் தன்மையை, நிகழ்காலத்திற்க்கு ஏற்றார் போல உணர்த்துகிறார்.
பற்றுக்களை விட்ட ஒரு மகான், மௌன நிலையிலே லயித்த பிறது தனது உடல் என்ற கட்டை விட்டு விடுவதால், தான் தனது என்ற முனைப்பு கிஞ்சித்தும் இருப்பதில்லை. உடலை கரையான்கள் தின்றாலும் கூட முனைப்பு ஏற்படுவதில்லை. இது மகானின் வைராக்கியத்தை/ வலிமையை/ஆற்றலை வெளிப்படுத்தும்..
எனக்குப்பிறகு எது நடக்கவேண்டும் என்று ஒரு மகானும் எண்ணத்தை ஓட்டுவதில்லை. ஏனெனில், காலம் கடந்த நிலையிலே, தான் தனது அற்ற நிலையிலே எந்த தேவையும் அவருக்கு இல்லை...
குருவின் வரிகளில்...
கருத்தொடராய் பின்பிறவி இல்லை இனி இல்லை
கர்ம வினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி எனை அரவணைத்துக்கொள்ளும்
அந்தப்பெரு நன் நாளை எதிர்பார்த்து உள்ளேன்...
இந்த வரியைச்சொன்ன குரு, இச்சையில்லை எதிலும் என்று சொல்கிறார் என்பதைப்பாருங்கள்... இறையிடம்... அம்மா... தாயே என்னை அரவணைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் பிள்ளைக்கு கர்மவினை என்று எதுவும் இல்லை., இச்சை என்று எதுவுமில்லை... என்று தாயின் அரவணைப்பினை இறையிடம் கேட்கிறார்.
இச்சை இல்லை என்று சொன்னால்... இச்சை இல்லை தான்.... எனக்கு இது வேண்டும் அது வேண்டும்... எனக்குப்பிறகு இது நடக்க வேண்டும் என்றெல்லாம் பற்று இல்லாததால் தான் அவர் நமக்கு குரு... நாம் அவருக்கு சீடர்கள்...
குருவானவர் கொண்ட சரணாகதியிலே, அசைவு என்ற நிலையே இல்லை. முனைப்பு என்ற வாய்ப்பே இல்லை என்பதால் அவர்கள் தங்களின் வாழ்விலே உடலுக்கு எது நடந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.. அங்கே மௌனத்திலே இருந்து அசைவே இல்லை. ஏற்பின்றி தீயண்டா என்று நமது குருவும் எதையும் ஏற்றுக்கொண்டார்.
இது தான் நடக்கவேண்டும் என்ற பற்று ஏற்படுவது எண்ணத்தினால். எண்ணம் என்பது மௌனத்திலே இருந்து அசைவதால்.. இறையிடம் இருந்து விலகும் நிலை இல்லாததால், தமக்கு ஏற்படும் அனைத்தும் ஏற்றுக்கொண்டார்கள்.
சரி... இப்போது மகான்களின் இருப்பிடத்தைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்ற கோணத்திலே பார்ப்போம்...
மகான்கள், தான் தனது என்ற உணர்வின்றி மௌனத்திலே அசையாது இருக்கிறார்கள்..
இப்போது சீடர்களாகிய நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்ப்போம்...
சீடர்கள் குருவை மதிக்கிறார்கள்... குரு கற்றுதந்ததிலே தங்களால் முடிந்தை கடைப்பிடிக்கிறார்கள்... இப்போது தங்களால் கடைபிடிக்கமுடியாத விடயங்கள் இருக்கின்றனவே அதை முழுவதுமாக அலட்சியம் கொள்கிறார்கள்... இருந்தும், சீடர்கள் தினமும் குருவை நினைக்கத்தவறுவதில்லை.
இறை என்ற மௌனத்திலே இருந்து அசைந்தால், எண்ணம் என்கிற அணு உருவாகிறது. எண்ணம் ஏற்பட்டால் மௌனம் கலைந்து விட்டது என்ற நிலை...
மௌனம் கலைந்ததை விழிப்புடன் பார்க்கும் சீடர் என்பவனால் தான் முனைப்பின்றி செயலாற்ற முடிகிறது. ஏனெனில், விழிப்பில் குருவின் மீதே / இறையின் மீதே முழுக்க முழுக்க அவரின் நோக்கமிருக்கிறது.
குருவின் நிலையை உணர்ந்தால், அவரின் தன்மையிலே இருந்து வெளிவர யாருக்குப்பிடிக்கும்? யார் தடுக்கிறார்கள் குருவை அடைய? முனைப்பு மட்டும் தான். வான் கந்தமேஉதவிக்கு வரும். இறங்கிப்போனால்... எந்த குருவாக இருக்கட்டும். குருவிற்க்காக இறங்கிப்போனால், வான் கந்தமே கூட வந்து நிற்க்கும்.
எப்போது மௌனத்திலே லயித்தோமோ அப்போதே, தான் தனது என்ற எந்த முனைப்பும் இல்லை என்பதால் உலகமே இல்லை என்றாகும். உலகத்திலே உள்ள எதுவும் மகான்கள் பதில் சொல்வதில்லை. ஆனால் வான்காந்தமானது, தாயானது தனது பிள்ளைக்கு செய்யும் எந்த ஒரு தீங்கையும் செயலுக்கு விளைவாய் திருப்பித்தராமல் விடாது.
பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி
பழி செய்தோர் உடல் காந்தம் உயிர் மூளை கேடு செய்யும்
அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான் காந்தமும்
அரும் நண்பர் அனைத்துப்பொருள் அவர் வாழ்வில் எதிர்ப்பாகும்.
என்று நமது குரு சொன்ன வரிகள்...
குருவிற்க்கு செய்யும் தீங்கு செய்வோர் என்றால் அவரின் வான்காந்த இருப்பு வரை பாதிக்கும் என்று இருப்பதால் அவர்களுக்கு முக்தி என்ற பாக்கியமே இப்பிறப்பிலே விட்டுப்போகிறது....
இப்படி வான்காந்தமே தான் குருவிற்காக வேலை செய்யும் என்ற அற நியதியால் தான், மகான்கள் எவரும் நேரடியாக இவ்விசயத்திலே எதுவும் செய்வதில்லை.
பார்ப்பவர் என்ற கோணத்திலே நமக்கு எல்லாமும் இருக்கும்... தான் எழுந்தால் எல்லாமும் இருக்கும். தான் அடங்கினால் சகலமும் அடங்கும் என்ற வாசகம் சரியாக வரும்...
நாம் இந்த மாதிரி விசயங்களில் தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம். எளிமாயாகக் தியானத்திலே, குருவிடம் சரணடைந்தால் இந்த பெருங்கடலான வாழ்விலே கரை ஏறலாம்.. இல்லாவிடில் துடுப்பு இல்லா ஓடம் போல தத்தளிப்பது தவிர்க்க முடியாததே...
குருவே சரணம்..
No comments:
Post a Comment