Friday, December 10, 2010

அறிவு முழுமை அது முக்தி...

-குருவின் திருவருளால் அனைத்துயிர்களும் இன்புற்று வாழ வாழ்க வளமுடன்.

-இறை தியானத்திலே நாம் மூழ்கும் போது பெறும் அனுபவத்தை பகிர்வது என்பது தியானத்தைப்பற்றி ஒரு அடிப்படையான சில சிந்தனையை உங்களின் உள்ளத்திலே தோன்றிவிடும். –ஆனாலும் எந்த ஒருவரின் அனுபவமும் நாம் சுய முயற்ச்சியாய் செய்து பார்க்காதவரை அந்த அனுபவங்களை படிப்பதால் மட்டுமே ஒருவருக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை. –அடிப்படையில் ஒன்றாய் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் உள்ள அனுபவமும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை…

--குருவானவர் சொல்லாத இறை தத்துவமா? – நம்மில் எத்தனை பேர் முறையாக அவரின் எழுத்தை ஏற்று இருக்கின்றோம்? – நடைமுறைப்படுத்தியோர் எத்தனை பேர்? உள்ளபடி…குரு சொன்னதை சொன்னபடியே புரிந்து கொண்டோர் எத்தனை பேர்?

- தியானத்திலே மிகவும் நுணுக்கமானது இறை தியானமே! இதற்க்கு முன் சில இடங்களில் இறை தவத்தின் பலன்களை சொல்லும் போது ஒரு சில விசயங்களை பற்றி மேலோட்டமாக சொல்ல வேண்டியிருக்கிறது. – நோக்கமானது உயர்ந்த ஒன்றை பற்றி இருக்கும் போது, வழியில் வருகின்ற எதையும் நாம் அவ்வளவு பொருட்படுத்த மாட்டோம் அல்லவா?

- முன்பு நம் நண்பர் ஒருவர் மன அலையை பற்றி எழுதும்போது, ஒரு சில மகான்களின் மன அலையானது தான் அனைத்தையும் அறியும். மற்றோர் அதைத்தாண்டி போயிருந்தால் அந்த குறிப்பிட்ட அலையிலே உள்ள விஷய அறிவு இருக்காது என்பது போல கூறி இருந்தார்.

- -ஒருவர் பஸ்ஸிலே அல்லது விமானத்திலே பயனிக்கும் போது தூங்கினால் வழியில் உள்ளது தெரியாது என்றும், முழித்துக்கொண்டு பார்த்தோருக்கு மட்டும் தான் அழகை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று உதாரணம் சொல்லி இருந்தார்..

- நாம் இந்த உதாரணத்தை தியானத்திலே பயன்படுத்த முடியுமா? பஸ்ஸிலே தூங்கலாம்… விமான பயணத்திலே தூங்கலாம்! தியானத்திலே தூக்கம் என்ற பேச்சே இல்லை. –தூங்கும் போதும் தியானம் செய்வாரே அன்றி… தியானம் செய்யும் போது தூங்க மாட்டார் மகான்கள்!

- - சிறந்த இறை தியானமானது கொடுக்கிற விழிப்பு என்பது, ஒரு தெளிவு என்பது ஒரு முறை விழித்துக்கொண்டால் தூங்கவே தூங்காது. விழித்துக்கொண்டோர் தூங்குவதில்லை.. உண்மையில், அவர் தூங்கினாலும், அவரின் பகுதி அறிவு ஒரு கணமும் அயராமல் எப்போதும் அறிவிலேயே தோய்ந்திருக்கும்.

- -தியானத்திலே ஒரு புள்ளியை தாண்டும் போது ஒருவரும் மற்றவரும் எப்படி அனுபவிப்பார் என்று நாம் எப்படி கருத்துக் கூற முடியும்? –அப்படியும் கூட பார்த்தால், குரு சொல்வாரே………பழுத்த நிலை வரும் வரை நீ நான் என்போம், பதமடைந்தோம் ஒன்றானோம் பரமானந்தம்…. –தன்னை அன்றி ஒன்றும் இல்லை என்றாகும் போது பிறரை காணும் நிலை இறை தவத்திலே விளைய வாய்ப்பு ஏது?

- -ஒரு புள்ளியை தாண்டும் போது, அந்தப்புள்ளியை பற்றி ஒருவர் அனுபவித்ததைக் கூறலாம். ஆனால் நோக்கமானது இறை நிலையிலே, மௌனத்திலே ஒடுங்கினவருக்கு மன அலை பற்றியும், அந்த மன அலையை பற்றி எதுவும் தெரியாது என்று எப்படி கூற முடியும்?

- -மேலும் ஒருவர் சொன்னதாலே உயர்ந்தவர் என்றும் மௌனத்திலே இருந்து ஒரு கணமும் பிரியாத ஒருவர் கருத்து சொல்லாமல் இருந்தால் உயர்ந்தவர் அல்ல என்பது மாதிரி கருத்து கொள்வது மூடத்தனமே! –மகான்களிலே ஒவ்வோரின் நடவடிக்கையானது இறையை உணர்ந்த பிறகு ஒன்றாகவே தான் இருக்க வேண்டும் என்பதில்லை…

 ஒரு முறை தெளிந்தால் அந்த விழிப்பு நிலையானது அழைத்துச்செல்லும் பாதையே தான் வாழ்வு என்றாகும். –ஏனெனில் நிகழ்காலத்தைத் தவிர ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு கடந்தகாலமே இல்லை… அதனால் எதிர்காலமும் இல்லை. இக்கணத்தைத்திலே விழிப்பாய் இருப்பதால், ஆனந்தம் மட்டுமே எப்போதும்… வேறு ஒன்றுமே இல்லமல் போகும்.


 குருவின் உதவியாலே நாம் மனதைக் கடக்கும் போது உள்ள அனுபவத்தை சொல்லும் போது ஏதோ கனவை பற்றி எங்கோ நமக்கு சொன்னதை நாம் திருப்பி எழுதுவதைப்போலவே தான் தோன்றும்… அனுபவித்தோம் என்று சொல்லமுடியாத அனுபவமாகவே தான் சொல்லத்தோன்றுகிறது… அந்த அனுபவமானது நம்மால் தான் வந்தது அல்ல என்பதே….

--தவத்திலே உள்ள ஒரு வரியை ஒரு நண்பர் விளக்கும் படி சொன்னார்… அந்தக்கேள்வி என்னவென்றால்…. இறை தியானத்திலே மூச்சு குறைந்து வருவது எப்படி நடைமுறை வாழ்க்கையிலே வர முடியும்?? –என்பது தான்…

--இறை தவத்தை தொடங்கும் போது, கைகளைக் கெட்டியாக கோர்க்கப்பட்டு, கால்களை அசையத மாதிரி வைத்துக்கொண்டு இருக்கிறோம்…மனத்திலே உள்ள எழுச்சியானது மென்மேலும் உயர உயர, தானாகவே குருவை அண்டுவார் உண்மையான சீடர்கள்.…இயற்கையாகவே… அப்படி குருவின் துணையோடு மனதைக்கொண்டு உயரும் போது, மனதானது தீட்சை தரும் போது சொன்ன மாதிரியே சொல்லும்… இதோ சந்திரன்… இதோ சூரியன்… இதோ சக்திகளம்… இங்கே எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன.. இப்படி எல்லாம்… ஆனால் சிவகளத்திலே வரும் வரை… குரு அந்த வார்த்தைகளின் கூடவே வருவார்… அங்கே நின்று கொண்டு சீடனின் அழுத்தத்தை உற்றுப்பார்ப்பார்… சத்து இல்லாதோர் எல்லாம் சருகைப்போல மீண்டும் கீழ் நோக்கிச்சென்றுவிடுவார்கள்…

 பிடிப்பைக்கொண்ட சீடனனின் மனமானது சிவகளத்தை நோக்கியே தான் தவத்தின் ஆரம்பத்தில் இருந்தே சிவகளத்தை வைத்தே தொடங்குவார்… அந்தக் களத்திலே மனதை குவித்து நின்று நாமும் அதனோடு உயர்ந்து செல்கின்றோம் என்று ஊக்கப்படுத்திக்கொண்டு, குருவை நினைந்து அப்பா… என்ற ஒரு வார்த்தையை சொன்னாலே… இதோ என்று பொறி புலன்களை அடக்கும் முறையை சொல்வார் குரு…அதுவே தான் சூக்கும தீட்சை… அதை அப்படியே சீடன் செய்வார்… இது போதும் என்ற சீடன் சருகாகி கீழே விழுவார்…


 எந்த அளவிற்க்கு அழுத்தமோ அந்த அளவே தான் உயர்வு என்று அடிக்கடி சொல்வதின் காரணம் இதுவே தான்! –குருவின் தீட்சையானதை பெற்றுக்கொண்டாலும், இந்த உள்ளெலும் தீட்சை என்பது அண்டினோர்க்கு என்றே தான் காத்துக்கொண்டிருக்கிறது!


 இப்போது தவத்திலே இருக்கின்ற சீடனின், கைகள் இறுக்கத்தை விட்டாலும், கோர்த்த கைகள் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத காந்தத்தைப் போல இணைந்திருக்கும்… தவத்தின் தொடக்கத்திலே இருந்த இறுக்கமானது தளர்ந்து, கைகளை கோர்க்கும் அந்த முயற்சியை கூட விட்டிருப்பார்… தவமே எல்லாவற்றையும் செய்து கொள்ளும்! –இதுவே தவத்தின் வலிமை!


 மனதைத்தாண்டி சிவ களத்திலே நிற்கின்ற நமக்கு, மனதிலே எந்த சிந்தனையும் இல்லை ஆனால் சாட்சியாகிய அறிவு இதை பதிவு செய்து சொல்கிறது… எண்ணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நோக்கம் இறை நிலையோடு கரைய ஆரம்பிக்கும் போது, கை கால்கள் இணைப்பு மற்றும் உடலை பற்றி எந்த நோக்கமும் இன்றி, உயர்ந்து நிற்கும் போது மூச்சு மட்டுமே தான் கவனத்திற்க்கு வருகிறது.. இப்போது மன அலை குறைந்து விட்டதால், மூச்சின் அளவும் கூட குறைந்து இருப்ப்பதைக் காணலாம்.


 இப்போது மூச்சை கட்டுப்படுத்தும் முழு கட்டுப்பாடும் அறிவிற்க்கு வரும் போது, அதை நிறுத்திப்பார்க்கும் வலிமையும் வருகிறது….


 மூச்சை நிறுத்திப்பார்த்தால் தான் தெரியும் நமக்கு என்ன ஆகிறது என்று…அங்கே குருவின் துணையால், அறிவு அசைவற்று அனுபவிக்கும்! –உடலைக்கொண்டு அறிவைப்பார்க்கும் நாம், மாறிப்போய் அறிவைக்கொண்டு உடலைப்பார்க்கும் அந்த மேன்மையை அடைவோம் குருவின் துணையால்!



 கேள்விக்கு வருவோம்… எப்படி நடை முறைப்படுத்தப்படும் இந்த தவத்தின் பலன்


 மூச்சின் அளவு குறையும் என்பது என்னவென்றால், எண்ணமானது நம்முள்ளே நுழையும் அளவு குறைகிறது என்பதே தான் இந்த மூச்சு இழுப்பது குறையும் என்பது….
 -தவத்தை நாம் முடித்து விட்டாலும், ஒரு முறை மனதை கடந்து மூச்சை கட்டுப்படுத்தும் திறனை கற்றவர்களுக்கு, இது உடலோடு இணைந்து விடுகின்றது… இயல்பாகிப்போகிறது.


 எண்ணமானது இருத்தலின் அடையாளமாகவே தான் மூச்சைக்கூறலாம். எண்ணத்தின் அளவே தான் மூச்சு.. எண்ணமானது அதிகம் வரும் போது நமக்கு உணர்ச்சி வசப்படுவது நிகழ்ந்து, தாறுமாறாக மூச்சு ஓடுவதைக்காணலாம்.
 எண்ணம் குறைந்து விட்டதன் அடையாளமாகவே தான் இந்த மூச்சின் உள்ளுழுப்பு குறைந்ததைக்குறிப்பிடலாம்! –ஒருவருக்கு மூச்சு மீண்டும் மாறலாம்… ஆனால் அது உண்டாக்கிக்கொண்டதே தான்! –அதைத் தாண்டி நின்ற உடனே மீண்டும் அவரின் தன் இயல்பான அளவிலே புகுந்து கொள்வார்!



எந்த அனுபவத்தை விட குருவே தான் உயர்ந்தவர்… எந்த அனுபவமும் குருவின்றி வந்து விடாது… பிச்சைக்காரனே தான் அலைந்து திரிந்து சொல்கிறான்! அறிவும் குருவும் எப்போதும் அசையாது பிரியாது நிலைத்து இருக்கிறது… கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு… இது குரு அடிக்கடி உள்ளே நின்று சொல்வது!…

அவனில் தான் நீ… உன்னிலே அவன்
அவன் யார் நீ யார் பிரிவேது?
-அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
-அறிவு முழுமை அது முக்தி !

-உன்னை நான் அறிவேன்… என்னை அன்றி யார் அறிவார் என்பது தன்னை அன்றி ஒன்றும் இல்லை என்கிற போது, தானாகவே வரும்… விலகி நின்றாலும் இறையின் முன் சொல்லத்தோன்றும் சத்திய வரிகள் ! சினிமாவிலே பயன்படுத்தப்பட்ட, ஞான வரிகள் அவை !

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment