வாழ்க வளமுடன்.
இந்த நேரம் வரை அயராது நம்மைக் காத்துக்கொண்டிருக்கும் இறைவெளியிலே இடைவிடாது தம்மை இணைத்துக்கொண்டு இருக்கும் குருவின் பாதங்களிலே முனைப்பை நிறுத்தி, இக்கட்டுரையைப் படிக்கும் அனைவரும் வாழ்க வளமுடன் என்று கருணையோடு வாழ்த்துகிறேன்.
அறிவின் வளர்ச்சி பெற்ற எண்ணற்றோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... அறிவை பழக்கத்தினாலே இறைவெளியிலே லயித்துக்கொண்டிருப்போரும் இருக்கிறார்கள்...
நாம் வாழ்கிறோம்... அல்லது மடிகிறோம்... இடையில் எண்ணற்ற வேலைகள் செய்கிறோம்... ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று ஒரு கணம் அறிவை ஒன்றி அறிவிலே நிறுத்திப் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதிலே நம்மால் முடியாது... ஆனால் குரு என்ற இருப்பைக் கொண்டவர்களால் மட்டுமே தான் அந்த வாய்ப்பும் அறிவும் கிட்டுகிறது...
குருவின் வார்த்தை தான் அது... அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி என்பது...
குரு என்பவர் எப்போதும் இருப்பை தன் இயல்பாக்கிக்கொண்டவர்... அதாவது இருப்பிலே எப்போதும் இருப்பவர்...
குருவின் வார்த்தை என்பது அறிவு மற்றும் இறையை மையம் கொண்டுள்ளதால், அவரின் வார்த்தைகளும், அவரும் கூட ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னும் கூட இருப்பதாக, ஒரு பொதுமறையாக இருக்கிறது/ இருக்கிறார்....
குருவின் உதவி என்பது என்னேரமும் நமக்கு இறை நிலையை அடைய உதவுகிறது... குருவை தொடர்ந்து அணுகும் உள்ளங்கலுக்கு எப்போதும் அவரின் இருப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்...இருப்பார்...
ஏனெனில் குருவை அணுகுதல் என்பது அறிவை தூய நிலையை நோக்கிக் கொண்டு செல்கின்றது... குருவின் இருப்பு இருக்கிற அந்த இறை என்ற அறிவோடு நம்மை இணைத்துவிடும் பாலமாக எப்போதும் குரு இருந்து கொண்டு இருக்கிறார்...
ஒருவர் தன்னை இறைவெளியிலே லயிக்கிறார் என்றார் அவர் குருவை எந்த விதத்திலாவது பிடிக்காமல் போயிருக்க மாட்டார்.
இந்த பூமிப்பந்திலே எங்கே இருந்தாலும், பல இடங்களில் இருப்பவர்கள் கூட ஒரே நேரத்தில் அறிவை இறை அறிவிலே கொண்டு போய் நிறுத்தி அந்த ஆற்றலை அறிவிலே பலருக்கும் ஒரு கணத்திலே உணர்த்தும் வல்லமை கொண்டவர் குரு....
குருவோடு பழகியவர்கள் இருப்பார்கள்.... குருவை பார்த்தவர்கள் இருக்கிறார்கள்... குருவை பார்த்தும் பேச முடியாதோர் இருப்பர்கள்... குருவைத் தொடர்ந்து அணுகி அந்த ஆனந்த அனுபவத்தை தன்னுள்ளே நிரப்பிக்கொண்டு அடக்கத்தோடு இருப்போர்களும் உண்டு.. குருவைப் பார்க்காதவர்களும் தவத்திலே அமரப்போவதும் உண்டு...
ஆனால் குருவை உடல் அளவிலே பார்த்தவர்கள் மட்டும் தான் இறை வெளியை அடையும் பாக்கியம் பெற்றவர்கள் அல்ல...
நாம் எப்போது தவத்திலே அமர்ந்து இறையிலே லயித்தாலும் நமக்கு உதவுகிறார்... குருவின் இருப்பானது உடல் என்ற அளவில் இல்லை... நமது அறிவின் உயர்வில் தான் இருக்கிறது... எங்கே ஒருவர் இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நமக்கு குருவின் உதவி கிட்டுகிறது என்கிறபோது, குருவை பார்க்கவே இல்லை என்ற உணர்வைக்கொண்டவர்கள் வருத்தம் கொள்ளவோ, பார்க்கமுடியவில்லை என்ற ஏமாற்றமோ கொள்ளத்தேவை இல்லாது போகிறது...
குருவை இப்போது மனதால் அணுகினால் அதுவும் சரியான அளவில் கொண்டால், குருவின் உதவியை இப்போது கூட உணர்த்துகிறார்... ஆக நமக்கு வேண்டியது குருவை அணுகுதலும், இறை தவமும்...
குருவானவர் தொடர்ந்து பற்றுதல் தான் ஒரு வழி.. இது வாழ்க்கையிலே பல விதத்திலே நமக்கு உறுதுணையை எப்போதும் கொடுக்கும்...
குரு நம்மை விட்டு போய்விட்டார் என்றோ... இறந்து விட்டார் என்றோ கருதும் உள்ளங்கள் எல்லாம் தவம் இயற்றுவது தான் நல்லது...
இருப்பினும் எனக்குத்தெரிந்து, மன்றத்திலே பொறுப்பிலே இருப்பவர்களில் சிலர் நமது குரு நம்மை விட்டு போய் விட்டார் என்றும், இறந்த தினம் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்....
அவர்கள் கூட தவத்தை இனிமேலாவது செய்ய ஆரம்பித்து குருவின் இருப்பை தவத்திலே உணர முயற்ச்சிக்கவேண்டும்...
குரு நம்மை விட்டு போய் விட்டார் என்று எப்படி சொல்கிறார்கள் என்பது என்னை போன்ற சிலருக்கு புரியவில்லை... குரு எங்கே இருந்தார்? எங்கு போனார்? குரு என்றால் அறிவானவரா? உடல் என்ற எல்லையில் உள்ளவரா?
குரு நம்மை விட்டு போய்விட்டார் என்றால் அவர் உடல் என்ற அளவில் மட்டும் தான் இருப்பாரா? அவர் உயிர் உடலிலே வைத்திருந்த போது உடலை விட்டு தாண்டாதவர் என்று இவர்கள் சொல்கிறார்களா? இப்படி இருப்பவருக்கும் குருவுக்கும் தொடர்பே இல்லை... தவத்திலே உடலைத் தாண்டி ஒரு துளி அனுபவமும் இல்லாதவர்கள் தான் இப்படி இருப்பார்கள்...
இந்த மாதிரி சில வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்...முதலில் தவம் செய்யவேண்டும்.. முதலில் நாம் எங்கே இருக்கிறோம் என்று காண வேண்டும்... நமக்கு எல்லை உண்டா? சந்திரன் சூரியன் என்று தவம் செய்யும் போது, நாம் அறிவால் உயர்கிறோமா அல்லது உடலை பற்றிக்கொண்டு ஓடுகிறோமா?
வெறும் 20 நிமிட தவத்திலே சந்திரன் சூரியன் என்று மனப்பாடம் செய்து சொல்லிவிடுவதால் என்ன கண்டு விட்டோம்? முதலில் நம்மை உயர்த்தாத போது, உயர்ந்த குருவின் இருப்பைப் பற்றி ஒரு வார்த்தையை உதிர்க்க இவர்களுக்கு என்ன இருக்கிறது? குரு எப்படி இருந்தால் என்ன? நாம் ஒழுங்கான தவம் செய்தோமா? குருவை உணர்வால் புரிந்து கொண்டோமா என்று பார்ப்போம்...
நம்மை முதலில் புரிந்துகொள்ளாத போது, குருவைப்பற்றி சொல்ல நமக்கு ஏது அறிவு? அறியாமையிலே இருந்தால் குரு என்ன செய்வார்? இருட்டை விட்டு வெளியேற முயற்ச்சித்தால் குருவின் தொடர்பு தானகவே தேவைப்படும்... அப்போது தான் அவரும் பிடிபடுவார்... அதுவரை இருட்டிலே நின்று கொண்டு சொற்பொழிவாற்றவேண்டியது தான்...
20 நிமிடம் என்பது குறைந்த பட்சம்.... மற்ற நேரங்களில் குருவின் தொடர்பு தேவை.. அப்போது தான் உடலைத் தாண்டி உயிரை உயர்த்தி அறிவை ஒன்றி அறிவிலே நிறுத்தி குருவை உணரமுடியும்....
ஒருவர் குருவின் துணையால் உயர்ந்தால் தான், தான் உடல் அல்ல அதனையும் தாண்டிய ஒன்று என்று அறிவிலே பதிவைப் பெறுவார்.. அது வரை எல்லாம் தெரிந்தவர் போல வேஷம் தான் போட முடியும்... தான் உயர்ந்த பிறகு உடலைத் தாண்டியர் என்று உணர்ந்த பிறகு, குரு அயராமல் விழிப்போடு ஆற்றலோடு இருக்கிறார் என்று உணரமுடியும்... அப்போது தான் குருவை நம்மை விட உயர்ந்த ஒரு இருப்பு என்று சொல்லவே அறிவுக்குப் படும்... அதுவரை அவர் உடல் அளவிலே இருந்து கொண்டு குருவையும் அவரின் அறிவிற்க்கு ஏற்றார் போல, குரு (உடலால்)போய் விட்டார் என்றெல்லாம் பிதற்றுவார்...
பொய்யான ஒன்றை, தெரியாத ஒன்றை சொல்ல எவரும் கூச்சப்பட வேண்டும்... என்ன செய்வது அந்த அறிவும் கூட குருவினால் தானே வரும்! அறிவுக்கு ஒரு வகையிலும் விளக்கம் தர முடியாத ஒரு வாக்கியம் தான்... குரு நம்மை விட்டு போய் விட்டார் என்று சொல்வது... நமக்கு பிறகு வந்து சேரும் எண்ணற்றவர்களுக்கும் நம் குருவின் இருப்பை உணர்த்த வேண்டிய தருணம் இது...
எப்படி குருவை உணர்வது என்பதை புதியவர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது....
எட்டவில்லை அறிவிற்க்கு என்றால்..
உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்.... என்று குரு ஒரு கவியிலே சொன்னார்....
சோதிப்போர் புலன் அறிவால் என்னைக் காணார்...
அறிவிலே தோய்ந்தால் அவர் நான் ஒன்றே என உணர்வார்... என்றும் நம் குரு சொன்னார்....
இது சத்திய வரிகள்.... மீறிச் சென்றால் குருவை விட்டு விலகி விடுவோம்.. விலக்கப்படுவோம்... குருவை அண்டுங்கள்.... இணைய முயற்ச்சி செய்து குருவை அடயுங்கள்... இணையவே முயற்ச்சிக்காத போது குரு பிரிந்து போய் விட்டார் என்று சொல்ல நமக்கு ஏது...?
பிரிவு என்றால் இரண்டு.... குரு என்றால் ஒன்று.... இருப்பும் குருவும் நானும் ஒன்றே என்று உணராத வரை குருவைப் பற்றி கண்டதை பரப்பி அந்த பாவத்தை சம்பாதித்துக்கொள்ளவேண்டாம்... எண்ணற்றவருக்கு குருவிடம் கொண்டு போய் நிறுத்தும் கடமை நமக்கு உண்டு. நம் அப்பா சாதாரணமானவர் அல்ல.... இனியும் அந்த பிரிவு என்ற சொல்லை சொல்லாதீர்கள்... பிரிந்து இருப்பது நாம் தான்...
குருவிடம் போய் நின்றால் விலக்கி விட யார் உண்டு... தடை ஏது?
குரு நமக்கு நிறைய தந்து இருக்கிறார்/ தருகிறார்.... ஆனால் வாங்கிக்கொள்ள முன் வருபவர்கள் குறைவு... இது நம் நிலை...
குருவின் இறை உணர்வை/ கவிகளை அப்படியே அவரைப்போன்றே உணர்ந்து ஆனந்தப்படும் பிள்ளைகளை பார்க்க குரு தயார்... பிள்ளைகள் எங்கே? தயாரா?
பிரிவு எல்லாதபோது, கற்பனை செய்து கொண்டு கானல் நீரைப் போன்று ஞானத்தை வைத்துக்கொண்டு காலம் கழிக்காமல் குருவின் இருப்பை உணர முயற்ச்சிப்போம்...
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment