வாழ்க வளமுடன்
ஆழ்ந்து குருவிடம் இறை நிலையிலே சரணடையும் போது, எண்ணமானது குறைந்து வரும். முற்றிலும் எண்ணம் குறையும் போது மனமானது அடுத்த தன்மாற்றமான உயிர் என்ற தன்மையினை நமது உடலிலே இருந்து பிரித்து எடுத்துக்காட்டும். அப்போது மனமானது செயல் இழந்து விட்டிருக்கும். ( இது தான் மரணத்தின் போது நிகழ்வது!... இதுவே மரணம்!)
குருவே சரணம்.
எப்போது உயிர் பிரிந்ததோ அப்போதே அது முழுமையை நோக்கிச்சென்றாலும் கொண்டிருந்த பதிவுகள் மற்றும் நோக்கங்களுக்கேற்ப அந்தந்த தனமையினை உணரும். உயர்ந்த தவத்திலே இது நிகழும்.
ஒருவர் இறந்த உடன்,உடலினை விட்டு உயிர் பிரிந்தாலும், பழக்க நிலையிலே எதனை நோக்கி இருந்தாரோ அதனை அடைந்து அனுபவிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களிலெ சென்று உயிரானது சிதறி அங்காங்கே பதிந்து கொள்ளும். நோக்கம் நிறைவேற அதே போன்ற தன்மையினை கொண்டவரின் அலைகளுக்குள்ளெ தனது செயலை நிகழ்த்தி நல்லதோ மற்றதோ அதை அனுபவிக்கும்.. அதன் பிறகு முழுமையிலே கலந்து ஒடுங்கும்.
இறையை மட்டுமே வெகுவாய் விரும்பி கலந்து கொண்டே இருக்கிற ஒருவர், உடலிலே இருந்து உயிர் பிரிந்தாலும், பழக்க நிலையாம் மெய்ப்பொருளை நோக்கியே சென்று ஒடுங்கும்...
அவ்வுயிர், பாரதி சொன்னது போல,
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரண்டைந்தேன்!
என்று அப்போதும் இறை நிலையிலே ஒடுங்கும். எப்போதெல்லாம் அவரை தொடர்பு கொண்டாலும், அவர் தன் இருப்பான இறையின் தன்மையினை எடுத்துக்கொடுப்பார்... (இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் நமது குருவை உதாரணமாகக் கொள்ளலாம்!)
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment