Friday, December 10, 2010

அணுகும் சீடனுக்கு...

எல்லாம் வல்ல இறை அருளின் முன் அனைத்து உயிர்களும் ஒன்றே.

- கருத்திற்க்கு விஞ்ஞானம் பற்றி நிறைய பேசினாலும், அறியப்படாத ஒன்றாக என்றுமே விளங்கும் இறை நிலை என்ற ஒன்று இல்லாது போனால், மனிதன் தன் சுய நிலையை உணர வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருப்பான்.


- ஒவ்வோர் தனி மனிதனும் சுய அறிவால் முன்னேற்றத்தை அடையும் வரை எல்லா வகையான பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டே இருந்தாலும், தியானம் என்ற ஒரு பயிற்ச்சியிலே அமரும் போது கற்ற அனைத்தையும் துறக்க வேண்டி வருகிறது. One has to know how to unlearn in Meditation. learning of knowledge is burden.

- நாம் இறை தியானம் செய்தால், உடலிலே உள்ள நரம்புகள் புத்துணர்ச்சியும் பெறுகின்றது. – நரம்புத் தளர்ச்சியை குறைக்கின்றது. மூச்சு சீராக இருக்கவைப்பதால், இதயத் துடிப்பும் சீராகவும் ஆகிறது.

- நன்றாக இறை தியானம் செய்தால், சுவாசம் சீராக ஆகி, இதயத்துடிப்பும் சீராகிறது.-மூச்சிழுக்கும் அளவு குறைவதால் இதயத்தின் துடிப்பை முறைப்படுத்தி துடிப்பை சீராக்குகின்றது. –இந்த மூச்சிழுக்கும் அளவு இயல்பாகவே நமக்கு நடைமுறையில் வந்து விடுவதால் தவத்தின் பலன் வாழ்விலே நன்றாக அனுபவிக்க முடிகின்றது.

- இதயத்துடிப்பை நிறுத்துவது என்பது விஞ்ஞானத்தினால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. விஞ்ஞானத்திலே இதயம் நின்றால் மனிதன் பிணம் என்று அழைக்கப்படுகின்றான். தியானத்திலே இதயம் நின்றால், மனிதன் தெய்வமாகின்றான்.

- -மனது எட்டும் அளவிற்க்கே விஞ்ஞானம் வேலை செய்கின்றது. –விஞ்ஞானம் அறியாத ஒன்று இறை நிலை என்று காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கும். விளக்க முடிந்த அனைத்து இறை விளக்கங்களும் அதிகப்படியாக துவைத அடிப்படை வரை போகும். இறையை ஒன்ற தியானத்தை அன்றி ஒருவரும் தர முடியாது.

- -இறை அறத்தொடு ஒன்றும் போது கிடைக்கும் வாய்ப்பு என்பது மானிடனாய் பிறந்த கோடிகளில் ஒரு சிலருக்கே தான். –அந்த வாய்ப்பும் கூட குருவை அன்றி உணர்ந்தவர் ஒருவரும் இல்லை.-அதிகபட்ச அறிவை தியானம் அன்றி பெற்றவர்கள் தியானம் செய்தால் சரியாகும் என்பதை ஒப்புக்கொள்வர்.

- -எல்லாம் முடிகின்ற இடத்திலே நிற்கின்ற நாம் எதற்க்கும் எதை எதையோ பார்க்க வேண்டும். – குருவின் உதவி நமக்கு எங்கே கிடைக்கப்பெறுகிறது என்று தியானித்தால் இறை நிலை வரை நம்மை கொண்டு சேர்த்து விடும்.

- -தியானத்திலே அமரும் நாம் ஆரம்பத்திலே குருவை பிடித்துக்கொண்டால், அந்த பிடிப்பின் அளவிற்க்கு ஏற்ப அழுத்தத்திற்க்கு ஏற்ப அறிவை பற்றி அறிவிலே தெளியும். –தேடுதல் தீரும். –அது வரை பிச்சைக்காரனைப் போல அலைந்து தான் தேட வேண்டும் தியானத்திலே. குருவைத்தேடிய பிச்சைக்காரனை குருவானவர் போதும் தேடியது… நிறுத்து உன்னை … நீ என்னிடத்திலே இப்போது என்கிற போது பிச்சைக்காரன் மாறிப்போயிருப்பான். அசைவின்றி குருவோடு இணைந்து ஆனந்தத்திலே கரைந்திருப்பான்.

- -தியானத்திலே விரும்புதல் என்ற ஒன்றும், விரும்பாதது என்றும் ஒரு நிலை இருக்கின்றது. வீராவசனம் பேசும் எவரும் இறையின் முன் நிற்க்கும் போது தான் அந்த ஆற்றலை பார்க்கும் போது தான் அவரின் சுய வலிமை விளங்கும்.

- -குருவின் காலடியை தவத்தின் ஆரம்பத்திலே மனதால் நினைப்பதற்க்கும், தியானத்திலே குருவின் காலடியை உணர்வதற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வெறும் 20 நிமிடம் போதாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குருவை விடாமல் கொண்டால் அன்றி வேறு வழி இல்லை. – ஏதோ சாமியார் என்கிற மாதிரி பக்கத்திலே இருப்பவர், தியானம் ஆரம்பித்தவுடன், மனதில் நினைக்கும் போது ஒரு அன்னியனாகவும் இருக்கின்ற அந்த குரு, மனதால் அன்பு வடிய நினைக்கும் போது பெற்ற தந்தையாகவும் இருப்பார்… -தியானம் நிலைத்தால் அவரே நம் தாயாவார்… அந்த தாயின் நிலையும் மாறி இறையாகவும் மாறுவார் குரு. அப்போதும் குருவைத் தொட முடியாது அறிய முடியாத ஆற்றல் மிக்கவராய் அருட்பெரும் ஜோதியாய் இருப்பார்..

- -குருவாக, தந்தையாக, தாயாக, இறைவனாக இருக்கும் குருவும் அவரை ஏற்கும் பிள்ளையும் ஒன்றே தான் என்பார் இறை நிலையிலே நின்று.

- -தாயே என்றவுடன் தருக்கென்ற தன்முனைப்பு குருவோடு இணைந்து கண்ணிலே நீர் வர வேண்டும். –அம்மா என்று இறைஞ்சினால் குரு கண்ணிலே நீராக வர வேண்டும்… அப்பா என்றால் மனம் என்ற சுமை இறங்கிப்போக வேண்டும்…. –எந்த அளவிற்க்கு ஏற்கிறோமோ அந்த அளவிற்க்கே தான் இறையின் நெறி அறிவில் தெளியும்.. அதனைத்தாண்டி ஒரு புள்ளி நம்மால் பெற முடியாது…

- -தாயே, தந்தையே , அப்பா, குருவே என்று அணுகும் சீடனுக்கு, தன்மையிலே தன்னை வெளிப்படுத்தி உயர்த்துவது குருவின் அருள் !

- -- நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்குமட்டும்,

- -எவர் ஒருவர் குருவை ஒழுகினாலும்,

- -தப்பாது குரு உயர்வு நினைப்போர் தம்மை

- -தரத்திலே உயர்த்தி பிறவிப்பயனாகிய நிறை நிலையைத் தரும்…



-வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment