Thursday, December 9, 2010

Ramanar & Vethathiri Maharishi

ரமணர் மற்றும் நமது அருட்தந்தை பற்றி....


ரமணர் மற்றும் வேதாத்திரி மகரிஷி இருவரும் கூட ஒரே விசயத்தினை அவரவருக்குள்ள சூழ்னிலை மற்றும் அணுகுதலைப்பொருத்து சொன்னார்கள்! அவ்வளவு தான்!

உங்களின் ஒவ்வொரு வரிகளுக்கும் நிறைய சொல்லவேண்டி வருகிறது. ஆனால் எழுதுவதற்க்கு சுருக்கமாக எழுதுகிறேன்.

ரமணர் ஆன்ம நிலையானது இதயத்திற்(க்கு எதிரே) உள்ளது என்றார். வேதாத்திரி மூலாதாரத்திலே என்றார்...

இதற்க்கு பதில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.... அதாவது குரு உணர்த்தியது என்னவெனில், உயிரானது மூலாதாரத்திலே பாம்பு போல சுருண்டு இருக்கிறது, அங்கே இருந்து எழுப்பப்படுகிறது.

ரமணர் இந்த கூற்றை மறுக்க வில்லை.. ஆனால் அந்த நிலைக்கு முக்கியத்துவமும் தந்து பேசவும் இல்லை.

எளிமையாக நமது குரு எடுத்துக்காட்டினார்.. ரமணர் முடிவினை போட்டு உடைத்தார்... அதாவது முடிவிலே உள்ளதை முதலிலேயே சொல்லிவிட்டார். அது சரி தான். ஏனெனில் அது அவரின் உயர்ந்த நிலையினை விட்டு வேறெதுவும் பெசவில்லை. அங்கிருந்து இறங்கவே இல்லை.

அதனால் தான் ரமணருக்கும் குருவிற்க்கும் வித்தியாசமாக நமக்குத்தெரிகிறது...

இந்த வித்தியாசம் மற்றொன்றினை நமக்குச்சொல்கிறது என்னவெனில், நாம் இன்னும் ஆழ்ந்த தவம் செய்யவேண்டும் என்பது தான்! இரு குருவும் சொன்ன கருத்துக்கள் இரண்டும் சரியே என்ற தன்மை நல்ல தவத்திலே வரும் நிலை உண்டு! அதை குருவின் துணையால் அடைய வாழ்த்துக்கள்!

தவத்திலே அமர்ந்தால் மனது முதலில் பிடிபடும் அல்லவா! அதிலெ குருவை நுழைத்து ஆன்ழ்து இறை தவம் செய்ய, மனதானது தன்மாற்றம் பெற்று உயிராகும். அதாவது இறை தவத்திலே நாம் இருக்க, மனது செயல் இழந்து கணத்திலே, இறையிலே லயித்த நிலையிலே, ஸ்தூல உடலிலே இருந்து சூக்கும உடலானது நமது சரீரத்திலே இருந்து பிரியும். அந்த பிரிதல் தான் ஸ்தூல உடலின் மரணம் எனலாம்...

ஸ்தூலத்திலே இருந்து சூக்கும உயிரானது எழுச்சி பெற்று அதன் களமான இறைகளத்திலே இழுக்கப்பட்டு ஓடும். அப்போது மெல்ல தவம் தொடரும் பட்சத்திலே மூச்சு முற்றிலும் நிறுத்தும் கட்டுப்பாடு வரும். மூச்சினை உள்ளே நிறுத்தி வைத்து( இது ஒரு யோக நிலை) இதயத்தினை கூட நிறுத்தும் வல்ல்மை கிட்டும்.

இதயத்தின் துடிப்பினை நிறுத்தி தொடர்ந்து தவம் செய்யும் வலிமையும் கிட்டும்... நிறுத்த முடிந்த கணத்திலே இருந்து சூக்கும சரீரத்திலே இருந்து காரண சரீரத்திலே மாறும் ஆன்மா!... அதுவே முக்தி... அங்கே தவம் செய்ய தாங்க முடியாவிட்டால், இதயத்தின் செயல்பாட்டிற்காக இதயத்தின் எதிரில் (வலது பக்கம்) இருந்து சக்தியானது (மின்சாரம்) பாய்ந்து இதயத்திற்க்கு சக்தி கிடைக்கும்!
மீண்டும் மெலிதாக இதயம் துடிக்க ஆரம்பிக்கும்! இந்த இடம் தான் ரமணர் சொல்கிற ஆன்ம நிலை!

இந்த அனுபவம் குரு நிச்சயம் எல்லாருக்கும் தருவார்! எமது அனுபவம் குரு தந்தது! அதனால் தான் நமது குருவும், ரமணரும் சொல்லவருவது வெவ்வேறு நிலையிலான விளக்கம் என்று யாம் சொல்வது!

தவம் செய்து எழுந்த பிறகு, பல்வேறு சூழலிலே நாம் நமது மன அலை மாறினாலும், நமக்கு என்ன செய்யவேண்டும் தெரியும்! நமது இயல்பிற்க்கு எது வேண்டுமோ அதை செய்யும் வரை நாம் ஓய மாட்டோம்.

மனது வேலை செய்யும்... அறுகுணப்படும்... அதற்க்கு என்ன தீர்வு எனில், தவத்திலே உட்கார்ந்த சில நிமிடத்திலே நிறைவு நமக்குள் நுழைந்து சீராகும்! சரணடைதல் நடந்தால் தான் தவத்திலே அனுபவம் கிட்டும் அல்லவா! அதனால் தான் ரமணர் சொல்வார்... புலி வாயில் அகப்பட்ட இரை விலங்கு எப்படி புலி வாயில் இருந்து தப்பிக்க முடியாதோ அது போலத்தான் சரணடைந்த சீடனின் நிலையும்!

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment