குருவானவர் சீடன் முற்றிலும் இறையோடு கலக்கும் வரை கூடவே வருவார் என்பது அனுபவம்.
உடலை விட்டு உயிர் எழுந்து சிவ களத்திலே அடங்கி விழிப்போடு கலக்க ஆரம்பித்த போது ஏதோ ஒரு ஆற்றல் எம்மை வழி நடத்திச்சென்று கொண்டே, புலன்களை அடக்கும் கலையை போதித்துக்கொண்டே இருப்பது ஒரு பக்கமும், அறிவானது அந்த ஆற்றலைத் தொட முடியாத நிலை நீடித்தது... ஆரம்பத்திலே குருவிடம் கொண்ட சரணாகதியினால் தவத்திலே மேன்மை கிடைக்க ஆரம்பித்ததோ, அது இறையோடு கலத்தல் என்ற நிலை வரை கூடவே இருந்தது என்பதும், அறிவிற்க்கு இது வரை கேட்காத யோசிக்காத பல விளக்கங்கள் அந்த நுண்ணிய நிலையிலே கிடைக்கப்பெற்றது...
அதுவரை பேதம் கொண்டு அனுபவத்தைப் பதிவு செய்த அறிவு, அதற்க்கு பேதமில்லாது இறையோடு ஒன்றாக ஆரம்பித்த போது சொல்ல முடியாத, விளக்க முடியாத, பூரிப்பான நிலையைத் தந்து கொண்டே எம்மை இழுத்துக்கொண்டு போனது...
எம்மால் அதுவரை மட்டுமே குருவை ஏற்க முடிந்தது... அப்பாவானவர் கொடுப்பதற்க்குத் தயாராக கூடவே வந்துகொண்டே தான் இருந்தார்... ஏனோ எம்மால் தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் பேரறிவிலே இருந்து அசைந்து விட்டேன்.
எப்போது அசைந்தேனோ அப்போதே இறையிடம் இருந்து விலகி விட்டிருந்தேன்...
குருவின் அருளானது அணுகும் போதெல்லாம் பதில் தந்து கொண்டே தான் இருக்கிறது...
தவத்திலே நேற்று அமர்ந்த போது, அவரின் காலடியைத் தேடினேன்... எம்மை பாழ் நிலைக்குள் தூக்கி விட்டிருந்தார் குருனாதர்...
குருவின் காலடியைக் கூட எம்மால் தொட முடியவில்லை.
No comments:
Post a Comment