Friday, December 10, 2010

சத்தியமான இறை நிலை...

வாழ்க வளமுடன்

குருவே சரணம்.

நாம் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் மூலமானது இறை நிலை.

எந்த அனுபவத்தின் சாட்சியுமாக நம் அறிவாக இருக்கிறது இறை நிலை.

எண்ண அலை முடியும் தருணத்திலே நம் அனுபவமானது நம் அறிவிலே தெளிந்தாலும், அந்த அறிவானது தான் அனுபவத்திற்க்கு சாட்சியாக இருந்து நமக்கு உணர்த்தி விடுகிறது.

இந்த மாதிரியான நேரத்திலே தான் நமக்கு கருத்துக்கள் உருவாகிறது. இது எண்ணங்களாக விளக்கப்பட்டாலும் இது சொல்லால் கூற முடிகிற இறை விளக்கமாக இருக்கிறது.

நாம் தவத்திலே உயர்ந்து எண்ணத்தை கடந்து நிற்க்கும் போது, நம் உயிரில் உடுங்கும் போது, நமது உடலுக்கும் உயிருக்கும் என்ன வித்தியாசம், எதனால் உயிரை உணராமல் இருக்கிறோம்? என்ன தடை? எதை செய்தால் உயிரை விளங்கிக்கொள்ளலாம் என்ற கேட்காத கேள்விக்கெல்லாம் விளக்கம் கிடைக்கிறது.

எந்த அனுபவத்தையும் நாம் அனுபவிக்கும் வரை அதைப்பற்றி நாம் உணராத வரை, எந்த அனுபவமிக்கோரின் பேச்சும் கூட நமக்கு எந்த மாற்றத்தையும் தருவதில்லை.

சுய அறிவின் முன்னேற்றம் தான் எல்லாவற்றிற்கும் முடிவு. அவரவர் முயற்சிக்காத வரை, பேச்சுக்கள் ஒரு பயனையும் தரப்போவதில்லை. சாஸ்திரங்களும், வேதங்களையும் கையில் வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து விடுவதால் அறிவு தன்னை உணர்ந்து விடாது.

ரமண மகரிஷி சொல்வார்... வெட்டியான் பிணத்தை எரிக்கும் போது ஒரு கைத்தடி வைத்துக்கொண்டு முழுமையாக பிணம் எரியும் வரையில் பயன்படுத்தி விட்டு, கடைசியில் அந்தக் கைத்தடியையும் கூட நெருப்பிலே போடுவதைப்போல, வெளிப்புற நோக்கிலே அடைந்த எந்த அறிவையும் தூக்கி எறிந்துவிட்டு உள்புற திரும்பிவிடுவது தான் நெறி....

உட்புறத்திலே உணரப்படும் எந்த அனுபவமும் கூட சாட்சியாக இருந்து பார்ப்பவனிடத்திலே நாம் ஒடுங்கும் வரை தவத்திலே முழுமை இல்லை. ஒரு எண்ணமும் நிலைக்காத இடமான அந்த தூய அறிவான இறை நிலையிலே அறிபவனாக சாட்சியுமாக விளங்குவதும் தூய இறை நிலையே! அனுபவத்தின் தொடக்கத்திலே அறிவு சாட்சி..

சத்தியமான இறை நிலையே நமது சாட்சி... அனுபவத்தை உணரும் தருணம் தூய நிலையானது தான்... ஆனால் அங்கே சாட்சியாக இறை நிலையில் நம் அறிவு இன்னமும் விலகியே இருக்கின்றது என்பது உண்மை. அதுவரை துவைத மனப்பான்மையே! எப்போது அனுபவத்தை கடக்கின்றோமோ அதுவே முழுமையின் தொடக்கம்... அங்கே குருவின் ஆற்றலானது சொல்லமுடியா விளக்கமுடியா ஆற்றலுடன், அசைவற்று, எந்த இயக்கமும் இல்லாமல், எப்போதும் நிலைத்து எரியும் ஜோதியென இறை நிலை ஒளிர்கின்றது...

குருவிடம் சரணடையும் எந்த ஒரு கணமும் புனிதமானதே. அந்தக்காலடியை உணரும் வரை தவத்தை நாம் தொடங்கவே இல்லை..

குருவே சரணம்.

No comments:

Post a Comment