Thursday, December 9, 2010

Arutperumsothi...

வாழ்க வளமுடன்


இறைவெளியே தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றல்

இதன் திணிவு மடிப்பு விழ சுழலும் நுண் விண்ணாம்.


குருவே.


இறை நிலை அறிய கணக்கு போட்டு உள்ளே சென்றவர் பாழாகிப்போனார்.

புலன்கள் கொண்டு இருட்டு, வெளிச்சம் என்று சொல்லிக்கொண்டே போனால், இருப்பு என்ற ஒன்றைத் தொடுவது எப்போது?

புலன்கள் இன்னமும் இயங்குகிறதா? அப்படி எனில், எப்படி தியானம் ஆரம்பிக்கும்?

இருள் நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி என்ற குருவின் வரியானது சொல்லவருவது, கணிக்கும் புலன்கள் அடங்குதலின் அடையாளம். அந்த புலன்களின் இயக்கத்தினை நமக்குள்ளே இருந்து அடக்க குருவின் துணை அன்றி வேறு என்ன சாத்தியம்?

அந்த ஆழ்ந்த தவத்திலே குருவிடம் கொள்ளும் சரணாகதியே தான் மனமடங்கி என்ற தன்மையாம் சரணாகதியை நமக்குத் தந்து, புலன்களின் இயக்கத்தினை நிறுத்துகிற வலிமையை நமக்குத் தரும்?

இரண்டு இரண்டாக கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும்! வெளிச்சம் இருட்டு என்று சொல்ல எவரும் இல்லை. எவரிடம் கேட்பது? அசைந்தால் அறிவிலே இருந்து விலகுவோம் என்கிற போது, அறிவு இருட்டா, வெளிச்சமா என்று கேட்டு பேரறிவில் இருந்து குருவிடம் இருந்து பிரியும் தவறை அந்த அற்புத வாய்ப்பை தவற விடும் முட்டாள்தனத்தினை எதற்க்கு சீடன் செய்யவேண்டும்?

அவனில் தான் நீ! உன்னுள்ளே அவன்!
அவன் யார் நீ யார் பிரிவேது?

அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்.

அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி.

பழுத்த நிலை வரும் வரை நீ நான் (இரண்டு) என்போம்
பதமடந்தோம் ஒன்றானோம் பரமானந்தம்.

குருவே சரணம்.

No comments:

Post a Comment