Friday, December 10, 2010

அன்பும், அனுபூதியும்!!!

வாழ்க வளமுடன்


அன்பும் கருணையும் எப்போதும் மலர்ந்து இருக்க வேண்டுமெனில் மனிதன் தன் சுய உயர்வை உணர வேண்டியது அவசியம்.


எத்தனையோ இடர்களில் மனித சமுதாயம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வாழும் போது தன்னை உணர்ந்தால் தவிர பிற உயிரின் தன்மையை அவனால் உணரவே முடியாது. அங்கே தான் அலட்சியமும் பிறரை வருத்தும் அகங்காரமும் பிறப்பெடுக்கிறது..


தவறு செய்த பிறகு தண்டணை என்பது செயல் விளைவாய் மனிதன் உணர்ந்தே ஆக வேண்டும் என்பதால், காலத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எல்லாம் மகான்கள் பொறுமை காத்து மனதை திசை திருப்பி இறைவனின் தன்மையாக எப்போதும் இருக்க வைத்து மன அமைதி கண்டார்கள்.

உலகிலே எங்கெங்கோ உங்களை மதிக்கும் மக்கள் கஷ்டப்படுகிறார்களே, நீங்கள் ஏன் அவைகளை துடைக்க அங்கே செல்லக்கூடாது என்று ரமணரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது...

ரமணர் திருவண்ணாமலையில் சிறு வயதில் இருந்து வாழ்ந்தவர். திருவண்ணாமலையை விட்டு எங்கும் அகலாமல் வாழ்ந்தவர்...

அவர் சொன்னார்.... உங்களுக்கு யார் சொன்னது நான் அங்கெல்லாம் செல்வதில்லை என்று?


ரமணர் சொல்வார்... உடல் சார்ந்து நீங்கள் எல்லாம் பிறரை பார்ப்பதும் என்னையும் அதே மாதிரி அணுகுவதும் தான் இந்த கேள்விக்கு மூலமாக இருக்கிறது...

எவ்வளவோ பேருக்கு வேண்டியதை நேரடியாக உடல் கொண்டு தருவதை விட, மௌனத்தால் தான் சிறந்த சேவையைச் செய்ய முடியும் என்பார்... மௌனத்தால் தான் உலகுக்கு அமைதி வரும்....


சமீபத்திலே ஒரு புத்தகத்திலே காஞ்சி பரமாச்சாரியார் பற்றி ஒரு கட்டுரை படித்தேன்...

ஒரு பக்தரை பரமாச்சாரியார் அழைத்து தனக்கு உடல் காய்ச்சல் இருப்பதாகச்ச்சொன்னாராம்.. அந்த பக்தர் மருத்துவர் என்பதால், உடனே கிளம்பி வருவதாகச் சொன்னாராம். முனிவரோ, உனக்கு விஷ்ணு சகஸ்ர நாமம் தெரியுமா என்று கேட்டாராம்... தெரியும் என்று பக்தர் சொல்ல, சரி பொறுமையாக மாலையில் வாருங்கள் என்றாராம்.

மாலையிலே அவர் அங்கே சென்ற போது, முனிவருக்கு உடல் காய்ச்சல் அதிகமாக இருந்தது... முனிவர் குளித்துவிட்டு வந்து, உடனே விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாராம்... மந்திரம் சொல்லி முடித்த நேரத்திலே, காஞ்சி முனிவரின் உடல் காய்ச்சல் சரியாகி விட்டதாம். காய்ச்சல் இன்றி குளிர்ந்து இருந்தது அவரின் உடல்...

இதைப்படித்த போது, அவரின் மேல் அன்பும், மரியாதையும் ஏற்பட்டது.... எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அவர் காய்ச்சலுக்கு மருந்து எடுக்காமல் இறைவனை நினைக்க அமர்ந்துஇருந்திருப்பார்!!!


அது தான் நமக்குத்தேவை... உடலுக்கு காய்ச்சல் வந்தாலும், மனதுக்கு இறைவன் தான் தேவை!


ஒரு முறை எனது சென்னை நண்பருக்காக அவசரமாக ஒரு பார்சல் தயாரித்து, மொரீசியஸில் இருந்து கொடுத்து அனுப்பி இருந்தேன்!

எனது நண்பருடைய சென்னை தொலைபேசி எண்களை கொடுத்து,சென்னை சென்று சேர்ந்ததும் அவரை அழைத்துத் தந்து விடுமாறு சொல்லி இருந்தேன்! அந்த நண்பர் கிளம்பும் நாள் காலை முதல் எனது நண்பருடைய தொலை பேசிக்கு முயற்ச்சித்து கொண்டிருந்தேன்... இணைப்பு கிட்டாமல் தவித்தேன்...

மொரீசியஸ் நண்பர் சென்னைக்கு காலையிலே சென்று சேர்வதால், எனது நண்பருக்கு தகவல் சொல்லாவிடில், அது பயனில்லமல் போகும் என்பதால் எனது முயற்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்தது...அவருக்கு குறுந்தகவல் கூட அனுப்பினேன்... சென்று சேர வில்லை!திரும்பி எனக்கே வந்து சேர்ந்தது..


கடைசியில், இரவு 12 மணி வரை தொலை பேசி இணைப்பு கிட்டவே இல்லாததால், குருவிடம் சொன்னேன்... அப்பா... நான் இதை அவரிடம் சென்று சேர்க்க நினைத்தேன்.... ஏன் இவ்வளவு தடைகள்... நீங்களே இதை பார்த்துக்கொள்ளுங்கள்; உங்களிடமே இவ்விசயத்தை விட்டு விடுகின்றேன்! என்று சொல்லி விட்டு தூங்கி விட்டேன்!

மறு நாள் காலையிலே எனது சென்னை நண்பர் எனக்கு குறுந்தகவல்(ஸ்Mஸ்)அனுப்பி இருந்தார்... நான் அனுப்பிய பார்சல் வாங்கி விட்டதாக சொல்லி இருந்தார்...

ஆச்சரியம்... எப்படி இது சாத்தியம்? அவரிடம் பேசினேன்...

அவர் சொன்னார்... எனது கைப்பேசி(மொபைல்) பேட்டரி சரி இல்லாததால், அதை அணைத்து விட்டிருந்தேன்... கனவிலே நீ என்னிடம் விமான நிலையத்தில் இருந்து பேசுவது போலவும், அவசரமாக கிளம்பி வரவும் என்று பேசியதாகவும்... விழித்துப்பார்த்தால்.. கனவு என்று புரிந்தது... இருப்பினும் யோசித்துப்பார்த்து, கைப்பேசியை மீண்டும் முயற்சித்துப்பார்த்து சரி செய்த உடன், நாம் முன் தினம் இரவு அவருக்கு அனுப்பிய தகவல் அவருக்குக் கிடைத்திருக்கிறது...

உடனே கிளம்பிச்சென்று அந்த பார்சலை பெற்றுக்கொண்டாராம்...

இதைக் கேட்டவுடன் அப்படியே குருவை நினைத்து மெய் சிலிர்த்தது...

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை...

தரத்திலே உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் .........

என்ற குருவின் வரிகள் நினைவிற்க்கு வந்தது...

ஆனந்தத்திற்க்கு அளவே இல்லாது நெகிழ்ந்து போனேன்! எனக்காக செயல்பட்டது குருவின் ஆற்றல் அல்லவா!

சில நாட்களாய் இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவ்வப்போது, உறைந்து போய் குருவிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன்...

அப்பா.... நீங்கள் உணர்த்திய சத்தியம் விரும்பியா இதெல்லாம் நடக்கிறது?

அருட்பேராற்றல் என்று உரக்க சப்தமிட்டால், அங்கே துடிக்கிற நம் இதயங்களுக்கும் கேட்கும் அல்லவா?

எங்கே சரியோ, எது தவறோ, பாதிக்கப்படுவது அப்பாவிகள் அன்றோ! இரவில் முழித்து விடியலில் கண் மலர்ந்தால், அங்கே என்னவெலாம் நிகழ்கிறதோ என்று அவரின் காலடியிலேயே கண்ணீரை விடுகின்றேன்!

வள்ளல் பெருமானே! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற வார்த்தைக்கு அந்த மக்களுக்கும் அர்த்தம் தெரியுமே! அப்பா... வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலே! உங்களின் பார்வை அங்கே வீசட்டும்... தனிப்பெருங்கருணை மலரட்டும்...


தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்!

என்ற வரிகளாய்....

இறை நிலையிலே மனதை இணைத்து... குருவே.. நீங்கள் இந்த குமுறலுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நெறியை விளங்க வையுங்கள்!

மனித சமுதாயம் உங்களின் பிள்ளைகளை நோக்கி கேள்வி கேட்கும் முன், அறத்தைப் பரப்பி அன்பும் கருணையையும் சோதியென ஒளிர அருளுங்கள்!

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment