வாழ்க வளமுடன் குருவே சரணம்.
பெற்ற பிள்ளை அழுவதை எப்படி தாய் பொறுக்கமாட்டாளோ அதே போலத் தான் சீடனைக்கொண்டுள்ள குருவின் நிலையும். ரமணரிடம் ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது...
குருவானவர் சரணடைந்த சீடனை எப்போதும் காப்பாற்றுவாரா? ரமணர் சொன்னார் : புலி வாயில் அகப்பட்ட இரை விலங்கு எப்படி புலியின் வாயில் இருந்து தப்பிக்க முடியாதோ, அதே போலத்தான் சரணடைந்த சீடனின் நிலையும்"
ஒரு முறை குருவின் இருப்போடு இணைந்து ஒன்றாக உணர்ந்த பிறகு, நடப்பவை அனைத்திலும் எதையும் சந்திக்கும் துணிவும், யாரைக்கண்டும் கொஞ்சமும் நடுங்காத உறுதியும் தானே ஏற்பட்டுவிடுகிறது. செயல்களில் நேர்மையும், எந்த ஒரு பாதையிலே நாம் குருவை உணர உயர்ந்தோமோ,அப்படியே குருவின் உயர்வான அனைத்து தன்மைகளும் கூட சீடனுக்குள்ளே இயல்பாகவே ஆகிறது.. எங்காவது சிறு சலனம் கண்டால், அது சீடன் குருவைக்கொள்ளாத கணமாகவே இருப்பதைக்காணமுடிகிறது. எம்மைக்காக்கும் குருவின் களத்திலே, எப்போதும் நிலைக்கும் சீடனுக்கு எப்போது எந்த சூழல் வந்தாலும் குருவின் சொல்லையே தன் சொல்லாய் பாடுவான்.
பிறரால் அவமானப்படுதல்/துன்பப்படுதல் நிகழும் போதெல்லாம், தூய்மை எனில் பழிச்செயல்கள் பதிவு நீக்கம் துன்ப அனுபவமாக இயற்கை நல்கும். ஆய்வு தனக்குள் ஆற்றி அகத்தே நிற்கும் அறிவு ஒளியில் அறத்தின் நெறி விளங்கும். தேய்வு பெறும் பல வினைகள் இதையுணர்த்தும் திருவிளையாடல் குறிப்பே அன்பர் தூற்றல் ஓய்வு உள்ளத்தில் கொண்டு வாழ்த்தி வாழ்த்தி உளமகிழ்வைப் பழிப்போர்க்கு
அர்ப்பணிப்போம். என்ற வரிகள் பாடிக்கொண்டே இருக்கவே தோன்றும். பிறரால் துப உணர்வு மேலிடும் போதெல்லாம், குருவின் இந்த வரிகள் தவிர வேறு எந்த செயலும் அமைதியையும் நிறைவையும் தராததால் தான், குருவின் மேல் உள்ள தொடர்பும், குருவானவர் எம்மைவிடாமல் தன்னைப்போலவே சிந்தனையை மாற்றுகிறார் என்பதும் புரிகிறது. புரிந்து அழத்தோன்றுகிறது.
குருவானவரின் உடல் பற்றிய இருப்பைத் தாண்டி இப்போதும் கூட குருவின் துணை எப்போதும் உணர முடிகிறது. தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச்சரடைந்தேன்.. என்று பாரதி பாடினது போல... குருவின் செயலே நம் செயாலக மாறுவதை காணும் போதெல்லாம், ஆனந்தத்திலே நெகிழ்கிறது நெஞ்சம். ஆனால் குருவின் வரியாக நாம் மாறாத வரை நம்மை அந்த நிகழ்வுகள் தொடர்ந்து நெருக்கி வருவதை
பார்க்கும் போதெல்லாம், ஆகா என்னுடைய அப்பன் என்னை விடாமல் தன்னைப் போலவே வைத்து காக்கிறாரே என்று அழத்தோன்றுகிறது. குருவின் இருப்பானது தனிப்பட்ட அனுபவத்திலே கூட நமது அறிவிற்க்குள்ளாகவே தொடர்ந்து இருப்பதைக் காணும் போதெல்லாம்,குருவின் மேல் உள்ள அன்பால் கண்ணீர் பெருக்கிறது. ரமணர் சொன்ன அந்த இரைவிலங்காய் நாம் இருப்பது எப்பேர்ப்பட்ட சுகமானது?! எப்போதும்
சுகம் எது என்றால் ஒரு சீடனாகவே குருவின் நிழலில் இருப்பது தான். இந்த சுகத்தினை தர குரு என்ற இருப்பு எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிறது. அது போல தாயுள்ளத்தோடு குருவின் அருளும் நம்மை அணைத்துக்கொள்ளக் காத்திருக்கிறது. நாம் இறை தியானத்தினை / ஆத்மாவை விரும்பி தியானித்து உணர்தலினைப்போல, ஆதம நிலையானதும் கூட அணுகும் நமக்காக விரும்புகிறது. யாரெல்லாம் ஆத்ம நிலையை விரும்புகிறார்களோ அவர்களை எல்லாம் ஆத்ம நிலையும் கூட விரும்புகிறது என்பது நிதர்சனம்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment