வாழ்க வளமுடன்.
எது நிலையானதோ அதுவே சத்தியம் என்றும் ஆன்மா என்றும் இறைனிலை என்றும் அழைக்கப்படுகிறது.
எது நிலையாக தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க முடியுமோ அதுவே தான் உண்மையான ஒன்றின் நிலையாகும்.
எது தோன்றி மறைகிறதோ அது சத்தியமல்ல, மாயையே...
உதாரணத்திற்க்கு ஐந்து புலன்களை எடுத்துக்கொள்வோம். கண்களால் காணும் உலகத்தை எடுத்துக்கொள்வோம்.
உலகம் என்பது நாம் புலன்களினால் தான் அறிகிறோம்... மனம் கடந்து தியானத்திலே நாம் நிற்க்கும் போது, நமக்கு உலகம் இல்லை. தோன்றி மறைகிற உலகம் மாயையே என்று நமது முன்னோர்கள் இதனால் தான் சொன்னார்கள். மிக சரியே.
முனைப்பு என்பது ஆறாவது அறிவாகிய மனம் என்பதைச் சார்ந்தே தான் இருக்கிறது. எப்போது முனைப்பு கரைந்து விடுகின்றதோ அப்போது நமக்கு உடல் இல்லாமல் போகிறது. நமது இருப்பு என்பது இறையே என்று ஆகிறது.
குரு என்ற அருளின் இருப்பை, நாம் எப்போதெல்லாம் மனம் கடந்து தியானிக்கின்றோமோ அப்போது மட்டுமே தான் உணர முடிகின்றது...
அப்படி பார்க்கும் போது, முனைப்பு தோன்றாத தூய நிலையில் இருக்கிற குருவை, எப்படி முனைப்புடன் நாம் காண முடியும்? குருடன் யானையைக் கூட தடவிப்பார்த்து அனுமானிக்கலாம்... ஆனால் வெட்டவெளியை கண்களை வைத்துக்கொண்டு அளவிட்டு முடித்தோர் எத்தனை பேர் இவ்வுலகில்?
குருவின் இயக்கம் எல்லாம் இறை நிலையில் மாத்திரமே. அவர் தன் உடலை மையம் கொண்டு வினைகள் புரியும் இச்சை எதுவும் இல்லாதவர். இதுவே சத்தியம்.
" அஸத்துக்கு இருப்பென்பது எப்போதுமில்லை. ஸத்துக்கு இல்லாமை எப்போதுமில்லை" என்று ரமணர் சொல்வார்.
அதாவது, சத்தியமில்லாத ஒன்றிற்க்கு மூலம் எதுவுமில்லை. அதனால் சத்தியமில்லாத ஒன்று நீடிப்பதில்லை... அது போல, சத்தியமான ஒன்று எப்போதும் நிலையாக இருந்து கொண்டே இருக்கின்றது என்பதால் தான் ஸத்தியம் இல்லாமை எப்போதுமில்லை என்று கூறுகிறார்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment